Bio Data !!

13 December, 2011

இதழ்களை இரவல் கொடு!!

பட்ட மரம் கூட அழகாக இருக்கும், எடுக்கும் விதத்தில் எடுக்க வேண்டிய நேரத்தில் எடுத்தால்.
நான் புதிய அலுவலகம் பணி ஏற்றதும் கண்ணில் பட்டது இந்த பட்ட மரம் தான்.(ஆமாம்க ஆமாம் இது நானே எனது செல்லில் எடுத்த புகைப்படம் தான்)  அலுவலகத்தில் நுழைந்ததும் இப்படி நிற்கிறதே எடுக்க சொல்வோம் என்று எண்ணி தான் உள்ளே நுழைந்தேன்.
மாலையில் வெளியே வரும் போது அழகான நீல பின்னணியில் பட்ட மரம் கொள்ளை அழகாய் இருந்தது.
 என் எண்ணத்தை மாற்றிக் கொண்டேன். ஏதாவது மெல்லிய கொடியை
 படர விடுவோம் என முடிவு செய்து கொண்டேன்.
அருகில் இருந்தவர் என்னைக்காவது கீழே விழுந்துடுமே என்றார். அதை அன்னைக்கு பார்த்துக்குவோம். ஏதாவது மாற்று ஏற்பாடு செய்து விடலாம் என்றேன்.
பிரச்னை வந்து விடுமோ என பயந்து தானே பாதி காரியங்களை முயற்சி செய்து கூட பார்க்க மாட்டேன் என்கிறோம்.
துணிந்தவனுக்கு ஒரு நாள் சாவு.
கோழைக்கு தினம் தினம் சாவு.

***  face book எனது பழைய காதலை பரணில் இருந்து இறக்கி தூசு தட்டி பள
 பள வென ஆக்க முயற்சிக்கிறது. உதாரணத்துக்கு ஒண்ணிரண்டு கீழே :

சேர்ந்திருக்கும்
சிறு நொடிப் பொழுது
உன் இரு இதழ்களை
எனக்கு இரவல் கொடு.
                 *****
காத்திருந்து , காத்திருந்து
காயம் பட்ட
நகக்கண்கள்,
உதடுகளிடம் முறையிட்டன
காயம் பட நான்
காதலிப்பது நீயா என்று .\
                ******
நல்லாஇருக்கா??

19 comments:

  1. >>>எனது பழைய காதலை பரணில் இருந்து இறக்கி தூசு தட்டி


    ஓஹோ, காதல்ல பழசு, புதுன்னு 2 இருக்கா அவ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  2. நன்றி சிபி செந்தில் .....
    முதல் வருகைக்கு

    ReplyDelete
  3. அட !! அது காதல் உணர்வு னு இருக்கணுமோ ? பாதியை வாசகர்கள் ஊகிக்க விடுவது தானே நல்ல எழுத்தாம்

    ReplyDelete
  4. நன்றி சிபி அதை பாராட்டியதற்கும், retweet செய்ததற்கும்

    ReplyDelete
  5. படமும் அழகு கவிதையும் அழகு.

    ReplyDelete
  6. அழகா சொல்லி இருக்கீங்க சகோ...அட போட வைக்கிறது வரிகள்!

    ReplyDelete
  7. நன்றி லக்ஷ்மி அம்மா, ரெண்டிலும் ஆரம்ப பாடத்தில் தான் இருக்கிறேன்

    ReplyDelete
  8. நன்றி விக்கி, பிறர் பாராட்டும் போது கொஞ்சம் சந்தோஷமாத் தான் இருக்குது

    ReplyDelete
  9. கவிதை அருமையா இருக்கு...!!!

    ReplyDelete
  10. ஆமா, ஆபிசரின் நிச்சயதார்த்த வீட்டுக்கு போகாம இங்கே என்ன பண்ணிட்டு இருக்கீங்க...?

    ReplyDelete
  11. செல்லில் எடுத்த போட்டோவென்றாலும் அழகு.
    கவிதை வரிகள் இச்(சாரி... நச்)சுனு இருக்கு.

    ReplyDelete
  12. மனோ அதெல்லாம் போக வேண்டி இடத்துக்கு கரெக்டா போயிருவோம். அடுத்த பதிவை பாருங்க

    ReplyDelete
  13. பட்ட மரமும் படமாக்கியவிதத்தில் அழகு. பழைய காதல் உணர்வும் கவிதையானபோது அழகு. பாராட்டுகள்..

    ReplyDelete
  14. you lines are simply super super super. i written some tamil kavithai in my blog.
    please check and give ur comments
    http://alanselvam.blogspot.com/

    ReplyDelete
  15. நன்றி கீதா அடிக்கடி வருகை தாருங்கள்

    ReplyDelete
  16. selvam muniyandi தங்கள் முதல் வரவு நல்வரவு ஆகுக. கண்டிப்பாக பார்க்கிறேன்

    ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!