Bio Data !!

31 March, 2010

சந்தேகக் கேடு - பாகம் 3

தனக்குத்தானே தைரியம் சொல்லி ரேடியோவை ஆன் செய்து பிரம்பு ஊஞ்சலில் சாய்ந்து மெல்ல ஆடிக் கொண்டே சிந்தனையிலிருந்து விலக முயற்சித்தாள்

எதோ கனவு வந்து திடுக்கிட்டு எழுந்து மணியைப் பார்த்தாள். ஆறைக் கடந்திருந்தது. தனது நீண்ட கூந்தலை சீவ ஒரு மணி நேரம் எடுப்பாள் திருமணத்துக்கு முன். அம்மா சொல்வா "உன்னை மாதிரி ஒவ்வொரு முடியா சீவ முடியாதுடி. நீ அக்கறையா பார்த்துக்கிறதால தான் அதுவும் கைக்கு அடங்காம வளருது."
தலை சீவி முகம் கழுவி பொட்டு வைத்தாள். உற்சாகமானாள்.
நம்ம கையில தான் இருக்கு, சரி செய்திடலாம

மாலையில் நவீனும் அதிக உற்சாகத்தோட வந்தான். வாங்கி வந்த பத்து முழம் மல்லிகைப் பூவையும் தானே வைத்து விட்டு அவளை அணைத்து " உன் வாசத்தோட பூ வாசமும் சேர்ந்து ம்ம்ம்ம் சும்மா கும்ம்னு இருக்குது." என்றான்.
சுடச் சுடக் கொண்டு வந்த காபியைக் குடித்தான். விசில் அடித்தவாறே டிவி முன் அமர்ந்தான். ரொம்ப உற்சாகமாக இருந்தான். கவி அந்த உற்சாகம் தன்னைச் சார்ந்ததாகவே நினைத்துக் கொண்டாள்.
இரவு படுக்கையில் பயந்து கொண்டே ' ஏங்க, வீட்டைப் பூட்டிட்டு போகாதீங்க, எனக்கு பயமா இருக்குது." என்றாள்.
அவளை இறுக்கி அணைத்து கன்னத்தில் முத்தமிட்டபடி" நான் செய்தால் எதுவும் சரியாத்தான் இருக்கும்னு நம்பு. ஒரு பிரச்சினையும் இல்லை. சரி இப்போ தூங்கு." என்றான்.
அவளும் நம்பினாள். அப்படியே சில காலம் போனது.

அன்று மாலை ஜன்னலில் சாய்ந்தபடி சாலையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். நவீன் வர இன்னும் எப்படியும் ஒரு மணி நேரம் ஆகும்.
வடைக்காரர் உளுந்த வடைக்கு ஓட்டைப் போட்ட படியே " எப்படி கண்ணு இருக்கிற? "
"நல்லா இருக்கேன் அண்ணே."
"தம்பி உன்னை நல்லா வைச்சிருக்குதா?"
"அதுக்கென்ன அண்ணே ராணி மாதிரி இருக்கேன்."
"தம்பிக்கு வேலை எங்கே தென்காசியா?"
"ம்ம்ம்"
" ஒண்ணு சொல்றேன் தப்பா எடுத்துக்காத கண்ணு. தம்பி வேலை பார்க்கிற காலேஜ் ல தான் எனக்குத் தெரிந்த பையன் படிக்கிறான். அங்கே படிக்கிற ஒரு பெண்ணிட்ட தம்பி ரொம்ப நெருக்கமா இருக்கிறதா சொல்றான். தகவல் தப்பாவும் இருக்கலாம்,..."
திடீரென்று பேச்சை நிறுத்தினார், "என்ன அண்ணே, வந்தோமா வடை போட்டோமான்னு இல்லாம பொம்பளப் பிள்ள கிட்ட பல்லப் பல்ல காட்டிகிட்டு என்ன பேச்சு?" நவீன் நின்று கொண்டு இருந்தான்.
"இல்ல தம்பி, பாப்பாவுக்கு வடை வேணுமான்னு கேட்டேன்"
நவீனின் கோபம் கதவைத் திறப்பதிலேயே தெரிந்தது. "பாவி அந்த பிள்ளைய என்ன பாடு படுத்தப் போறானோ தெரியலையே?" முணுமுணுத்துக் கொண்டார்.

வந்தவன் தன் கையில் இருந்த பையை விசிறி அடித்தான்.
கவி நடுங்கினாள்.
அவள் ஒற்றைக் கையை அழுத்திப் பிடித்தபடி அடுத்து இருந்த அறைக்கு இழுத்து வந்தான். " உன்னிட்ட எத்தன தடவ சொல்லி இருக்கேன். யாரிடமும் அதிகம் பேசாதேன்னு. என்ன கேட்டான் அந்த வடைக்காரன்?"

'எங்கே வேலைப் பார்கிறீங்கன்னு?'
வடைக்காரர் சொன்ன செய்தி தந்த குழப்பத்த மீறி தன்னை தவறுதலா புரிஞ்சிடக் கூடாதே என்ற பதற்றத்தில் குளறினாள்.

"என்னது, எங்கே வேலை பார்கிறேனா? என்னிட்ட வடை வேணுமான்னு கேட்டேன்னு சொன்னான். என்னடி நாடகம் போடுறீங்க ரெண்டு பெரும். நான் போனதும் ஜன்னல் வழியா நாடகம் நடத்துறியா? " இன்னும் பேசினான். பேசினான் என்று சொன்னால் அந்த வார்த்தை முறைத்துக் கொள்ளும். உளறினான். அவன் பேசியது அவளுக்கு விளங்கவில்லை. மொத்தத்தில் ஒரு தொழில் புரிபவளைப் போல கேவலப் படுத்தினான்.
'நீ சரிப்பட மாட்டே' அவளை ஒற்றைக் கையைப் பற்றி தர தர வென இழுத்து ஒரு சின்ன ventilator மட்டும் இருந்த அறைக்குள் தள்ளினான். அவள் புடவையை உருவி எடுத்தான். (என்றுமே அவளை nighty போடஅனுமதித்ததில்லை.)

'ரெண்டு நாள் பட்டினி கிடந்தா எல்லாம் சரி ஆகும்' னு உறுமிக் கொண்டே கதவை அறைந்து சாத்தி வெளியே பூட்டினான்.

அங்கே தான் கடவுள் வைத்தான் நவீனின் செயல்களுக்கு முற்றுப் புள்ளி.
அதிர்ச்சியில் உறைந்திருந்தாள் கவி . 'என்னைப் போலவே இன்னொரு பெண்ணும் நாசமாகப் போகிறதா? ஐயோ அடுத்த பெண்ணைப் பற்றிக் கவலைப் படுகிறேனே. என் வாழ்க்கையே நாசம் ஆயிடுச்சு போலிருக்கே. அவன் தன்னைப் பற்றிக் கூறிய வார்த்தைகள் அவள் மேல் மலத்தை அள்ளி கொட்டியது போலிருந்தது. என்ன செய்யப் போகிறேன். எப்படி இதிலிருந்து மீளப் போகிறேன்.'

அந்த அறை பழைய சாமான் போட்டிருந்த அறை. எழுந்து தடவித் தடவி அந்த அறையின் சுவிட்ச் ஐப் போட்டாள். 'வீலென்று அலறினாள்.'
அறை முழுவதும் கரப்பான் பூச்சிகள்.
வெளியே நவீனின் சிரிப்பு சத்தம். ' என்ன கரப்பான் பூச்சி கதை பேசுதா? அடடா சேலையை வேற உருவிட்டேனே? யோசிடி யோசி , நான் சொல்வதை மீறி நடந்தால் என்ன நடக்கும்னு நல்லா யோசி. '

(இன்னும்)

12 comments:

  1. சைக்கோ க‌தை ந‌ல்லாவே போகுது..அடுத்த‌ பாக‌த்திற்கு வெயிட்டிங்

    ReplyDelete
  2. நன்றி நாடோடி, அதிக பட்ச கோபமும், அதிக பட்ச சந்தேகமும் ஒரு வித சைக்கோத் தனம் தான் என்பதை சிலராவது புரிந்து கொள்ள வேண்டும் என்பது தான் கதையின் நோக்கம்.

    ReplyDelete
  3. ரைட்டு இல்லை அண்ணாமலையான், நவீனின் செயல் சரி இல்லை தானே. நன்றி

    ReplyDelete
  4. இப்படியும் சில மனிதர்கல்.. சீக்கிரம் அடுத்த பார்ட் எழுதுங்க

    ReplyDelete
  5. காலையில் உங்கள் வலைத்தளத்தில் ஒன்றுமே தெரியல. இப்பத்தான் கதை தெரியுது. என்ன கோளாறு.

    ReplyDelete
  6. பார்வையாளன் உங்கள் ஆர்வத்துக்கு நன்றி

    ReplyDelete
  7. இந்த நவீன் பண்ற அநியாயத்தை சொல்றத்துக்குள்ள என்னெல்லாம் கஷ்டப் பட வேண்டி இருக்குது தமிழ், by mistake the letter colour was changed to black and the back ground of the blog also black , that is the problem , noticed and changed the colour. இப்போ கலருக்கும் கதையில பங்கு கொடுத்துடலாம்னு நினைக்கிறேன். நன்றி

    ReplyDelete
  8. க‌தை அடுத்த‌ கிய‌ர்ல‌ எகிறுது...வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் பார்ட் :)

    ReplyDelete
  9. அடுத்த பார்ட் வந்திட்டே இருக்கு ரகு.

    ReplyDelete
  10. கடைசியில் நல்ல நீதி வழங்கி விட்டீர்கள் செல்ல நாய்க்குட்டி மனசு

    ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!