அப்போ நீங்க !! | | | | பத்திரிகைகளும், வானொலிகளும் உங்கள் வாக்குகளை பதிவு பண்ணுங்க னு பலமுறை வற்புறுத்தி கூறினாலும் வாக்கு போடுவதில் என் நேரத்தை வீண் பண்ண போவதில்லைனு
பிடிவாதமா இருக்கிறவங்களுக்கு இந்த வேண்டுகோள்:
இது நமது உரிமை. நமக்கென்ன என்று பலரும் இருப்பதால் தான் அரசியல் பாத்திரத்தில் ஒரே தண்ணீர் மயம். நமது கடமையை செய்யாமல் விட்டு காலம் காலமாய் புலம்புவதில் என்ன லாபம். இன்று உங்கள் சுட்டு விரலைக் கரை ஆக்காமல் விட்டால் பிறரை சுட்டி குற்றம் சாட்ட உரிமை அற்றுப் போவீர்கள். அதனால் கண்டிப்பாக உங்கள் வாக்குகளைப் பதிவு செய்யுங்கள்.
வாக்குச் சாவடியில் ரசித்த விஷயங்கள்:
தன் முதல் ஓட்டை பதிவு செய்ய வந்திருந்த ஒரு பதினெட்டு "ஒரே பரபரப்பா இருக்குது.இது தான் எனது முதல் வாக்குரிமை. நாம வோட்டு போட்டவங்க ஜெயிக்கணும். " எனக்கு காவல் துறைப் பணியை விரும்பி, காதலித்து ஏற்று, பல கனவுகளுடன் வரும் ஒருவன் நிஜத்தை சந்திக்கும் போது வரும் அதிர்ச்சி ஏனோ வேளை கேட்ட வேளையில் நினைவுக்கு வருகிறது.
பதிவு சீட்டு வாங்காமல் வாக்கு அளிக்க வந்திருந்த ஒரு தம்பதியர் அவர்கள் பெயர் இல்லை என்ற கோபத்தில் கணவன் "நேரே போய் உன் ரேஷன் கார்டை நீயே வச்சுக்கனு கொடுத்திட வேண்டியது தான. வாக்கு போட முடியல இது எதுக்கு வெட்டியா. இதுக்கு ஒரு உடை உடுத்தி போயே ஆகணும்னு பிடிவாதம் பிடிச்சி, நேரமெல்லாம் வேணாப் போச்சு. " அர்ச்சனைப் பெற்ற அம்மனாய் அமைதியாய் பின் தொடரும் மனைவி.
இத்தனைக்கும் நடுவில் முறையாய் வாக்கு பதிவு செய்த பெருமிதம் முகத்தில் படர கை விரல் கரை கலங்கி விடாமல் சுட்டு விரலை ஒதுக்கிப் பிடித்த படியே ஒய்யாரமாய் செல்லும் பெண்கள் கூட்டம்.
எதை செய்தாலும் முறைப்படி ஒரு ஒழுங்கோடு செய்யும் ஆசிரியர்களை இந்தப் பணியில் நியமித்தது ரொம்ப பொருத்தமானது. நிமிர்ந்து யாரையும் பார்க்காமல் கருமமே கண்ணாக ஒரு ஒழுங்கு முறையோடு பணி செய்து கொண்டிருந்த போலிங் அதிகாரிகள்
மொத்தத்தில் அழகான அனுபவம். இழந்து விடாதீர்கள் உங்கள் உரிமையை .
வாக்களிக்க மறவாதீர் !!
|
|
நானும் போட்டாச்சுங்க..
ReplyDeleteஓட்டு போட்டு விட்டோம்.
ReplyDeleteநன்றி.
அருமையா சொல்லியிருக்கீங்க.. நான் பாத்த போது ரொம்ப வயசான ஒரு தாத்தாவை நாலு பேர் சேர்ந்து கைய பிடிச்சு கூட்டிவந்து ஓட்டுபோடவச்சாங்க.. உடம்பு நிறைய எக்கசக்க சுருக்கம், கண்ணு தெரியாம ரொம்ப ரொம்ப வயசானவர்.. அவரே வந்து ஓட்டுபோடும்போது நமக்கென்ன.. காலையில முதல் வேலையா போய் பசக்குனு அமுக்கிட்டு வந்துட்டேன்..
ReplyDeleteநானும் போட்டாச்சு
ReplyDeleteகடமையை செய்தாச்சா?... சூப்பர்.. :)
ReplyDeleteநன்றி கூர்மதியான், ஓட்டு போட்டதுக்கும், பதிவு போட்டு நொடி பின்னூட்டம் போட்டதற்கும்
ReplyDeleteநன்றி ரத்னவேல் ஐயா
ReplyDeleteநன்றி goma இந்த முறை வாக்களித்தவர் எண்ணிக்கை அதிகம் இருக்கும் என்று நினைக்கிறேன்.நல்லதே நடக்கும்,
ReplyDeleteநன்றி நாடோடி, எப்போவும் கடல்லேயே இருக்கிறவங்க எப்படி வோட் பண்ணுவாங்க ?
ReplyDeleteஇழந்து விடாதீர்கள் உங்கள் உரிமையை .
ReplyDeleteவாக்களிக்க மறவாதீர் !!
..Good message!
சித்ரா ! நல்ல வாக்கு சதவிகிதம் தமிழ் நாட்டில்
ReplyDelete77 .4 % பாராட்ட வேண்டிய விஷயம் தானே?
வேகாத வெய்யில் ஆனாலும்
ReplyDeleteநோகாமல் நின்னு போட்டாச்சு
அருமையா எழுதுறீங்களே.....!!!!
ReplyDeleteநன்றி ரமணி சார் ,எல்லா மீடியாக்களும் சொல்லி சொல்லி இந்த தேர்தல் அதிக வாக்கு சதவிகிதத்தை பெற்றிருக்கிறது. யார் வந்தா நல்லதுன்னு நமக்கே முழுத் தெளிவா இல்ல அது தான் வருத்தமா இருக்குது,
ReplyDeleteநன்றி Mano நாஞ்சில் மனோ ! தங்கள் முதல் வரவு நல்வரவு ஆகுக!
ReplyDelete