Bio Data !!

19 February, 2010

யாமா

ஜெகாதா எழுதிய சிறு கதை ஒண்ணு ஏற்கனவே கதை விமர்சனத்தில எழுதி இருந்தேன். அது என்ன ஜெகாதானு நினைத்தேன். அது "ஜெகாந்தனின் தாசன்" ஆஹா! அவர் தமிழில் மொழி பெயர்த்த "யாமா" வாசித்தேன். வித்தியாசமான கதை. ரஷியாவில் உள்ள ஒரு விபச்சாரத் தொழிலுக்குப் பிரசித்தி பெற்ற இடம் பற்றிய கதை.

அங்குள்ள பெண்களைப் பற்றி கூறும் பொது " பாலியல் நோயால் தீர்ந்து போன மூக்கோடும் கந்தல் துணி யணிந்து , உமிழ் நீரால் சிகரெட் அட்டையின் சிவப்புச் சாயத்தை உதடுகளில் பூசிய படி காத்திருக்கும் அவலம் " என்கிறார். அவலத்தின் அப்பட்டமான வெளிப்பாடு.
படுக்கையில் படுத்த படி அலெக்சாண்டர் டூமாஸ் படிக்கும் விபச்சார பெண்.
பப்ரமென்ட் சப்பிக்கிட்டு வீட்டுக்கு சாமான் வாங்கக் கொடுத்த காசில் மிச்சம் பண்ணி குட்டி கிட்ட வந்த பொடியன்.
பொங்க பொங்க பொறாமையும் எரிமலைக் குமுறல்களும் நிறைந்த மலக் கிடங்கில் அபூர்வமாக மலரும் காதல்.
இப்படி பல கதைப் பாத்திரங்கள் ஒவ்வொரு நாளும் அலங்காரம் செய்து தொழிலுக்குப் போகுறப்போ ஏதாவது அற்புதம் நிகழ்ந்து விமோசனம் கிடைக்காதா என எதிர்பார்க்கும் பெண்கள். யாரும் எதிர்பாராத நேரத்தில் திடுமென்று மாணவர்களும் ஒரு உதவிப் பேராசிரியரும் எதிரொலி எனும் பத்திரிகை நிருபரும் விடுதிக்குள் நுழைகின்றனர். ......என்ன நடந்தது. வெள்ளை திரையில் காண்க.
ஒருத்தி அங்கு நாட்டியமாடிக் கொண்டிருக்கிறாள். அவள் ஆடையை வர்ணிக்க வேண்டும் என்றால் நிர்வாணமாக இருந்ததாகக் கூற வேண்டும். அவள் ஆடலும் அழகும் ஒரு மலைவாசியை திணறடித்தது. திடீர் அலறலோடு உள்ளே நுழைந்தவன் அவள் ஆடைகளைக் கிழித்து அங்கு கூடியிருந்த ஏறக்குறைய யோக்கியமானவர்கள் கண் முன் அந்த பெண்ணை நாசம் செய்து விட்டான்.
போலீசார் வந்து அவனைப் பிடிக்கிறப்போ "என்னை இழுத்துச் செல்லுங்கள் தண்டனை கொடுங்கள். ஆனால் அதற்கு முன் அவள் எதற்காக அரை நிர்வாணமாக ஆடினாள் எனக் கேளுங்கள். " என்கிறான். நியாயமான கேள்வி. இன்றைய இளம் பெண்கள் பலரிடம் கேட்க வேண்டிய கேள்வி.

இப்படி அருமையாக போகிறது கதை. எனக்கு இதில் எதிர்மறையாய் தெரிந்த விஷயம் ருஷ்யப் பெயர்கள் அதிகமாய் வருவதால் எந்தப் பெயர் யாருக்கு உரியது என்று தொடர்வதில் கொஞ்சம் குழப்பம் .
இருந்தும் வித்தியாசமான நாவல். அங்கங்கே "நாயகன்" நினைவு வருவதை தவிர்க்க முடியவில்லை. கிடைச்சா கண்டிப்பா படிங்க.

12 comments:

  1. நீங்கள் ரஷ்ய நாவல் பற்றி சொன்னதால் சொல்கிறேன். ரஷ்ய நாவல்கள், நம் ஊரில் முன்பு நிறைய விற்பனை ஆகின. பெரும்பாலானவை இரண்டாம் உலகப் போரை மையமாக வைத்து எழுதப்பட்டவை. கிடைத்தால் படித்து பாருங்கள். அது ஒரு விதமான அனுபவத்தை தரும்.

    ReplyDelete
  2. படிக்கிறேன் தமிழ், தகவலுக்கு நன்றி. கொஞ்ச வருஷம் முன்ன நான் வாசித்த "தாய்" நாவலும் எனக்குள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

    ReplyDelete
  3. நல்ல பகிர்வு செல்லனாய்க்குட்டி மனசு
    ரஷ்யக் கதைகள் எப்பவுமே நல்லா இருக்கும் நீங்க சொல்வது போல பேர்தான் குழப்பம்

    ReplyDelete
  4. நல்ல பகிர்வு.. வாய்ப்பு கெடைச்சா படிக்கிறேன்..
    உங்களோட பெயர் தெரிஞ்சா நல்லா இருக்கும்..
    தப்பா எடுத்துக்காதீங்க.. நாய்க்குட்டி'ன்னு கூப்பிட கொஞ்சம் சங்கோஜமா இருக்கு..

    ReplyDelete
  5. நன்றி மணிகண்டன். சில சூழல் பதிலுக்கு கால தாமதம். பெயர் உங்கள் நண்பன் மூலம் சொல்லி இருக்கிறேன். கிடைத்திருக்குமே.

    ReplyDelete
  6. இன்னும் இல்லையே... யாருங்க அந்த நண்பர்?

    ReplyDelete
  7. அன்புடன்-மணிகண்டன் said...
    //யாருங்க அந்த நண்பர்?//

    நாந்தேன்... தல.. :)

    ReplyDelete
  8. ரெம்ப தாமதமாயிடிச்சி.. நல்லா பகிர்வு... :)

    ReplyDelete
  9. உங்க பகிர்வே... படிக்கத்தூண்டுகிறது..... தமிழில் கிடைத்தால் படிப்பேன். (ஆங்கிலம் தெரியாதுங்க)

    பகிர்வுக்கு நன்றிங்க.

    ReplyDelete
  10. நன்றி சிவா, பேரு சொன்னீங்களா இல்லையா.

    ReplyDelete
  11. கருணாகரசு, தமிழிலேயே இருக்கு, ஆசிரியர் பெயரை குறித்துக் கொள்ளுங்கள். அவருடைய எல்லா கதையும் வித்தியாசமா இருக்கு.

    ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!