சாலை பாதுகாப்பு வாரத்தின் இந்த ஆண்டு ஸ்லோகன் "life is safe; if driving is safe"
நமது சார்பாக சில தகவல்களும் , சிந்தனைகளும்:
23.04.2007 இல் சுமார் 100 நாடுகளில் இருந்து இளைஞர்கள் கூடி ஜெனீவா, ச்விட்சேர்லாந்தில் சாலை பாதுகாப்பு பற்றி விவாதித்தார்கள்.
விபத்துக்களில் அதிகம் இறப்பது இளைஞர்களாகவே இருக்கிறார்கள். அதற்கு காரணம் வேகமாக செல்வது, குடித்து விட்டு செல்வது, ஹெல்மெட் அணியாமல் போவது இன்னும பல ;இன்னும பல.
தலைக் கவசம் !
தலையாய அவசியம்!!
வெளி நாடுகளில் வெவ்வேறு வேகங்களில் செல்பவர்கள்வெவ்வேறு வழிகளில் செல்வார்கள். நம்ம ஊரிலும் ஒரு இடத்துக்கு போக பல வழிகள் இருக்கு . இங்கேயும் ஒரு trial பார்க்கலாம். குறிப்பிட்ட பாதைகளில் குறிப்பிட்ட வேகத்தில் தான் செல்ல வேண்டும் என விதிகள் வைக்கலாம். அதில என்னென்ன சிக்கல் வரும்னு எனக்கு தெரியல. இருந்தாலும் முயற்சி செய்து பார்க்கலாம். விபத்துக்களுக்கு முக்கிய காரணமே நம் முன்னே செல்பவன் என்ன வேகத்தில் செல்வான் என நாம் நினைப்பதற்கும் அவன் செல்லும் வேகத்திற்கும் அதிக வேறுபாடு வருவதே .
அடுத்து " ஆட்கள்வேலை செய்கிறார்கள்" கம்புகளில் சிவப்பு கொடி பறந்தாலும் நாம் கவனிக்கிறதில்லை. ரெண்டு நாள் முன்னால HINDU நெல்லை edition ல ஒரு photo. "ground reality" போட்டு ஒரு குழியில் கவனத்தை ஈர்க்க வைக்கப்பட்ட கொடி குடை சாய்ந்து கிடப்பதையும் எல்லோரும் அதை சுற்றி செல்வதையும் எந்த புண்ணியவானோ போட்டோ எடுத்து போட்டிருந்தான். சுற்றி செல்பவர்களில் இரவில் திரும்பும் யாரோ கூட அதில் விழ வாய்ப்பிருக்கிறது. ஏன் சிந்திக்க மாட்டேன்கிறோம் ?பல இடங்களில் ஒரு விபத்தை நாம் கடந்து சென்றாலும் அதற்கு ஒரு நொடி பார்வை தான் செலவிடுகிறோம். அவசர வேலைகள் இருக்கும். இல்லாத நேரம் சில மணித் துளிகள் செலவிடலாமே. ?
"அதெல்லாம் சரி, அது இன்னாமே உனக்கு இத்தினி கன்செர்ன்னு?"னு கேட்கிறீங்களா? இருக்கே!
31.12.2009 அன்னைக்கு நிறைய பேர் நான் அவரப் பார்த்தேன் இவரப் பார்த்தேன் ரீலாவும் ரியலாவும் பதிவு போட்டுட்டு இருந்தாங்க. நானும் ஒரு முக்கியமானவரை கடந்த ஆண்டு பார்த்தேன். அவர் பெயர் விபத்து. மார்ச்ல அலுவலகப் பணி அதிகமா இருந்ததால இரவு 8.00 க்கு இரு சக்கர வாகனத்தில போயிட்டிருந்தேன்.
எனக்கு வீட்டில் உள்ள வேலைகளை நினைத்து அவசரம். அடுத்து வந்த அம்பாசிடரில் சில விடலைகள். இவளுக்கு என்ன இந்த நேரத்தில் இவ்வளவு வேகம்னு நினைத்தார்களோ என்னவோ தட்டிட்டு போய்ட்டாங்க. நான் நினைவு இழந்த நிலையில் என் அலுவலக பணியாளர் ஒருவர் பார்த்து உரிய நடவடிக்கை எடுத்தால் இன்று ப்ளாக் போட்டு உங்களை படுத்திட்டு இருக்கேன். இப்போ எங்க கூட்டமா இருந்தாலும் சில நொடி செலவழித்து பார்த்திட்டு போறேன் . போலீஸ் மாமா " என்ன வேடிக்கை னு "போங்க போங்க " னு விரட்டினாலும் விடுறதில்லை.
வாகனத்தில போறது தான் சிரமம்னு பார்த்தா இந்த சாலை பாதுகாப்பு பதிவு போடுறதுக்குள்ள நான் பட்ட பாடு. Auto save always failed .
அப்பறம் ஒரு ஐடியா காலையிலேயே ஓசோன் காற்றை சுவாசிக்க போற மாதிரி எல்லோரும் பதிவு உலகத்தை பிடிக்கும் முன்னே நாம போட்டிருவோம்னு. இதோ இப்போ போட்டாச்சு. புத்தாண்டின் முதல் பதிவு ரொம்ம்ம்ப சிரமப் பட்டு போட்டிருக்கேன். பாப்ப்ப்போம் ( வடிவேலு பாஷையில பதிவு போடுறது ரொம்ப சுலபம்னு நினைக்கிறேன் எதாவது ஒரு எழுத்தை நிறைய தடவை போட்டா போதும்.)வர்ர்ர்ரட்டா .
ஆனா படிக்கறவங்க அத பாப்பாக்கு தமிழ் தெரிலன்னு சொல்லிடுவாங்க... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...
ReplyDelete//ஏன் சிந்திக்க மாட்டேன்கிறோம் ? //
ReplyDeleteநம்ம மக்கள் எல்லோரும் சிந்திக்க ஆரம்பிச்சா எப்பவோ நாடு திருந்தியிருக்கும் நண்பா !
சிந்திக்க தேவையான 'அது' தலையில் இருந்தும் இல்லாமல்ல இருக்கு :)
புத்தாண்டு வாழ்த்துகள்
ReplyDeleteதார்மீக உணர்வு மிக்க இடுகை
//அப்பறம் ஒரு ஐடியா காலையிலேயே ஓசோன் காற்றை சுவாசிக்க போற மாதிரி எல்லோரும் பதிவு உலகத்தை பிடிக்கும் முன்னே நாம போட்டிருவோம்னு//
ரசனையான மனசு
நன்றி அண்ணாமலையான் !
ReplyDeleteநன்றி பூங்குன்றன் !
தங்கள் வரவு நல் வரவு ஆகுக நேசமித்திரன்
உங்கள் பின்னூட்டம் என்னை உற்சாகப்படுத்தியது நன்றி
NANDRI NAAIKITTI.
ReplyDeleteNALLA AARAMBAM.
VALLTHUKKAL.
ROAD VIBATHU INNUM UNNAI PADUTHUDHU.
SUYA PAADHUKAPPU ROMBA MUKKIYAM.
nallathan erukku aana!ellarum athai kadaipidikkanum... neegalumthaan....
ReplyDeleteஇந்த பதிவோட முக்கிய எண்ணம் யாரும் அடிபட்டு இருந்தா பார்க்காம போய்டாதீங்க என்பது தான். அதை நான் கண்டிப்பா கடைப்பிடிக்கிறேன் jeyasrimahi தங்கள் முதல் வருகைக்கு நன்றியும் வாழ்த்தும்
ReplyDeleteநன்றி போன்ஸ்
ReplyDeleteசுய பாதுகாப்பை மீறியும் சில விபத்துக்கள் நடப்பதை ஒத்துக்கிறீங்களா?
ஆண்கள் யோசிக்க வேண்டிய விஷயம் ஒரு பெண் வேகமாக வாகனத்தில் போனால் அது திமிர்த்தனமல்ல. அதையும் தாண்டி பல காரணங்கள் இருக்கலாம்.