அழகான எமி
ஆண்மையான ஆர்யா
சிலிர்க்க வைத்த சிங்கார சென்னை. (1945)
இளமையிலும் முதுமையிலும் அழகான எமி நாங்கள் படித்த கான்வென்ட் பள்ளியில் பார்த்த வெளி நாட்டு கன்னியாஸ்திரிகளைப் போல் முதுமையில் எமி. இளமையில் ஒரு சிறு குறை கூட சொல்ல முடியாத அழகு.
ஆர்யா நகைச்சுவையிலும் கலக்குகிறார். படத்தில் அவருக்கு மிகக் குறைந்த ஆடை செலவு. நடனத்தின் நடுவில் கையோடு கை கோர்த்து எமி காதலை வெளிப்படுத்தும் இடத்தில் அதிர்வை அழகாக காண்பிக்கிறார். நடனத்திலும் அந்தக் கால நடனம் ரசிக்கலாம். அதிலும் ஆடிக் கொண்டே துணி மூட்டையை ஒருவருக்கொருவர் கை மாற்றும் இடம் அழகு.
நாசருக்கு நடிப்பில் வேலை குறைவு. ஆர்யாவுடன் மோதும் போது ஆசிரியருக்காக தோற்றது போல் நடிப்பதை புரிந்து கொண்டு அவருக்கு மட்டும் கேட்கும் தொனியில் அதை உறுதிப் படுத்தும் இடத்தை நடிப்புக்கு உபயோகித்துக் கொண்டார்.
வில்லனாக வருபவர் படகில் எமி இறங்க கை கொடுக்கும் படகுக் காரனின் விரல்களை ஷூவால் அழுத்தும் பொழுதே படத்தின் வில்லன் என்று அடையாள படுத்தப் பட்டு விடுகிறார். எனக்கு கிடைக்காதவள் யாருக்கும் கிடைக்க கூடாது என்று உறுமும் போது தமிழ் வில்லன்களை நினைவு படுத்துகிறார்.
ஹனீபா காமெரா கண்டதும் சிலையாக நிற்பதும், அதைக் கண்டதும் எமி கேமரா திசை மாற்றுவதும் நல்ல நகைச்சுவை. மலையாளத்தில் இருந்து வந்தாலும் தமிழ் ரசனைக்கு மிகவும் பொருந்திப் போன ஹனீபா இறந்தது வருத்தமாக இருக்கிறது.
பாடல்களில் ஜி வீ பிரகாஷ் தூள் பரத்தி இருக்கிறார். பின்னணி இசையும் ஒரு சில இடங்கள் தவிர மீதி இடங்களில் சிறப்பு. நீரவ் ஷா காமெரா கண்ணுக்கு குளுமை. இருந்தாலும் 1945 உம் 2010 உம் மாறி மாறி வருவதால் முன்னதுக்கு கருப்பு வெள்ளையும் பின்னதுக்கு வண்ணமும் சேர்த்திருந்தால் நல்லா இருந்திருக்கும் என்று மனதில் பட்டது. ஆனால் பெரும் பகுதி 1945 இல் நடப்பதால் வேண்டாம் என யோசித்திருக்கலாம். மேலும் எமியின் அழகு வண்ணத்தில் தான் மிளிரும் .இங்கே எமியின் ஆடை வடிவமைப்பாளருக்கு ஒரு முறை கை குலுக்கி விடலாம்.
படத்தில் நான் ரசித்த இயக்குனருக்கு ஷொட்டு கொடுக்கும் இடங்கள்:
... சென்ட்ரல் ஸ்டேஷன் இல் இருக்கும் கூட்டத்தில் ஆர்யா வைக் கண்டு பிடிக்க முடியாமல் திணறும் எமி, போலீஸ் திடீரென ஓடி வருவதைப் பார்த்ததும் கொஞ்சம் ஒளிந்து பின் அவர்கள் வேறு திசையில் ஓடுவதைப் பார்த்ததும் அந்த திசையில் பார்வையை செலுத்தி ஆர்யாவை சட்டென கண்டுபிடிக்கும் இடம்.
...வானுயர்ந்த கடிகாரத்தை உடைத்து கீழே வந்து விழும் ஒருவனைக் கண்டதும் நொடிப் பொழுதில் அங்கிருப்பது ஆர்யா எனப் புரிந்து நண்பன் சடுதியில் பிறருக்கு முன் பாய்ந்து ஆர்யாவை அடையும் இடம்.
...மருத்துவமனையில் 'கபீர்' என்ற பெயரைக் கேட்டதும் பரிதியின் நண்பன் என்று இனம் கண்டு கொண்டு விரையும் இடத்திலும், 'துறையம்மா ' பள்ளியில் இருந்து கொடி நாளுக்கு நன்கொடை கேட்க வந்த மாணவியைப் பார்த்ததும் அது தன் பெயரில் பரிதி ஏற்படுத்திய பள்ளி என்று உணர்ந்து கொள்ளும் இடத்திலும் எமி பழைய நினைவுகளிலேயே பிக்ஸ் ஆகி விட்டதை காட்ட முடிந்தாலும் எதற்காக இடையில் வர முயற்சி செய்யவே இல்லை என்பதை அழுத்தமாக சொல்லி இருக்கலாம்.
ஆர்யா இப்படியே படம் பண்ணிக் கொண்டு இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. இடை இடையே ஒரு கம்மேர்ஷியல் படம் பண்ணலாம்.
மிகவும் ரசித்து பார்த்த மதராச பட்டினம் எமி இறுதி முறையாக அமர்ந்த படியே சரியும் போது வழக்கம் போல் எழுந்து விட மாட்டார்களா என்ற ஆதங்கத்தை ஏற்படுத்துவது உண்மை.
கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம்.
கண்டிப்பா பார்த்தாச்சிங்க...... நாம் பார்க்காத, அனுபவிக்காத சென்னையை கண்முன் கொண்டுவந்தது சிறப்பு... விமர்சனம் நல்லா இருக்குங்க..
ReplyDeleteNice Review.:)
ReplyDeleteபார்த்து விடுவோம்.
ReplyDeleteநல்ல விமர்சனம். இது கமெர்சியல் படம் இல்லைன்னு சொல்றீங்களா ?? :)
ReplyDeletevery nice and gentle review. :-)
ReplyDeletemmmmm
ReplyDeleteசிங்காரமாய் இருந்த சென்னையை சீரழித்து இன்று சிங்கார சென்னையை மாற்ற கோடிகள் செலவழிக்கிறோம் நன்றி நாடோடி
ReplyDeleteநன்றி வானம்பாடிகள் sir
ReplyDeleteதமிழ் மிஸ் பண்ணிடாதீங்க, சில படங்களை மிஸ் பண்ணினா அதே ஹீரோ நடித்த அடுத்த படத்தில பார்த்துக்கலாம், இது அப்படி இல்லை
ReplyDeleteநன்றி பின்னோக்கி இது வருவாரு .... ஆனா வரமாட்டாரு ரகம். நான் சொன்ன கம்மேர்ஷியல் வேற
ReplyDeletethank u chitra .
ReplyDeleteநன்றி விசா, அங்காடித் தெரு நினைவு வந்ததா? எனக்கும் இந்த பதிவு எழுதும் போது உங்கள் நினைவு வந்தது.சீக்கிரமா விமர்சனம் எழுதிட்டேனா?
ReplyDeleteநல்ல விமர்சனம் .
ReplyDeleteகருப்பு வெள்ளை ,வண்ண திரைப்பட ஐடியா சூப்பர் .
நன்றி பார்வையாளன், படம் பார்த்தாச்சா?
ReplyDelete