Bio Data !!

07 December, 2011

சிந்தியுங்கள் நண்பர்களே!!

நெல்லையில் ரெண்டு நாட்களுக்கு முன் நடந்த ஒரு செய்தி. சைக்கிளில் சென்ற ஒரு பள்ளி மாணவியின் மேல் ஒரு கார் மோதி இருக்கிறது. அந்த காரில் இருந்தது சென்னையில் மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் ஒரு மாணவன். சைக்கிளில் இருந்து தூக்கி எறியப்பட்ட பெண்ணுக்கு  மருத்துவமனை சென்று கொஞ்ச நேரத்திலேயே மரணம். 

செய்திகள் கசிகின்றன. இதில் எத்தனை சதவிகிதம் உண்மை என்பது போக போகத் தான் தெரியும். மாணவன் சென்னையில் படித்தாலும் நெல்லையை சேர்ந்தவன். கொஞ்ச காலமாகவே அந்த பெண்ணை பைக்கில் தொடர்ந்து தொல்லை கொடுத்திருக்கிறான். பள்ளியில் இருந்தும் காவல் துறையில் கம்ப்ளைன்ட் கொடுத்திருப்பதாக செய்திகள் சொல்லுகின்றன. மாணவன் தவறுதலாக இடித்தானா அல்லது வேண்டுமென்றே செய்தானா என்பது தெரியவில்லை ஆனால் பெற்றவர்களுக்கு பிள்ளையை இல்லை என்றாக்கி விட்டான்.

காதல் என்பது அந்த வயதில் வர வேண்டிய ஒன்று என்று ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் மறுப்பவரை மறந்து ஒதுங்கி செல்வது தான் மனித நாகரீகம். ஒருவரிடம் தன் காதலை சொல்லும் போதே அதற்கான பதில் 'எஸ்' என்றும் இருக்கலாம் 'நோ' என்றும் இருக்கலாம்  என்ற எதிர்பார்ப்போடு சொல்லுங்கள் . அப்பொழுது அவர்கள் சொல்லும் 'நோ' உங்களை காயப்படுத்தாது. இல்லை என்றால் 'என்னை எப்படி மறுக்கலாம்' என்று சுய கௌரவம் பாதிக்கப்பட்டதாக நினைத்து ,அதுவே எல்லை மீறும் போது
 விபரீதமாக நடந்து கொள்ள நேரிடும். "சரிகா ஷா" மரணித்த பின்னும் இன்னும் நினைவுகளில் உயிரோடு தானே  இருக்கிறாள்.

மோதிய பையன் வசதி படைத்தவனாய் இருந்தால் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி விடலாம். ஏன் ஒரு மத போதகராய் மாறி வெளி நாட்டிற்கு குடி பெயர்ந்து  கூட விடலாம். ஆனால் அந்த பெண்ணின் பெற்றோரை நினைத்து பாருங்கள். இழந்தது இழந்தது தான். எந்த பெண்ணும் கிடைக்கவில்லை என்பதற்காக யாரும் தேவதாசாகவே தேங்கி விடுவதில்லை. கடந்து செல்வது தான் புத்திசாலித்தனமும் கூட. அப்படி இருக்கையில், தன் அன்பை ஏற்றுக் கொள்ளாத பெண்ணை (அதற்கு பல நியாயமான காரணங்கள் இருக்கலாம்)  முகத்தில் ஆசிட் ஊற்றுவது, கொலை முயற்சி செய்வது, அவள் நிமதியான வாழ்க்கையை சிதைப்பது எந்த வகையில் நியாயமாக இருக்கும். 

காதலை மறுதலிப்பதை தன்னை அவமானப் படுத்துவதாக எடுத்துக் கொள்வது எவ்வளவு முட்டாள்தனமானது. அண்மையில் பார்த்து கோபம் கொண்ட ஒரு திரைப்படம் நினைவுக்கு வருகிறது. "மயக்கம் என்ன ?" ஒரு பெண்ணை எவ்வளவு முன்னெச்சரிக்கை அற்றவளாக காட்ட முடியுமோ அவ்வளவு தரம் தாழ்ந்து காட்டப்பட்ட கதை நாயகி. அவள் செய்யும் நல்ல செயல்கள் கூட திணிக்கப்பட்டதாகத் தான் தெரிகிறது. ஒரு திரைப்படம் எளிதாக விஷ விதைகளை ஊன்ற முடியும். தன்னை மறுப்பவளை எந்த வழியிலாவது அடைவது இல்லையேல் அழிப்பது என்ற கதை கண்ணோட்டம் மாறினால் தான் நடை முறையில் இருக்கும் இத்தகைய சோகங்களும் முடிவுக்கு வரும் 

 சிந்தியுங்கள் நண்பர்களே!! 

டிஸ்கி: இன்று செய்தி : தப்பிச் செல்ல முயன்ற மாணவனை காவல் துறை பிடித்து விட்டது. 

29 comments:

  1. வருத்தம் அளிக்கும் விஷயம்...சினிமாக்கரங்கள போய் மாத்திக்க சொல்றீங்களா நடக்குற கதையா!~

    ReplyDelete
  2. அவங்க எப்பவும் இப்படித்தான் திருந்த மாட்டாங்க

    ReplyDelete
  3. நெல்லை மானவி யினை பற்றி நியூசில் பார்த்தேன்.. வருத்தமான விஷயம் இது... இன்னும் இது போல் நடப்பது தான் அதிக வேதனை தருகிறது

    ReplyDelete
  4. நன்றி விக்கி காசு பணம் தவிர வேற எதுவும் குறியா இல்லாதவங்களை என்ன சொல்றது

    ReplyDelete
  5. இவங்க சிபி சினிமா காரங்களை தானே சொல்றீங்க ?

    ReplyDelete
  6. நன்றி சிநேகிதி நல்ல பொண்ணு டாக்டர் ஆகியே தீரணும்னு வெறி உள்ள பொண்ணு, matriculation ல 97 % மார்க் எடுத்த பொண்ணு கதியை பாருங்க ரொம்ப வருத்தமா இருக்கு

    ReplyDelete
  7. காதல் ஒருவனை அரக்கனாக்கவும் செய்யும் :-(

    என்ன நடந்ததென்பது இறைவனுக்கு மட்டுமே தெரியும். அதற்கான தண்டனைகள் கிடைக்கட்டும்.

    ReplyDelete
  8. சமூக சீர்கேடு, மாற்றம் அனைவர் மனதிலும் வேண்டும்... தவறான திரைப் படங்களை பார்ப்பதை பலர் தவிர்த்தாலே போதும்...

    ReplyDelete
  9. இவங்கல்லாம் திருந்தவே மாட்டாங்க.

    ReplyDelete
  10. அக்கா இந்த சோக சம்பவம் நாங்கள் இருக்கும் ஏரியாவில் நடந்தது, இதை குறித்து பலரும் பல யுகங்களை சொல்கின்றனர்...எது சரி என இறைவன் மட்டுமே அறிவான்.

    அந்த பெண்ணை பெற்றவர்கள் படும் வேதனை ஆற்றமுடியாது. அந்த மருத்துவ கல்லூரி மாணவனின் எதிர்காலம் இனி கேள்வி குறிதான் !

    விலை உயர்ந்த கார்களை வாங்கி கொடுத்து பிள்ளைகளை ஓட்ட வைத்து மகிழும் பெற்றோர்களை பற்றி என்ன சொல்வது...? வேண்டுமென்றோ,அந்த பெண்ணை அச்சுறுத்த வேண்டும் என்றோ செய்வதற்கு அந்த கார் ஒரு காரணம் ஆகிவிட்டது.

    திரைப்படங்கள் என்று இல்லை அக்கா நம்மை சுற்றி நிகழும் அத்தனையிலும் தீமைகள் நிறைந்திருகின்றன...எது சரியென பகுத்தறிகின்ற அறிவு நமக்கு இருந்தால் போதும்...இதை பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சொல்லிகொடுக்கவேண்டும்.

    ReplyDelete
  11. ஒரு திரைப்படம் எளிதாக விஷ விதைகளை ஊன்ற முடியும். தன்னை மறுப்பவளை எந்த வழியிலாவது அடைவது இல்லையேல் அழிப்பது என்ற கதை கண்ணோட்டம் மாறினால் தான் நடை முறையில் இருக்கும் இத்தகைய சோகங்களும் முடிவுக்கு வரும்//

    இவனுங்க பணம் சம்பாதிக்க என்ன வேணும்னாலும் செய்வாங்க, அவங்களுக்கு மக்களை பற்றிய கவலையோ சிந்தனையோ துளியும் கிடையாது என்பதே நிதர்சனம்...!!!

    ReplyDelete
  12. அந்த பெற்றோரை நினைத்தால்தான் மனசு நோகிறது.

    ReplyDelete
  13. வேதனையாக இருக்கிறது.

    ReplyDelete
  14. இனியும் இது போல அரக்கர்கள் உருவாகக் கூடாது என்ற ஆதங்கத்தில் வந்தது தான் ஆமீனா இந்த பதிவு

    ReplyDelete
  15. அந்த மாற்றம் ஒரு நாளில் மலராதே சூர்யா அதற்கான அணிலின் முயற்சி தான் இது

    ReplyDelete
  16. நன்றி லக்ஷ்மி அம்மா வளர்ந்த பிள்ளைகளை பறி கொடுக்கும் துயரம் சாதாரணமானதல்ல

    ReplyDelete
  17. திருத்தி எழுத முடியாத தீர்ப்பாக அல்லவா ஆகி விட்டது கௌசல்யா.வாழ்வை தொலைத்த அந்த பையன் மேலும் பரிதாபம் தான் வருகிறது

    ReplyDelete
  18. எங்கே மனோ போயிட்டீங்க எல்லோரும் வலை போட்டு தேடிக் கிட்டு இருக்காங்க

    ReplyDelete
  19. வருகைக்கு நன்றி ரத்னவேல் ஐயா !!

    ReplyDelete
  20. பணம் புரள்கிற வீட்டில் இவர்களை கண்டிக்க யாரும் கிடையாது....பாவம் ..அந்த மாணவி ...எதிர்கால கனவுகள் எத்தனை இருந்திருக்கும் ..?

    ReplyDelete
  21. Hi i am JBD From JBD

    Hi i Read Your Information its Really Very interesting & Usefull!


    Visit My Website Also : www.cutcopypaste.co.in , www.indiai365.com , www.classiindia.com , www.jobsworld4you.com

    ReplyDelete
  22. நன்றி கோவை நேரம். என்னால் இன்னும் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே வர முடியவில்லை

    ReplyDelete
  23. Hi i am JBD From JBD

    Hi i Read Your Information its Really Very interesting & Usefull!


    Visit My Website Also : www.cutcopypaste.co.in , www.indiai365.com , www.classiindia.com , www.jobsworld4you.com

    ReplyDelete
  24. திருடனாய் பார்த்து திருந்த வேண்டும். பகிர்விற்கு நன்றி அம்மா!
    இதையும் படிக்கலாமே :
    "அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?(3) எது சிறந்தது? (நிறைவுப் பகுதி)"

    ReplyDelete
  25. Relating a recently occurred pathetic incident (accident)in the city with a recently released movie is commendable.
    J.T.O., BSNL

    ReplyDelete
  26. நன்றி தனபாலன் , அறிந்து தெரிந்து புரிந்து கொண்டு தான் இருக்கிறேன்

    ReplyDelete
  27. happy ananymous to see ur comment, i think u forgot to put ur name in front of JTO BSNL put it next time

    ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!