Bio Data !!

04 February, 2010

கவிதைகள்

ஐந்து ரூபா நாணயம்.

கவனமற்றவர்களிடம்

ஐம்பது பைசாவாகவும்

கவனமுற்றவர்களிடம்

ஐந்து ரூபாவாகவும்

மாறி மாறிப் பயணிக்கிறது

புதிய ஐந்து ரூபா நாணயம்.

எல்லைப் போர்

இரு வீட்டுப்

பெண்களுக்கிடையே யான

எல்லைப் போரில்

பெருக்கப் படாமலே கிடக்கிறது

கோமணத்துண்டாய்

கொன்றைப் பூக்கள்

காய்ந்து நிறைத்த

முற்றம்

ஆட்டோவில எல்லாம் வரக் கூடாது. இது புதுக்கவிதை, எப்படி வேணுமானாலும் எழுதலாம். ஆம்ம்மாம் .

6 comments:

  1. ஐந்து ரூபாய் நாணயத்தால் எங்காவது ஏமாற்றப்பட்டீர்களா

    ReplyDelete
  2. இல்லை தமிழ், நான் கொடுக்கும் ஐந்து ரூபாய், ஐந்து ரூபாயயாகவே
    பயணிக்க வேண்டுமே என்ற கவலை தான்.

    ReplyDelete
  3. //ஆட்டோவில எல்லாம் வரக் கூடாது. இது புதுக்கவிதை, எப்படி வேணுமானாலும் எழுதலாம். ஆம்ம்மாம் . // ஹாஹஹா..

    அடுத்து கவித களத்துல குதிச்சாச்சா.. ரைட்டு...
    இனி எங்களுக்கு டெப்பாசிட் கிடைக்குமோ என்னவோ..??

    ReplyDelete
  4. நன்றி சிவா,
    கான மயிலாட கண்டிருந்த வான்கோழி பார்த்திருக்கீங்களா?
    இல்ல கேட்டேன்.

    ReplyDelete
  5. தங்கள் வரவு நல்வரவு ஆகுக தேனம்மை லக்ஷ்மணன்

    ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!