14.12.11 அன்று மாலை "உணவு உலகம்" பதிவர் திரு சங்கர லிங்கம் அவர்கள் அன்பு மகளின் நிச்சயதார்த்த விழா. எல்லோரிடமும் அன்பும் அக்கறையும் எடுத்து பழகுபவர் கண்டிப்பாக செல்ல வேண்டும் என்று முடிவு எடுத்தேன். முக்காலே மூணு வீசை நிகழ்ச்சிகளுக்கு அவசர அவசரமாக பணி முடிந்து செல்வதே வழக்கமா போச்சு. இவர் வேற வர்றவங்கள போட்டோ எடுத்து பதிவு போட்டுருவாரே , வீட்டுக்கு வந்து பிரெஷ்ஷா போவோம்னு நினைச்சேன்.
மதியமே கெளசல்யாவிடம் பேசி ஆறு மணிக்கு போவோம்னு சொல்லியாச்சு. எதிர்பார்த்தபடியே மாலை 4 .55 க்கு அலுவலகத்தில ஒரு அவசர வேலை வந்து விட்டது. அரக்க பரக்க மாற்று ஏற்பாடு செய்து வீட்டுக்கு பறந்து(!) லேசா ஒரு டச் அப் செய்து, நிகழ்ச்சிக்கு புறப்பட்டு பாதி தூரம் வந்த பின் தான் நினைவுக்கு வருகிறது ஹெல்மெட் எடுக்கவில்லை என்பது. இப்போ நெல்லையில் பயங்கர கெடுபிடி. வண்டி ஓட்டும் ஒருவரையும் அடையாளம் தெரியாது. எல்லோரும் கொள்ளையர்கள் போல முகமூடியோடு தான் அலைகிறார்கள்.
வழக்கம் போல் சாமியை தொந்தரவு செய்து "சாமி! எல்லா போலிஸ்காரங்களும் போண்டா சாப்பிட போய் இருக்கணும்.நான் மாட்டிக்க கூடாது" என்ற படியே அப்பாடா !ஹோட்டல் ஜானகிராம் வந்து விட்டேன். உள்ளே நுழையும் போது நிகழ்ச்சிகள் நிறைவை நெருங்கிக் கொண்டிருந்தன. என்னைப் பார்த்ததும் வாசல் வரை வந்து வரவேற்றார் சங்கரலிங்கம். இந்த அன்புக்காக தான் எப்படியாவது வந்து விட வேண்டும் என்று நினைத்தேன். அரங்கத்துக்குள் கண்களை மட்டும் நீந்த விட்டேன். கிடைத்து விட்டது தூண்டில். தம்பதி சமேதராய் ஜோ &கௌசல்யா அருகிலேயே பதிவர் ராமலிங்கம் அவர் மனைவியுடன். நானும் சென்று அவர்கள் அருகில் அமர்ந்தேன். எனக்கு திருமணங்களில் நெருங்கிய உறவினர்கள் ஒன்றாக குழுமமாக சேர்ந்து இருப்பது ஞாபகம் வந்தது .பதிவர்களும் நண்பர் என்ற நிலை தாண்டி உறவுகளாகத் தானே ஆகிக் கொண்டு இருக்கிறார்கள்.
சங்கரலிங்கம் வந்து "எறும்பு ராஜகோபாலும் " வந்திருக்கிறார் என்றார். இவரும் ஒரு பிரபல பதிவர் கொஞ்ச நாளாக "பஸ்" சிலேயே சுற்றிக் கொண்டு இருப்பதால் பதிவு போடுவதில்லை. மேலே மாடிக்கு சாப்பிட போய் இருக்கிறார் என்றார். அருகில் நின்றவர் "நான் தான் எறும்போட அம்மா" என்றார். "இவர் தான் எறும்போட சித்தி, இவர்தான் எறும்போட தங்கை " என்று ஒரு எறும்பு அறிமுகம். சிலரை பார்த்ததும் 'பச்சக்' என்று பிடித்து போகும். அப்படித்தான் ராஜகோபாலின் அம்மாவும். கலகலப்பான பெண்மணி. சங்கரலிங்கம் சாரோட மனைவி இடமும் அறிமுகம் ஆகிக் கொண்டோம்.
ராஜகோபாலை பார்க்கலாம் என மாடிக்கு போனால் அவர் இன்னொரு லிப்ட்டில் கீழே வந்து விட்டார். கண்ணாமூச்சி ! நான், கௌசல்யா, அவர் கணவர் மூவரும் சாப்பிட சென்றோம். 'அபிநயா ஹாலை' பார்த்ததும் மலரும் நினைவுகள். அங்கே தான் நெல்லை பதிவர்களும் மற்றவர்களும் சந்தித்தோம். அறையின் ஒரு ஓரமாக ஆபிசர் பெல்டுடனும் (இவர் நிகழ்ச்சியை விட்டு இங்கே எங்கே வந்தார்?)மனோ அரிவாளுடனும், சிபி பசையுடனும்
(காப்பி & பேஸ்ட் க்காக ) செல்வா ரம்பத்துடனும், சித்ரா இடுப்பில் இரு கை ஊன்றி "ஹா!!ஹா!!" என சிரிப்புடனும் இன்னும் மற்றவர்கள் எல்லாம் அவரவர் தம் ஆயுதங்களுடனும் நிற்பது போல் தோன்றியது. என்ன ஒரு மகிழ்ச்சியான தருணம்!!
(காப்பி & பேஸ்ட் க்காக ) செல்வா ரம்பத்துடனும், சித்ரா இடுப்பில் இரு கை ஊன்றி "ஹா!!ஹா!!" என சிரிப்புடனும் இன்னும் மற்றவர்கள் எல்லாம் அவரவர் தம் ஆயுதங்களுடனும் நிற்பது போல் தோன்றியது. என்ன ஒரு மகிழ்ச்சியான தருணம்!!
சிறப்பான சாப்பாடு.ஸ்பெஷல் ஐட்டம் சைவ கொத்து பரோட்டா. கௌசல்யாவுக்கும் அவர் கணவருக்கும் இடையே இருக்கும் அன்னியோன்னியம் எனக்கு எப்போவுமே பிடிக்கும். இப்போதும். அவர்கள் இருவரும் சேவை செய்வதில் இரு கரங்களையும் இறுக்கமாக சேர்த்துக் கொண்டு இருக்கிறாகள். மென்மேலும் வளர வாழ்த்துக்கள்!!
திடீரென்று கௌசல்யாவின் கணவர் யாரையோ பார்த்து உற்சாகமாக கை அசைத்தார் . யாரென்று பார்த்தால் "திவான்ஜி"
நாங்கள் கீழே செல்லும் போது ராஜகோபால் மறுபடியும் மாடி ஏறி விடக் கூடாது என்பதால் அலைபேசியில் தகவல் அனுப்பி அவசர அவசரமாக கீழே சென்றோம். எங்களைப் பார்த்ததும் சங்கரலிங்கம் ஒருவரைப் பார்த்து "கண்ணா" என்றழைத்தார். செல்லப் பெயர் வைப்பதில் தட்டுப்பாடு. அநேகம் பேர் "கண்ணா" என்றே வைத்துக் கொள்கிறார்கள். ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆகியதும் பேச்சு பதிவுலகம் பக்கம் திரும்பியது. பதிவுலகம் எப்படி "யாதும் ஊரே !யாவரும் கேளிர்!" என்று வெளி நாட்டில் இருப்பவர்களையும் நெருக்கமாக்கி வைத்திருக்கிறது என்று வியந்து கொண்டோம். எறும்பு ராஜகோபால் பல விஷயங்கள் பகிர்ந்து கொண்டார். அவர் பேசும் ஸ்டைல் நன்றாக இருந்தது.
நேரமாகி விட்டதால், அனைவருக்கும் நன்றி சொல்லி விடை பெற்றோம். நிச்சயதார்த்தத்துக்கு தாம்பூலப் பை கொடுத்தது எனக்கு தெரிந்து இங்கே தான் முதன் முதல். கேட்ட போது ராஜகோபால் "ஒரு பொண்ணு தானே செய்வார்" என்றார். அப்பொழுது பொண்ணைப் பார்க்க, வீடியோ காரருக்கு இரு கைகளையும் சேர்த்து 'மெகந்தி போஸ்' கொடுத்துக் கொண்டு இருந்தாள்.
மீண்டும் சாமியை வேண்டிய படியே போலீஸ் மாமாவிடம் மாட்டிக் கொள்ளாமலே வீடு வந்து சேர்ந்தேன். நிகழ்ச்சியை பற்றி ஒண்ணும் சொல்லலையேனு பார்க்கிறீங்களா அது ஆபீசர் நிச்சயம் பதிவு போடுவார்.
மணமக்கள் நீடுழி வாழ வாழ்த்து மட்டும் சொல்லிக்கிட்டு நான் 'எஸ்' ஆகிறேன்.
மணமக்கள் நீடுழி வாழ்க..உங்க கலந்துரையாடல் அருமை சகோ!
ReplyDeleteஆஹா சுவாரசியமானபதிவு. எங்களையும் உங்க கூடவே அழைத்து சென்று விட்டீர்கள் நன்றி
ReplyDeleteஅக்கா எப்படி இவ்வளவு ஸ்பீடா போஸ்ட் போடுறீங்க...?! சூப்பர்க்கா !!
ReplyDeleteநான் போன மாசம் நடந்த ஒன்றை பற்றி இன்னும் எழுதுறேன் எழுதுறேன் எழுதிட்டே இருக்கிறேன்...!! :))
சுவாரசியமா சொன்ன விதம் மிக ரசிக்க வைத்தது...அழகு.
அது எப்படி போலிஸ்கார மாமா யாரும் உங்களை கண்டுக்காம போனாங்க... :))
ஆஹா நானும் உங்க கூடவே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஃபீலிங்...!!!
ReplyDeleteஆபிசர் பெல்டுடனும் (இவர் நிகழ்ச்சியை விட்டு இங்கே எங்கே வந்தார்?)மனோ அரிவாளுடனும், சிபி பசையுடனும்
ReplyDelete(காப்பி & பேஸ்ட் க்காக ) செல்வா ரம்பத்துடனும், சித்ரா இடுப்பில் இரு கை ஊன்றி "ஹா!!ஹா!!" என சிரிப்புடனும் இன்னும் மற்றவர்கள் எல்லாம் அவரவர் தம் ஆயுதங்களுடனும் நிற்பது போல் தோன்றியது. என்ன ஒரு மகிழ்ச்சியான தருணம்!!//
டெரர் ஃபீலிங்'ன்னு சொல்லுங்க, ம்ம்ம்ம் ஆண்டவா இன்னொருமுறை இப்படி ஒரு சந்திப்பு நடக்காதான்னு ஏக்கமா இருக்கு, முன்பு அறிமுகமானதை விட இன்னொரு சந்திப்பு நடக்கும் பட்சத்தில் இன்னும் பாசம் அதிகமாக கூடும் இல்லையா....!!!
நிகழ்ச்சிக்கு நேரில் வர முடியாத குறையை போக்கி விட்டீர்கள்.
ReplyDeleteநன்றி விக்கி
ReplyDeleteநன்றி லக்ஷ்மி அம்மா ஏதோ நம்மால் ஆன உதவி
ReplyDeleteஎல்லா போலீஸ் மாமாவும் போண்டா சாப்பிடப் போயிருப்பாங்க கௌசல்யா
ReplyDeleteon line works for all என்னப்பா செய்யணும் நாங்க ?
ReplyDeleteசரியா சொன்னீங்க மனோ நானும் அடுத்த பதிவர் சந்திப்பை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்
ReplyDeleteநன்றி கோகுல்
ReplyDeleteநேரிலே போய் நிகழ்ச்சியை பார்த்தது போல
ReplyDeleteஇருந்தது சகோதரி.
இறைவன் அருளுடன் மணமக்கள்
எல்லா வளமும் பெற்று நீடூழி வாழ நான் வேண்டுகிறேன்.
நன்றி மகேந்திரன்.
ReplyDeleteநன்றி FOOD .இன்னும் கொஞ்சம் முன்னாடி வந்திருந்தா நிகழ்ச்சியையே லைவ் டெலிகாஸ்ட் பண்ணி இருக்கலாம் தொழிலின் செல்லத் தொல்லை !!
ReplyDeleteகல்யாண வீட்டுல எல்லோரும் சேர்ந்து கலக்கலாம்.
ReplyDeleteவாங்க ராஜா !! we missed u !
ReplyDeleteநேரிலே பார்ப்பதுபோல மிக நேர்த்தியாக
ReplyDeleteபதிவு செய்துள்ளீர்கள்
நீங்கள் வேண்டிக்கொண்டபடி போலீஸ்காரர்கள்
போண்டா சாப்பிடப் போனது குறித்து நானும் மகிழ்ந்தேன்
விழா சிறப்புறநடந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி
மனம் கவர்ந்த பதிவு.வாழ்த்துக்கள்
உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி
ReplyDeleteநன்றி ரமணி சார், அடுத்த பதிவர் சந்திப்புக்கு நெல்லைக்கு கண்டிப்பாக வாங்க
ReplyDeleteநன்றி ராஜ கோபால் அம்மா பற்றி எழுதியதை அவர்களிடம் கண்டிப்பாக சொல்லுங்கள்
ReplyDelete