பள்ளி தோழியின் மகளின் திருமணத்திற்காக நெல்லையில் இருந்து சென்னைக்கு பயணம். பதிவர்களை சந்திப்பது வெகு நாள் கனவாக இருந்த காரணத்தினால் திருமண நாளின் முன்னும் பின்னும் ஒவ்வொரு நாள் சேர்த்து மூன்று நாள் பயணம். பெரிய கதையே எழுதுவேன் என் சந்தோஷத்தை பகிர்வதற்கு நேரம் இன்மையின் காரணமாக அவசர பந்தி இது. தொடரும் விரிவாக......
இந்த திருமணம் மிகச் சிறப்பாக நடந்தது. நான் கல்யாண சாப்பாடு வெளுத்துக் கட்டி விடக் கூடாது என்று என் மகள் சரியாக 12.30 க்கு அழைத்தாள். ஆனால் நான் 11 .30 க்கே எல்லாம் முடித்து பீடாவுக்கு வந்து விட்டேன்.
இதில் நான் மிகவும் ரசித்த விஷயம் ஒன்று இருந்தது. ஒரு வேளை பல திருமணங்களிலும் நடந்திருக்கலாம் ஆனால் எனக்கு முதன் முறையானதால் எழுதுகிறேன். பிள்ளை தாலி கட்டும் போது போடுவதற்காக எல்லார் கைகளிலும் பூ உதிரியாக கொடுப்பதுண்டு. பலரும் அதை இருந்த இடத்தில் இருந்தே வீசுவார்கள் அநேகம் இதழ்கள் முன்னால் இருப்பவர் தலையில் தான் விழும். ஆனால் இங்கு எல்லோரும் முன்னே போய் மணமக்களின் தலையில் விழுமாறு பூ தூவினார்கள். அதற்குள் தாலி கட்டி முடித்து விட்டதனால் மணமக்கள் வந்திருப்பவர்கள் பக்கம் திரும்பி தலை வணங்கி அவர்கள் பூ தூவுதலை ஏற்றுக் கொண்டார்கள். அதனால் வயதானவர்கள் கூட நடக்க முடியாமல் நடந்து வந்து பூ தூவினார்கள்.
எனக்கு பெரியவர்களின் ஆசிக்கு தலை வணங்கும் அந்த பிள்ளைகளைப் பார்க்க பூரிப்பாக இருந்தது.
"வாழ்க மணமக்கள் பல்லாண்டு"
மற்றும் ஒரு வித்தியாசமான விஷயம் சாப்பாடு பிரமாதமாக இருந்தது. யார் கேட்டரிங் என்று கேட்க வேண்டிய நிர்ப்பந்தம் இல்லாது பீடா வைத்திருந்த இடத்திலேயே கேட்டரிங் செய்தவரின் விசிட்டிங் கார்டும் வைத்திருந்தார்கள். தேவைப்படுபவர்கள் எடுத்துக் கொள்ளும் படி இருந்தது.
அடுத்த நிகழ்ச்சியோடு விரைவில் வருகிறேன் !
எனக்கு பெரியவர்களின் ஆசிக்கு தலை வணங்கும் அந்த பிள்ளைகளைப் பார்க்க பூரிப்பாக இருந்தது.//
ReplyDeleteஇதுதான் டச்சிங்கான வரிகள்....!!!
இந்தக்காலத்து பிள்ளைங்களும் இப்பிடி இருக்காங்களேன்னு நினைக்கும் போது மனதுக்கு சந்தோசமா இருக்கு...!!!
மனோ உங்க நண்பர் சொன்னாரா உங்கள விட்டுட்டு மறுபடியும் நெல்லையில் சந்திப்பு
ReplyDeleteபட்டணம் போன அனுபவம், கல்யாணத்தில் கலந்துகொண்ட அனுபவம் நல்லா சொல்லி இருக்கீங்க.
ReplyDeleteநன்றி லக்ஷ்மி அம்மா
ReplyDelete//rufina rajkumar said...
ReplyDeleteமனோ உங்க நண்பர் சொன்னாரா உங்கள விட்டுட்டு மறுபடியும் நெல்லையில் சந்திப்பு//
குத்து பலமா இருக்கே. மனோவிற்கு தெரியாமல் பதிவர் சந்திப்பா? நடக்குமா!
அடுத்தடுத்த பதிவுகளுக்கு காத்திருக்கிறோம்.
ReplyDeleteகண்டிப்பா தினம் ஒண்ணு போட உத்தேசம் பார்க்கலாம் FOOD
ReplyDeleteசூப்பர்.. எனக்கு பீடாவாது உண்டா மேடம்..:)
ReplyDeleteநான் ரொம்ப ரசித்து சாப்பிட்ட உணவு , அது தான் பந்தியே பரிமாறியாச்சே அப்பறம் என்ன பீடா?
ReplyDeleteதேனம்மை லெக்ஷ்மணன் said...
ReplyDeleteசூப்பர்.. எனக்கு பீடாவாது உண்டா மேடம்..:)
ஹலோ, பீடா போட்டா மாடு முட்டிடும் ஹா ஹா அம்மா சொல்லலை?
வெத்தல போட்ட தான் மாடு முட்டும்னு எங்க அம்மா சொல்லிக் கொடுத்தாங்க
ReplyDelete