கடந்த வார நெல்லைச் செய்திகள் :
நெல்லை ஆட்சியாளர் திரு ஜெயராமன் பிரதம மந்திரியிடம் இருந்து விருது வாங்கி இருக்கிறார். கடந்த ஆண்டு நாகப்பட்டினம் ஆட்சியாளராக இருந்த போது கிராமத்தில் வேலையின்மையை நீக்க அரசால் ஒதுக்கப்பட்ட எழுபது கோடி ரூபாயை 'முழுமையாக' அது தரப் பட்ட நோக்கத்திற்காகவே செலவழித்தற்க்காக
வாழ்த்துக்கள் !! நெல்லை உங்களிடம் நிறைய எதிர்பார்க்கிறது ஐயா !
தமிழ் மொழிக்கு சிறந்த மணிமகுடம் சூட்டிய மாமேதை கால்ட்வெல்லுக்கு நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள இடையன்குடியில் அவர் வாழ்ந்து மறைந்த இல்லத்தை சீர்படுத்தி நினைவு இல்லமாக அமைக்க முதல் அமைச்சர் உத்தரவிட்டார்.
மாமேதையின் பெயர் மழலைகளுக்கும் மறந்து விடாமல் இருக்க இது உதவும். வாழ்த்துக்கள் கலைஞர் அவர்களே!
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தின் மனோ மீடியா கிளப் " கரிசல் திரை விழா 2010 " பல்கலை கழகத்தில் நடத்தியது. சிறப்பு விருந்தினராக இம்ரான் சக்கரவர்த்தி (ரேணிகுண்டா நாயகன்) மாணவர்களுடன் உரையாடினார். மாநிலம் முழுவதும் இருந்து வந்த communication துறை சார்ந்த மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தி பரிசுகளும் கொடுத்தனர்.
வாங்க வாங்க மாணவர்களே ! வரவேற்கிறோம் !
நெல்லையில் St. Johns கல்லூரியில் படித்தவர்கள் மறக்க முடியாத வெண்கலக் குரலுக்கு உடைமையான திரு . வளனரசு பேராசிரியர் ஓலைச் சுவடி வடிவில் எழுதிய திருக்குறள் உரை நூலை காங்கிரஸ் MLA திரு வசந்த குமார் வெளியிட்டார்.
வளனரசு ஐயா மறக்க முடியுமா உங்கள் தமிழும் , உங்கள் குரலும்.
நன்றி..
ReplyDeleteநன்றி அண்ணாமலையான்!
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி..
ReplyDeleteசிறுகதை போட்டியில் வென்றதற்கு வாழ்த்துக்கள் நாயக்குட்டி மனசு
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி சிவா,
ReplyDeleteநன்றி தமிழ் உதயம், எனக்கு உங்கள் கதையும் ரொம்ப பிடித்திருந்தது. பரிசு கிடைத்ததை இன்னும் நம்ப முடியவில்லை.
நெல்லைச்செய்திகள் அருமை சிறுகதைப்போட்டியில் வென்றதற்கும் வாழ்த்துக்கள் நாய்க்குட்டி மனசு
ReplyDeletenandri thenammailakshmanan
ReplyDelete