Bio Data !!

15 April, 2010

அங்காடித் தெரு - என் மொழியில்

வசந்த பாலன் 'வெயிலின்' மூலம் கவர வைத்தவர், அங்காடித் தெரு என்னும் அழகான படத்தின் மூலம் 'பச்சக்' என்று ஒட்டிக் கொண்டார்.

ஒரு தீபாவளிக்கு முன் தினம் என் தோழி தி.நகர் பார்க்கலாம் வான்னு அழைத்துச் சென்றாள். ரயில்வே நிலையத்தில் நின்றே அந்தக் கூட்டத்தைப் பார்த்து விட்டு அப்படியே ரயில் ஏறி விட்டேன். 'இப்படியே கீழே இறங்கினால் போதும் கூட்டமே தள்ளிட்டு போயிடும். எந்தக் கடைக்கு போகணுமோ அங்கே திரும்பினால் கடைக்குள்ள போயிடலாம்னு' ஜோக் வேற அடிக்கிறா.

shopping ங்கறது அனுபவிச்சு செய்ய வேண்டிய ஒன்று. அதை இவ்வளவு நெருக்கடியில் எப்படி அனுபவிக்கிறீர்கள் சென்னை வாசிகளே?

இப்போ main track வந்திடுவோம்.

சாதாரணக் கதை நாயகன் மகேஷ். நம்மில் பலர் இந்த வகையில் வருபவர்கள் தான். அதனால் சுலபமாக நாயகனோடு பொருத்திப் பார்க்க முடிகிறது. Proximity . தனக்கு மிக நெருங்கிய வட்டத்தில் இருப்பவர்களோடு உறவு தொடங்கும். அதில் அழுத்தம் இருந்தால் அது காதலாகும். இங்கும் அதே போல் சுற்றி இருக்கும் சிக்கல்களால் காதல் அழுத்தமாகிறது.

காதலிக்கும் பெண் கொடுக்கும் கடிதத்தால் மாட்டிக்கொள்ளும் போது வேலை போய் விடுமோ என்ற அச்சத்தில் அவளை மாட்டி விடுவதும், அந்த அவமான அதிர்ச்சி தாங்காமல் மிரண்ட கண்களுடன் புலம்பிக் கொண்டே கண்ணாடி உடைத்து மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்யும் பெண் மனதை விட்டு நீங்க பல நாள் ஆகும் நிச்சயம்.

supervisor ஆக வரும் இயக்குனர் A. வெங்கடேஷ் அண்ணாச்சியின் மிரட்டலுக்கு பணிவதும் பணியாளர்களை மிரட்டுவதும், பெண் பணியாளர்களிடம் அத்து மீறுவதும் ஆக நடிப்பில் மிரட்டி இருக்கிறார். அந்தக் கண்ணாடி அவருக்கு கூடுதல் மிரட்சி.

ஒரு பெண் பெரியவள் ஆனதும் பெற்றவர்களுக்கே ஒரு நிமிடம் மிரட்சி ஏற்படும். அதிலும் நிராதரவாக உள்ள நிலையில் தன் தங்கை பெரியவளான விஷயம் தெரிந்ததும் தெருவில் நின்று அஞ்சலி புலம்புவது அக்மார்க் வகை. அங்கு மகேஷ் இன்னும் கொஞ்சம் நடிப்பைக் காட்டி இருக்கலாமோன்னு தோணுது.

K. பாலச்சந்தரின் படங்களில் தான் சின்ன சின்ன கதாபாத்திரங்கள் கூட நினைவில் பதிவார்கள். அதே முக்கியத்துவம் இந்தப் படத்திலும். ஆனால் அதுவே சில இடங்களில் சரியாக ஒட்டப்படாத கவர் போல் பிரிந்து நிற்கிறது. தன் குழந்தை தன்னைப் போலவே குள்ளனாக பிறந்து விட்டதே என்று அழுது செல்லும் மனிதனும் அதைத் தொடர்ந்த காட்சிகளும் கதையோடு ஒட்டாமல் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கிறது.

வெயில் படத்தில் நாயகனும் நாயகியும் operator அறையில் மாட்டிக் கொள்வதைப் போலவே இங்கும் ஒரு நிகழ்வு. ஆனால் எங்கு மாட்டுவார்கள் என்று நாம் எதிர்பார்ப்போமோ அங்கு தப்ப வைத்து அண்ணாச்சியிடம் மாட்டுவது போல் காட்டி இருக்கிறார்கள். சினேகாவின் CD கொண்டு வரச் சொல்கிறார் அண்ணாச்சி. அதில் கடையை அடைத்த பிறகு வரும் ஆடல் பாடல் வருவது ஒரு உறுத்தல். 'அழகழகா விதவிதமா ரகம்ரகமா' வரும் பாடல்களுக்காக அதை மன்னித்து மறந்து விடலாம்.

சிறப்பான ஒளிப்பதிவு . தன் திறமையை காட்டுவதற்காக தி.நகரில் அங்கங்கே காமரா பொருத்தி தான் எடுத்த காட்சிகளை 'இது தான் எனக்கு வேண்டியது' என்று இயக்குனர் அதை அப்படியே படத்தில் சேர்த்து விட்டதாக ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒளிப்பதிவாளர் கூறி இருந்தார். அது படத்தின் இயல்புக்கு இன்னும் ஊட்டம் சேர்த்து விட்டது

சின்ன சின்ன குறைகள் தவிர்த்து தான் காதலித்த பெண்ணை இரு கால்களும் இழந்த நிலையிலும் ஏற்றுக் கொண்ட துணிச்சலுக்கும் அங்காடித் தெருவிலேயே ஒரு அங்கமாய்ப் போய் தம் வாழ்க்கையை தொடங்கும் நம்பிக்கைக்கும் தட்டிக் கொடுக்கலாம்.

செந்தில் முருகன் ஸ்டோர்ஸ் ஒரு தீ விபத்தில் அழிவது போலவும் அதில் அண்ணாச்சியும் சுப்பர்வைசரும் 'மட்டும்' மாட்டிக் கொள்வது போலவும் காட்டி இருந்தால் அநியாயத்துக்கு ஒரு அழிவு உண்டு என்று கதையோடு தன்னை ஒன்றிப் பார்த்தவர்கள் சந்தோஷப் பட்டிருப்பார்கள்.

அங்காடித் தெரு டீமுக்கு ஒரு சபாஷ்.

24 comments:

  1. அங்காடித் தெரு டீமுக்கு ஒரு சபாஷ்.

    ...... நல்ல விமர்சனத்துக்கு, உங்களுக்கும் ஒரு சபாஷ்

    ReplyDelete
  2. இன்னமும் பார்க்கல.. கலந்து கட்டு அடிக்கிறீங்களே எல்லோரும்.. :))

    ReplyDelete
  3. சபாஷ்..வித்தியாசமான பார்வை..
    இது போன்ற விமர்சனங்களை தொடர்ந்து எழுதுங்க.. நல்லாருக்கும்
    80's film கூட.. :)

    ReplyDelete
  4. நன்றி சித்ரா, படம் பார்த்தீங்களா? நம்ம ஊர் பாஷையில பொளந்து கட்றாங்க.

    ReplyDelete
  5. நன்றி கார்க்கி, தங்கள் முதல் வரவு நல்வரவு ஆகுக.
    கண்டிப்பா பாருங்க. ரொம்ம்ம்ப பிடிக்கலைனாக் கூட ஒரு நல்ல முயற்சிக்கு ஆதரவு தந்த திருப்தி கிடைக்கும்.

    ReplyDelete
  6. நன்றி சிவா. ரொம்ப நாளாச்சே எழுத வேண்டாம்னு நினைச்சேன். நீங்க சொன்னதினால பட விமர்சனமும் ஒரு trial பார்த்தாச்சு.

    ReplyDelete
  7. செந்தில் முருகன் ஸ்டோர்ஸ் ஒரு தீ விபத்தில் அழிவது போலவும் அதில் அண்ணாச்சியும் சுப்பர்வைசரும் 'மட்டும்' மாட்டிக் கொள்வது போலவும் காட்டி இருந்தால் அநியாயத்துக்கு ஒரு அழிவு உண்டு என்று கதையோடு தன்னை ஒன்றிப் பார்த்தவர்கள் சந்தோஷப் பட்டிருப்பார்கள்.



    அவ்வளவு குரூரமா வேண்டாம்.
    என் விமர்சனத்தை பார்த்து இருப்பீங்க. அது படி நடந்துகலாம்.
    http://tamiluthayam.blogspot.com/2010/03/blog-post_30.html

    ReplyDelete
  8. அங்காடித்தெருவா அப்படி ஒரு படம் வந்திருக்கா
    அடடே ஆச்சரியக்குறி.

    ReplyDelete
  9. அங்காடித் தெரு படத்தின் காட்சிகள்
    இன்னமும் என் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது..


    \\ ஒரு பெண் பெரியவள் ஆனதும் பெற்றவர்களுக்கே ஒரு நிமிடம் மிரட்சி ஏற்படும். அதிலும் நிராதரவாக உள்ள நிலையில் தன் தங்கை பெரியவளான விஷயம் தெரிந்ததும் தெருவில் நின்று அஞ்சலி புலம்புவது அக்மார்க் வகை.\\

    ஆம் அஞ்சலியின் நடிப்புக்கு ஒரு கோடி பாராட்டுக்கள்

    தலைவா இசையை பற்றி சொல்ல மறந்துடீங்களே

    "அவள் அப்படி ஒன்றும் அழகில்லை" பாடலில் நான் உருகி விட்டேன்

    இசைக்கு ஒரு சபாஷ்

    நன்றி!!!

    ReplyDelete
  10. //சினேகாவின் CD கொண்டு வரச் சொல்கிறார் அண்ணாச்சி. அதில் கடையை அடைத்த பிறகு வரும் ஆடல் பாடல் வருவது ஒரு உறுத்தல்.///
    நான் நேற்று தான் ப‌ட‌ம் பார்த்தேன்... என‌க்கும் அந்த‌ உறுத்த‌ல் இருந்த‌து.. ஆனால் விமர்ச‌ன‌ங்க‌ளில் இதை ப‌ற்றி யாரும் சொல்ல‌ வில்லை... அந்த‌ பாட‌லை அண்ணாச்சி க‌வ‌னிக்காம‌ல், அந்த‌ சூட்டிங் ந‌ட‌க்கும் போது அவ‌ர்க‌ள் க‌ண்க‌ளால் பேசுவ‌தை பார்த்து மாட்டி கொள்வ‌து போல் வைத்திருக்க‌லாம்.. உங்க‌ள் விம‌ர்ச‌ன‌ம் என‌க்கு பிடித்திருக்கிற‌து...

    ReplyDelete
  11. முதல்ல ஒரு பாராட்டை பிடியுங்க தமிழ்,
    உங்க விமர்சனம் முதலேய படிச்சிட்டேன். இருந்தாலும் மறுபடியும் போய் பார்த்தா ' இதை நீங்கள் 584 வது நபராக வாசிக்கிறீர்கள்' என்றது. ஒரு நல்ல விஷயம் இத்தனை பேரை போய் சேர்ந்திருப்பது சந்தோஷம்.
    இளம் பெண்களுக்கு நடக்கும் கொடுமையைப் பார்த்து, வேதனையில் வந்தது என் முடிவு.

    ReplyDelete
  12. நன்றி விசா, எனக்கு தெரியும் இப்படி எல்லாம் பின்.. வரும்னு.
    சிலர் உசுப்பேத்தினா இப்படி எழுதிறது தான்.

    ReplyDelete
  13. 'அழகழகா விதவிதமா ரகம்ரகமா' வரும் பாடல்களுக்காக அதை மன்னித்து மறந்து விடலாம்.//
    இல்லையே ஜில், பாடல்கள் பற்றி சொல்லு இருக்கிறேனே?
    என்ன இவங்க பாடல் வெளியீடுனு ரொம்ப காலம் முன்னாடியே பாடல்களை வெளி இட்டுர்றாங்க, பாடலின் சுவை குறைஞ்சிடுது.

    ReplyDelete
  14. நன்றி நாடோடி. சில விட்டுப்போன விஷயங்களை எழுதுவோம்னு பார்த்தா விசா கிண்டல் பண்றார் பாருங்க.

    ReplyDelete
  15. "செந்தில் முருகன் ஸ்டோர்ஸ் ஒரு தீ விபத்தில் அழிவது போலவும் அதில் அண்ணாச்சியும் சுப்பர்வைசரும் 'மட்டும்' மாட்டிக் கொள்வது போலவும் காட்டி இருந்தால் அநியாயத்துக்கு ஒரு அழிவு உண்டு என்று கதையோடு தன்னை ஒன்றிப் பார்த்தவர்கள் சந்தோஷப் பட்டிருப்பார்கள்."
    படம் அழகு... தங்கள் விமர்சனமும் அழகு...

    உங்கள் கிளைமாக்ஸ், வியக்க வைக்கிறது.... creativity எதாவது ஒரு வகையில் உங்கள் எழுத்தில் வெளிப்பட்டு விடுகிறது

    ReplyDelete
  16. நன்றி பார்வையாளன். ஆனால் எனது இந்த முடிவு இன்னொருவருக்கு குரூரமான முடிவா தெரியுது பாருங்க. அது தான் மனித மனம். எனக்கு நியாயம் என்று தெரிவது உங்களுக்கு அநியாயமாக தெரியலாம்.

    ReplyDelete
  17. " ஆனால் எனது இந்த முடிவு இன்னொருவருக்கு குரூரமான முடிவா தெரியுது பாருங்க. அது தான் மனித மனம் "

    அந்த கதாநாயகனின் வாழ்க்கையை, நான் சில காலம் வாழ்ந்து இருக்கிறேன் என்பதால் மட்டும் நீங்கள் கொடுத்த கிளைமாக்ஸ் , நன்றாக இருக்கிறது என சொல்லவில்லை...

    நடந்த ஓர் உண்மை சமபவத்தை லேசாக மாற்றி, கற்பனை செய்து இருந்தீர்கள் அல்லவா ? அதை மிகவும் ரசித்தேன்...

    மற்றபடி, ஒரு பூனையின் நகங்கள், ஒரு எலியை பொறுத்தவரை ஒரு கொடூர கொலை கருவி... ஒரு பூனை குட்டியை பொறுத்தவரை, அது ஒரு அன்பின் அடையாளம்...

    மனித மனதை பற்றிய உங்கள் பார்வையை விரிவு செய்து, ஒரு சிறுகதை தருவீர்களா ?

    ReplyDelete
  18. நன்றி பார்வையாளன், பூனையைப் பற்றி நீங்கள் கூறியது, நானும் ரசிக்கும் ஒன்று. பூனை தன் குட்டியை இடம் மாற்றுவதைக் கவனித்துப் பாருங்கள். தன் கூறிய பற்களால் குட்டிகளை மேல் தோலை மட்டும் பற்றி தூக்கி செல்லும். எலி கிடைத்தால் கடித்துக் குதறும் பற்கள் தன் குட்டிகளை நோகாமல் தூக்கி செல்வதை அடிக்கடி ரசிப்பேன். சிறுகதை முயற்சி செய்கிறேன்.

    ReplyDelete
  19. அங்காடி தெரு, உங்க விமர்சனம் அருமை..
    கண்டிப்பா பாக்கணும் :D :D

    ReplyDelete
  20. நன்றி ஆனந்தி,thriller கதைகள் தான் முடிவு முதல்ல தெரிஞ்ச சுவை குறையும். இதில் அப்படி இல்லை. கண்டிப்பா பாருங்க.

    ReplyDelete
  21. நல்ல விமர்சனம்... இன்னும் படம் பார்க்கவில்லை... பலரும் புகழ்கிறார்கள். விரைவில் பார்க்கிறேன். பகிர்வுக்கு நன்றிங்க!

    -
    DREAMER

    ReplyDelete
  22. உங்கள் பிஸி schedulilum பிற பதிவுகளிலும் பின்... போட்டு விடுகிறீர்கள். நன்றி. கதைக் களம் உங்களுக்கு எங்கே இருந்தெல்லாம் கிடைக்குதுன்னு ஆச்சரியமா இருக்குது நன்றி ட்ரீமர் .

    ReplyDelete
  23. நல்ல விமர்சனம் நண்பரே. வாழ்த்துகள். நானும் எதோ கிறுக்கி இருக்கிறேன். முடிந்தால் வந்துவிட்டு போங்க. :)

    http://thalafanz.blogspot.com/2010/04/blog-post.html

    ReplyDelete
  24. நன்றி யோகநாதன், தங்கள் முதல் வரவு நல்வரவு ஆகுக.

    ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!