Bio Data !!

01 August, 2010

கல்யாண வைபோகமே !!

"அம்மாடி!  கல்யாணப் பொண்ணே! நீ அப்படியே உட்காரம்மா. வேலையெல்லாம் நாங்க பார்த்துக்குறோம். "
"பூக்காரரே ! மாலையெல்லாம் சரியா மாலை ஆறு  மணிக்கு வந்திரணும்.சரி வெச்சிடவா?"
"சின்னக் குட்டி! நிச்சயத்துக்கு வேண்டியதெல்லாம் ஒரு பெட்டியிலயும் முகூர்த்ததுக்கு அடுத்ததிலையும் வச்சிருக்கேன். எழுதி வச்சிருக்கிற லிஸ்ட் பார்த்து எல்லாம் சரியா இருக்கானு பாருடா."
"என்னங்க! பணத்தை பத்திரமா வச்சுக்கோங்க. ஏதாவது அவசரம்னா வீட்டுக்கு வர வேண்டி இருக்கும் டிரைவரை மண்டபத்தை விட்டு வேற எங்கேயும் போய் விட வேண்டாம்னு சொல்லி வையுங்க. "

பம்பரமாய் சுழண்டு கொண்டிருந்தாள் என் தர்ம பத்தினி. எங்கள் அருமை மகளுக்கு திருமணம். இன்று மாலை நிச்சயம், நாளை காலை முகூர்த்தம்.
எங்கள் திருமணம் காதல் திருமணம். காதலித்த காலத்திலேயே வகை வகையாய் திருமண அழைப்பிதழ்களை சேகரித்து வைத்திருந்தாள். பாவம்! எங்கள் வீட்டாரால் சம்மதிக்கப் பட்ட எங்கள் திருமணம் அவளது பெற்றோர் உடன்படாமலே தான் நடந்து முடிந்தது. ஆம்! அழைப்பிதழ் இல்லாமல் . மண்டபம் இல்லாமல். எங்கள் வீட்டு பெரியவர்கள் சம்மதம் இருந்ததால் எந்த சிரமமும்   இல்லாமல் பதிவு அலுவலகத்தில்.  அதனால் மகளது திருமணம் மிகச் சிறப்பாக செய்ய வேண்டும் என்ற அவள் ஆர்வம் எனக்கு புரிந்தது.

எனக்கு எந்த வேலையும் நிதானமாக தவறே இல்லாமல் செய்ய வேண்டும். அவள் அதற்கு நேர் எதிர். இன்றைய அவசர யுகத்துக்கு  நிதானம் சரிப்படாது. தவறு வந்தால்  சரி செய்துக்கலாம் என்னும் ரகம். ஆனால் இந்தக் கல்யாண அவசரத்தில் என் நிதானம் கொஞ்சம் இடைஞ்சலாகத்தான் இருக்கிறது. ஏதோ பாதி வேலைகளை அவள் எடுத்து செய்வதால்  சமாளிக்க முடிகிறது.

"வேன்  வந்திடுச்சு, எல்லோரும் ஏறுங்க"
"கண்ணு, தாத்தா படத்தில நின்னு நல்லா வேண்டிக்க, இதே சந்தோஷம் என் வாழ் நாள் பூரா நீடிக்கணும்னு"
"ராஜி,  மொய்ப் பணம் பொறுப்ப நீ எடுத்துக்க, அது தவறிற கூடாது. பணம் போனாலும் பரவா இல்லை. யார் யார் எவ்வளவு செய்தான்னு தெரியாம போய்டும்"
"என்னங்க ......"
நான் இடைமறித்தேன், "நீ போய் முதல்ல கார்ல இரு. மனுஷனை டென்ஷன் படுத்தாத."

எனது தினப்படி நிதான வாழ்க்கை மாறியதில் கொஞ்சம் எரிச்சலாக வந்தது. கோபத்தை யார் மேல் காட்ட முடியும். அதுக்கு தானே தர்ம பத்தினி.
ஒரு வழியாக மண்டபம் வந்து சேர்ந்தோம்.  மிகப் பெரிய மண்டபம். IT கம்பெனி போல முழுவதும் கரு நீலக் கண்ணாடியால் ஆன மண்டபம். வண்ண விளக்குகளால் மின்னியது.  ப்ளெக்ஸ் போர்டில் புகைப்படம் போடுவது ரொம்ப பழமையானதுன்னு  மாப்பிள்ளை நினைத்ததால் வெறும் பெயர்கள் மட்டும் போட்டு இருந்தோம். அதுவும் ஏன் என்பது தான் அவர் எண்ணம். வெளியூர் காரங்க கண்டு பிடிக்க எதுவாக இருக்கும் என்றதும் ஏற்றுக் கொண்டார். தங்கமான புள்ளை. அம்மா அப்பான்னு, பூ வச்சு உறுதி பண்ணின நாளில் இருந்து ரொம்ப பாசமா நடந்துக்கிட்டார்.

மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்ததும் வாசலிலேயே நின்று வரவேற்று உள்ளே கூட்டி சென்றோம். தங்கும் இடமெல்லாம் வசதியாக இருந்ததில் சந்தோஷம் நிறைந்திருந்தது. மாப்பிளையின் அத்தை கணவனை இழந்தவர்கள். ரொம்ப நல்ல மனுஷி. அவர்கள் ஓரமாக இருந்ததை பார்த்து என் மனைவி போய் மேடைக்கு அழைத்து வந்தாள்.
"அம்மா, நீங்க முன்னாடி வரணும். இந்த புள்ளைங்க நல்லா இருக்கணும்னு கல்யாண பேச்சு ஆரம்பிச்சதில் இருந்து எவ்வளவு ஆசையா இருந்தீங்க. வாங்க."
எனக்கு என் மனைவியின் போக்கு பிடித்திருந்தது. 

பெண்ணின் வீட்டாரில் முக்கியமானவர்கள் ஒருபுறம், மாப்பிள்ளை வீட்டார் மறுபுறம், அமர்ந்திருக்க என் மகள் அலங்காரங்களோடு நாணமும்  ஒரு நகையாய் நடந்து  வந்து சபையில் அனைவரையும் வணங்கினாள். அடுத்தடுத்து சடங்குகளும் அதன்பின் உணவும் சிறப்பாக நடந்து விட்டதில் எல்லோரும் திருப்தியாக உறங்கப் போனோம். 

"வீட்டுக்கு புறப்படுவோமா?" என்றேன் என் மனைவியைப் பார்த்து.
"இல்லைங்க, நிச்சயம் பண்ணின பொண்ணை மண்டபத்தில் இருந்து கூட்டிட்டு போகக் கூடாதுங்கறாங்க. நீங்க மட்டும் போயிட்டு வந்துடுங்க. உங்க தம்பியையும் துணைக்கு கூட்டிப் போங்க. " என்றாள். 

எனக்கு கொஞ்சம் திடுக்கிட்டது. அவளிடம் சிடு சிடுன்னு ஏதாவது சொன்னாக் கூட முக்கியமான நேரங்களில் அவள் என்னுடன் இருப்பது பெரிய பலம். திடீர்னு பிளானை மாற்றிட்டாளே. நாளைக்கு திருமணம் நல்ல படியா முடியணும். தூக்கம் எங்க வரப் போகுது. எங்க வீடு இருக்கிற ஏரியா கொஞ்சம் பாதுகாப்பு குறைவு.அதனால வீட்டுக்கு போக வேண்டி இருக்குது. இல்லைனா இங்கேயே இருந்திடலாம். 

சரி நாங்க போயிட்டு வந்திடுறோம், எல்லோரும் கல்யாணத்துக்கு கண்டிப்பா வந்திடுங்க. 
( இன்னும் வரும்) 

18 comments:

  1. ஹாய் சகோதரா நல்லாத்தான் இருக்கு

    ReplyDelete
  2. க‌ல்யாண‌ விருந்தில் ஆர‌ம்பித்து இருக்கீங்க‌.... தொட‌ருங்க‌ள்.

    ReplyDelete
  3. ம்ம். வெயிட்டிங்

    ReplyDelete
  4. சகோதரா இல்லை , சகோதரி.
    தங்கள் முதல் வரவு நல்வரவு ஆகுக,
    அதென்ன பேரு வெறும்பய ?

    ReplyDelete
  5. அருமையான தொடருங்கோ.... அசத்துங்க!

    ReplyDelete
  6. நாடோடி நல்லா இருக்கீங்களா? எதுவும் புதிதாக எழுதலை போல் இருக்கே? ஏன் ரொம்ப பிஸியா?

    ReplyDelete
  7. சித்ரா உங்களை மாதிரி ஜாலி பீசா எழுதணும்னு பார்க்கிறேன் வர மாட்டேன்குதே ஒரு e training கொடுக்கலாமே?

    ReplyDelete
  8. நல்லாவே போகுது.. நானும் காதலித்து கல்யாணம் பண்ணி .. உங்க தொடரில் வருவது போல் யாருமற்று கல்யாணம் பண்ணி..
    பழசெல்லாம் நினைவுக்கு வருது...

    ReplyDelete
  9. " எனது தினப்படி நிதான வாழ்க்கை மாறியதில் கொஞ்சம் எரிச்சலாக வந்தது. கோபத்தை யார் மேல் காட்ட முடியும்"

    " அவளிடம் சிடு சிடுன்னு ஏதாவது சொன்னாக் கூட முக்கியமான நேரங்களில் அவள் என்னுடன் இருப்பது பெரிய பலம்."

    இது போன்ற வரிகளில் , மனிதனின் மனதை படித்து இருக்கிறீர்கள் என புரிகிறது.. அருமை...


    "சித்ரா உங்களை மாதிரி ஜாலி பீசா எழுதணும்னு பார்க்கிறேன் வர மாட்டேன்குதே ஒரு e training கொடுக்கலாமே?"

    அவர் பாணியில் அவர் கலக்குகிறார்.. உங்கள் பாணியில் நீங்கள் கலக்குங்கள்... தனித்துவத்தை இழந்து விட வேண்டாம்...

    ReplyDelete
  10. நல்ல் சுவாரசியம் .. அடுத்தது எப்ப ராஜ்..

    ReplyDelete
  11. @நாய்க்குட்டி மனசு said...
    //நாடோடி நல்லா இருக்கீங்களா? எதுவும் புதிதாக எழுதலை போல் இருக்கே? ஏன் ரொம்ப பிஸியா? //

    ரெம்ப‌ ந‌ல்லா இருக்கேன்... கொஞ்ச‌ம் ஆணி அதிக‌ம் தான்... இப்ப‌ இய‌ல்பு நிலைக்கு வ‌ந்தாச்சி.. விசாரிப்புக்கு ரெம்ப‌ ந‌ன்றி..

    ReplyDelete
  12. உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
    ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.
    ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.
    நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )
    ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்
    :)

    ReplyDelete
  13. நன்றி செந்தில், காதலிக்கிறது முக்கியமில்லை, கல்யாணத்துக்கு அப்பறமும் காதலிக்கிறோமா அது தான் முக்கியம்

    ReplyDelete
  14. நன்றி பார்வையாளன், எப்போதுமே என்னை ஊக்கப் படுத்தும் விதமாகவே வருகிறது உங்கள் பின்னோட்டம் நன்றி.

    ReplyDelete
  15. நன்றி தேனம்மை
    நன்றி நாடோடி
    நன்றி ஸ்வீதா

    ReplyDelete
  16. I see your point !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .

    ReplyDelete
  17. "எப்போதுமே என்னை ஊக்கப் படுத்தும் விதமாகவே வருகிறது உங்கள் பின்னோட்டம்"

    அதற்கு காரணம் உங்கள் எழுத்துதான்.. ஆனால் கதை சுருக்கம் சொல்வது போல அவசரமாக எழுதினால், என் பின்னூட்டம் விமர்சிப்பது போல வரும் ..

    எனவே அவசரப்படாமல் உங்களுக்கு எப்போது சரி என தோன்றுகிறதா அப்படி திருத்தம் செய்து அதன் பின் வெளியிடுங்கள் ....

    அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர் பார்க்கிறோம்...

    ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!