Bio Data !!

20 June, 2011

நெல்லையில் பதிவர் சந்திப்பு !!!

நெல்லையில் பதிவர் சந்திப்பு !!!
ஒரு பத்து பேர் கூடுவோம்னு நினைத்திருந்தேன். அரங்கம் நிறைந்த காட்சி என்பது போல் அரங்கம் நிறைந்த பதிவர்கள். இள வயது முதல் முதியோர் வரை அட ! என்னை சொல்லலப்பா. 
அழகாக ஆரம்பித்து ருசியாக முடிந்தது. 
நெல்லை பதிவர் சந்திப்பை ஆன் லைனில் பார்க்க கூடி இருந்தவர்களுக்கு அல்வா கொடுப்பதோடு கூட்டம் தொடங்கியது. 

ஆன் லைனில் பதிவு செய்ய திரு சங்கரலிங்கம் ஆன மட்டும் முயற்சி செய்தார். பின் கூட்டம் தொடங்குவது தள்ளிப் போக வேண்டாமே என்ற எண்ணத்தில் அந்த முயற்சியைக் கை விட்டார். 

பதிவர்கள் அனைவரும் தங்களையும், தங்கள் வலைப்பூக்கள்  பற்றியும் அறிமுகம் செய்தனர். நான் என் வண்ணங்களில் அவர்களை அறிமுகம் செய்கிறேன். 

'உணவு உலகம்' திரு சங்கரலிங்கம் மிக நேர்த்தியாக தொடங்கி வைத்தார்.  ஒரு தீவிரமான பத்திரிகையாளரைப் போல் பின்னால் குறிப்பெடுத்துக் கொண்டிருப்பவர் ஷர்புதீன்.அருகில் மெகந்தி இட்டது வெட்டிப் பேச்சு சித்ராவின் கை. அன்போடு அதை பிடித்துக் கொண்டிருப்பது 'வாத்தியாரம்மா'  என்று பட்டம் பெற்ற கௌசல்யாவின் கை. 

அழகோடு திறமையும் சேரும்போது மற்றவர் கவனத்தை தன் பேச்சின் பக்கம் ஈர்ப்பது சுலபமாகிறது. சிபி அவர்கள் ஒரு நீண்ட தன்னிலை விளக்கம் கொடுத்த பின், ஷங்கர் கொடுத்த உரை. அருகில் அமர்ந்திருப்பவர் 'வலைச்சரம்' சீனா ஐயா அவர்கள். 
சிபியின் தன்னிலை விளக்கம். சிபி அவர்களுக்கு அங்கே சொல்லாத ஒன்று இங்கே. ஷங்கர் சொன்னது போல் வெளி நாடுகளில் தனித்து இருப்பவர்களுக்கு உங்களை போன்றவர்களின் நகைச்சுவை தான் உயிர்ப்பூட்டுகிறது.    10 ,000 க்கும்    மேற்பட்ட நகைச்சுவை துணுக்குகள் எழுதி இருப்பதை சொன்ன போது மலைத்து போனேன். நகைச்சுவை ஒரு வரம். நல்ல விஷயங்கள் நகைச்சுவையோடு சொல்லும் போது எளிதில் சென்றடையும். சிந்திக்கலாம். 
அவரின் வலது புறம் இருப்பவர் 'பெயர் சொல்ல விரும்பவில்லை' இடது புறம் இருப்பவர்கள் செல்வா, அவரை அடுத்து இருப்பவர் கதைகள் எழுதுவதாக சொன்னார்.
மைக் பிடித்து எளிமையாக அதே நேரம் தெளிவாக பேசியவர் ரத்னவேல்  ஐயா அவர்கள். அதை கண் மூடி ஆழ்ந்து கவனிப்பவர் 'மன அலைகள்' கந்தசாமி ஐயா அவர்கள் 
 வந்திருந்தவர்களில் மிக சீனியர் பதிவர் 'வெடிவேல் ' சகாதேவன் அவர்கள். அவரின் ஈடுபாடு என்னைக் கவர்ந்தது. என் நண்பர் ஒருவரின் சித்தப்பா என்று அறிந்தது கூடுதல் மகிழ்வு. அருகில் அண்ணன் தம்பி போல் இருவர். அவர்களில் ஒருவர் நாஞ்சில் நாட்டவர். மற்றவர் கோவில்பட்டிக் காரர். 
மணிஜி அவர்கள் லேட் ஆக வந்ததால் அவர்களின் படம் இறுதியாக. ரொம்ப ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக இருந்தது போல் இருந்தது. ஆனால் அனைத்து விஷயங்களையும் உன்னிப்பாக கவனித்தது தெரிந்தது.
இது தவிர இன்னும் பல ஆண் பதிவர்களும், ஐந்து பெண் பதிவர்களும் ஒரு பதிவரின் மனைவி பார்வையாளராகவும் சேர்த்து சுமார் முப்பத்தைந்து பேர் கூடி கலகலப்பாக முடிந்தது பதிவர் கூட்டம். பெண் பதிவர்கள் புகைப்படம் தவிர்க்கப்பட்டது. ஆண் பதிவர்களில் மற்றவர்கள் படம் தெளிவின்மை காரணமாக போட முடியவில்லை. மன்னிக்கவும். 
இறுதியாக நேரில் வந்திருந்த பதிவர்களுக்கு அல்வா கொடுக்கப் பட்டது. அவரவர் விருப்பம் போல் தரும் நன்கொடை வசூலித்து அனாதை இல்லத்துக்கு தரப்போவதாக அறிவிப்பு வந்தது. நல்ல மனம் படைத்த பலரால் கணிசமான தொகை வசூலிக்கப்பட்டது. சூப்பரான உணவு  நாவையும் வயிற்றையும்   நிரப்ப "அப்பாடா இன்னும் ஒரு வருடத்துக்கு தாங்கும்' என்ற நிறைவோடு வீடு வந்து சேர்ந்தேன். 
நன்றி பதிவர் சந்திப்பை நடைமுறைக்கு கொண்டு வர உதவிய நண்பர்கள் அனைவருக்கும், முக்கியமாக மாலுமியாக வழி நடத்திய திரு சங்கரலிங்கம் அவர்களுக்கு.

30 comments:

  1. Neat and nice sharing. I request u to avoid fotos of unwilling bloggers.

    ReplyDelete
  2. சந்தித்தில் மகிழ்ச்சி..நன்றி அம்மா...

    ReplyDelete
  3. வணக்கம் வணக்கம்.....

    அருமையா விளக்கி இருக்கீங்க ரொம்ப சந்தோசம்...!!!

    ReplyDelete
  4. அருமையான பதிவு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. அருமையான ரிப்போர்ட்
    கலந்து கொள்ளாமல் போன வருத்தம் சற்று குறைந்தது

    ReplyDelete
  6. மிக அருமையாக தொகுத்து உள்ளீர்கள் அக்கா. உங்களின் அறிமுகம் இந்த சந்திப்பின் வாயிலாக எனக்கு கிடைத்தது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. சந்திப்பு சிறப்பாக முடிந்ததிற்கு உங்கள் எல்லோரின் ஒத்துழைப்பு முக்கிய காரணம்.

    நன்றிகள் + வாழ்த்துக்கள் அக்கா

    ReplyDelete
  7. பதிவர் சந்திப்பினைச் சுவை பட எழுதியிருக்கிறீங்க.
    நன்றிகள் சகோ,

    விகடன் மூலமாக எங்கள் ஊர்களில் நாம் சிபியின் நகைச்சுவைகளைப் படித்திருக்கிறோம்.
    ஆனால் இன்று வலைப் பதிவு மூலமாக சிபியோடு பழகுகின்ற வரப்பிரசாதத்தினை வலைப்பதிவு எமக்குத் தந்திருக்கிறது.

    ReplyDelete
  8. thank u food. ஆனால் சில பெரியவர்களின் புகைப்படங்கள் போடும் போது சில சின்ன பிள்ளைங்க சேர்ந்து வந்திடுது. அது வல்லாமல் மற்றவை தவிர்க்கப்பட்டன

    ReplyDelete
  9. நன்றி மணிஜி. போட்டோ நல்லா வந்திருக்குதா?

    ReplyDelete
  10. நன்றி மனோ சார், இருந்தாலும் கொஞ்சம் ஏமாத்திட்டீங்க. நான் வேற மாதிரி நினைத்து வந்திருந்தேன்.

    ReplyDelete
  11. சரிங்க ஷங்கர். பஸ் ஒரு பக்கம் இருந்தாலும் வலைப்பூவிலும் எழுதலாமே?

    ReplyDelete
  12. நன்றி ரத்னவேல் ஐயா. மனைவியுடன் வந்தது சந்தோஷமாக இருந்தது.

    ReplyDelete
  13. u missed a good chance paarvaiyaalan
    இருந்தாலும் அந்தக் குறை தெரியக் கூடாதென நினைத்தேன். ஓரளவுக்கு கவர் பண்ணிட்டேன்

    ReplyDelete
  14. நன்றி. கௌசல்யா. சிறப்பு வாழ்த்துக்கள் உங்கள் அண்ணாவுக்கு துணையாய் நின்று உதவியமைக்கு

    ReplyDelete
  15. நன்றி நிரூபன் தங்கள் முதல் வரவு நல்வரவு ஆகுக. ஆன் லைனில் உங்களை ஏமாற்றிட்டாங்களா?

    ReplyDelete
  16. அம்மா அழகாக .அருமையாக இருக்கு ..எனக்கும் அடுத்த பதிவர் சந்திப்பு வரை நினைவுகள் பசுமையாக இருக்கும் ...

    ReplyDelete
  17. நீங்க பிரஸ் ரிப்போர்ட்டரா ? பிரமாதமா தொகுத்து வழங்கி இருக்கீங்களே? பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள் மேடம்..

    ReplyDelete
  18. அருமையான பதிவு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. ஒரு சில காரணங்களுக்காக நீங்க விடுத்த வேண்டுகோளை ஒரு சில காரணங்களுக்காக கடைப்பிடிக்க முடியவில்லை. sorry இம்சை அரசன் பாபு.ஆனா ஒண்ணு நீங்க வச்சிருக்கிற பேருக்கும் உங்களுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லை

    ReplyDelete
  20. நன்றி சி பி செந்தில் குமார். u r really an interesting personality

    ReplyDelete
  21. நன்றி மாலதி. தங்கள் முதல் வரவு நல்வரவு ஆகுக

    ReplyDelete
  22. vallisimhan ukkaaga, naaikkutti manasu
    hi, unga blog il comment seyya mudiyavillai. you have done a marvelous job of covering the blogmeet. congrats.

    Welcome to my new Chatroll!

    ReplyDelete
  23. அருமையான பதிவு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  24. உங்களை போன்றே அழகான அமைதியான ஆர்பாட்டம் இல்லாத தொகுப்பு. உங்களை மறுபடியும் சந்திக்க எனக்கு ஆவல். வருவேன் தோழி.

    ReplyDelete
  25. நேசமித்திரன், உங்களை அழைக்க விட்டுப் போனது வருத்தமாக இருந்தது. நீங்கள் வெளி நாடு சென்றிருப்பீர்கள் என்று நினைத்தேன்

    ReplyDelete
  26. நன்றி ஜோசெபின். எனக்கும் பதிவர் சந்திப்பு ஒரு வடிகாலாய் இருந்தது. அடிக்கடி எங்கேயாவது சந்திக்க வாய்ப்பிருந்தால் நலமாக இருக்கும். 'திருமணம் ஆனதும் சொந்த வீட்டிலேயே அயலானை உணர்கிறோம் " என்று நீங்கள் சொன்னது என்னை சிந்திக்க வைத்தது. நாங்கள் மூன்று பேரும் பெண்கள் ஆனதால் நான் அதைசிந்தித்ததில்லை

    ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!