எனது முந்திய பதிவு வங்கியில் நாம் ATM மூலம் பணம் எடுக்கும் போது ஏற்படும் சிக்கல் பற்றியது. இங்கே அடிச்ச மணிக்கு எங்கேயோ விளக்கு எரிந்து விட்டது.
2 .7 .2011 சனிக்கிழமை செய்தித் தாளில் ஒரு செய்தி.
ATM மூலம் தவறு நேர்ந்து பணம் கழிக்கப்பட்டால் அது ஏழு நாட்களுக்குள் நமது வங்கிக் கணக்கில் ஏறி விட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி ஏற்கனவே கொடுத்துள்ள கட்டளையை மறுபடியும் வலியுறித்தி இருக்கிறது. அது வல்ல செய்தி. அப்படி தர வில்லை என்றால் ஒவ்வொரு நாளுக்கும் ரூபாய் .100 /- வீதம் வங்கி அளிக்க வேண்டும். இது 1 .7 .2011 முதல் அமுலுக்கு வருகிறது.
வாழ்க பாரதம்!!
அது மட்டும் அல்லாது மற்றும் ஓர் அலர்ட் சிக்னல்.
உங்கள் பணத்தை கணக்கு இருக்கும் வங்கி அல்லாது மற்ற வங்கிகளில் ஒரு மாதத்தில் ஐந்து முறைக்கு மேல் எடுத்தால் தொகை கழிக்கப்படும். இது நாம் அறிந்தது. இனி mini statement , balance enquiry போன்றவையும் ஐந்து தடவைக்கு மேல் நம் கணக்கு இல்லாத வங்கிகளில் எடுத்தால் தொகை கழிக்கப் படும்
பல ஆண் சிங்கங்களே சமையல் குறிப்பு எழுதும் போது, நாம எழுதாம இருந்தா எப்படின்னு ஒரு சிந்தனை. அதனால் இதோ உங்களுக்கே உங்களுக்காக "மசால் தோசை "
இரண்டு பெரிய உருளைக் கிழங்குகளை துண்டுகளாக வெட்டிப் போட்டு குக்கரில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். சிறிது ஆற விட்டு தோல் உரித்து கையால் நன்கு மசித்து வைத்து கொள்ளவும்.
பல்லாரி வெங்காயத்தை பொடிப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
எட்டு பெரிய பச்சை மிளகாயை நீளமாக நறுக்கி, ஒரு துண்டு இஞ்சி தோல் நீக்கி, நாலு பெரிய பூண்டு சேர்த்து தட்டி வைத்துக்கொள்ளவும்.
மல்லி தழையை நீரில் நன்கு கழுவி பொடிப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
இன்னும் ஐந்தே நொடியில் மசால் தயார்.
வாணலியில் எண்ணை ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, பல்லாரி, பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு தட்டியது போட்டு வதக்கி, பொட்டுக்கடலை கொஞ்சம் போட்டு உருளைக் கிழங்குகளை சேர்த்து , லேசாக கிண்டி விடவும். உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றவும். சேர்ந்து வரும் போது மல்லி தழையை போட்டு இறக்கி விடலாம்.
தோசைகல்லில் எண்ணை லேசாக தடவி, மாவை கல்லில் பரத்தி சுற்றி நெய்விட்டு , தோசை முருகி வரும் போது ஒரு கரண்டி மசாலை தோசையில் பாதி வரும் படி தேய்த்து , மீதி பாதி தோசையை மசாலின் மேல் மூடி எடுக்கவும். சாம்பாரும், சட்னியும் சேர்த்து சாப்பிட்டால் ஹோட்டலில் சாப்பிட்ட எப்பெக்ட் வரும். சாப்பிட்டு பார்த்து சொல்லுங்க
எங்கள் ஊரில் ஆட்டோவில் அடைக்கப்பட்ட ஏழு வயது பள்ளி மாணவன், எதிரே வந்த வானில் ஆட்டோ மோதியதால் கீழே விழுந்து மூளை சிதறி தெருவில் மூடி வைக்கப்பட்டிருந்தான். பச்சிளம் பாலகன். வெளியில் தெரிந்த ஷூ போட்ட இரு கால்களும் என்னை கொஞ்சு, கொஞ்சு என்றன. பெற்றவன் அழுகை காணச் சகியாததாய் இருந்தது. அதுவும் இப்போதெல்லாம் ஆட்டோவின் பின் புறம் கம்பி தடுப்பால் அடைக்கப் பட்டு குழந்தைகள் செல்வதை பார்க்கும் போது நாய் வண்டி தான் நினைவுக்கு வருகிறது . ஒரு ஆட்டோவில் இத்தனை குழந்தைகள் தான் அழைத்து செல்லலாம் என்று ஒரு சட்டம் கொண்டு வருவதில் உள்ள சிக்கல் தான் என்ன?.
நமது வாழ்க்கையில் துன்பச் சுமைகள் நிறைய இருக்கின்றன. அவை வருவதை மூன்று விதமாக பிரித்துக் கொள்ளலாம்.
1 ) நாமே வருவித்துக் கொள்பவை. கோபம் , காமம், பொறாமை போன்ற குணங்களால் நாம் சிவப்புக் கம்பளம் விரித்து பெற்றுக் கொள்ளும் சுமைகள் ஒரு வகை.
2 ) இயற்கையின் சீற்றங்களால் வரும் சுனாமி , புயல், போன்ற சுமைகள்.
3) இறைவன் நமக்குத் தரும் சுமைகள். இவை நம்மை புடம் போட்டு இன்னும் ஒளிரச் செய்வதற்காக.
இதை கவனித்துப் பார்த்தால் நம்முடைய சுமைகளில் பாதிக்கு மேல் நாம் வரவழைத்துக் கொள்வது தான். அதை எப்படி குறைப்பது என்று சிந்தித்து முடிவெடுப்பது நம் கையில் தான் இருக்கிறது. இன்னும் ஏன் நாம் நெய்க்காக அலைந்து கொண்டு இருக்கிறோம்.சந்தோஷமாக இருப்போம் !!
மொத ஓ சி சாப்பாடு
ReplyDelete>>சந்தோஷமாக இருப்போம் !!
ReplyDeleteஇப்போ தான் உங்க பிளாக்ல போஸ்ட் படிச்சேன். அப்புறம் எப்படி சந்தோஷமா இருக்க முடியும்? ஹா ஹா
good and usuful post
ReplyDeleteசகோ தகவல்களுக்கு நன்றி...பல இடங்களில் ஆண் சிங்கங்கள் தான் உணவு சமைக்கின்றன
ReplyDeleteஹிஹி!
விக்கி, பல இடங்களில் அல்ல பல வீடுகளில் என்று தெளிவாகச் சொல்லுங்க... -ஹி ஹி...
ReplyDeleteஉங்க பாயிண்ட் சரிதான்
ReplyDeleteநல்ல பதிவு. பாராட்டுக்கள். மக்களாகிய நாம்தான் எப்போதும் விழிப்பாக இருக்க வேண்டும்.
என்னோட வலை பக்கமும் கொஞ்சம் வாங்க.
சிபி இன்றைய பொழுது எப்படி போனது. இல்ல என் பதிவை படிச்சிருக்கீங்களே அதான் கேட்டேன்
ReplyDeleteதேங்க்ஸ் ஷர்புதீன் உங்கள் பதிவுக்கு பின்னூட்டம் இன்னும் கொஞ்சம் சுலபமா ஆக்கலாமே ! பதில் போட நினைக்கிறேன் போட முடிய வில்லை
ReplyDeleteநன்றி விக்கியுலகம். இதை நான் ஒத்துக் கொள்கிறேன். அந்த இடங்கள் திருமண மண்டபம் தானே?
ReplyDeleteஇந்த அனானிமஸ் தெரிஞ்சவர் போல் இருக்குதே ! ஹி !ஹி!
ReplyDeleteநன்றி குணசேகரன் தங்கள் முதல் வரவு நல்வரவு ஆகுக !
ReplyDeleteஅந்த பாலகனின் முடிவை , தாய்மை உணர்ச்சியுடன் எழுதியது நெகிழ வைத்தது
ReplyDeleteபதிவுக்கு நடுவே இடைச் செருகலாய் இருக்கும் என் வேதனையை சரியாக உருவி எடுத்து உள்ளீர்கள் பார்வையாளன்
ReplyDeleteபுது பதிவு போடலையா.?சப்போஸ் ஐடியா ஏதும் கிடைக்கலைன்னா நான் ஏன் பதிவு போடலைன்னா.. என டைட்டில் வைத்து ஒரு பதிவு தேத்தவும் ஹி ஹி
ReplyDeleteநல்ல பதிவு..மசால் தோசை மாதிரி எல்லா ஏரியா விலும் புகுந்து இருக்கீங்க ...வாழ்த்துக்கள்
ReplyDeleteசிபி நான் ரொம்ப சுறுசுறுப்பு வாரத்துக்கு ஒரு பதிவு தான் போடுவேன். இந்த வாரக் கோட்டா முடிந்தது அப்பாடான்னு இருக்கேன்
ReplyDeleteநன்றி கோவை நேரம். மசால் தோசை சாப்பிட்டு பார்த்து எழுதியது. நான் கேரன்டீ
ReplyDeleteநன்றி சங்கரலிங்கம் sir , பதிவு போட்டு ரொம்ப நாள் ஆச்சு போல் இருக்கே !
ReplyDeleteஏ.டி.எம் குறித்தான பயனுள்ள தகவலுக்கு நன்றி
ReplyDeleteமசால்தோசை கடையில் சாப்பிட்டே பழக்கமாகிவிட்டது
ஆசை இருந்தாலும் வீட்டில் செய்யப் பயம்
தங்கள் பதிவைப் படித்து கொஞ்சம் தைரியம் வந்துள்ளது
இந்த சனிக்கிழமை சோதனை முயற்சியில்
ஈடுபடலாம் என உள்ளேன்
விபத்து குறித்த தங்கள் ஆதங்கம் சரியானதே
நல்ல பயனுள்ள விஷயங்களைத் தாங்கி வந்த தரமான பதிவு
தொடர வாழ்த்துக்கள் பதிவு
நன்றி ரமணி sir
ReplyDelete