Bio Data !!

20 May, 2014

அறம் சோளிங்கர் தொட்டி போன்ற கனமான நாவல்கள் படித்து முடித்து மனம் கனத்துக்
கிடந்ததால் ஒருlight reading போவோம் என அநுத்தமா வின் 'உள்ளங்கள்' வாசிக்கத் தொடங்கினேன். முதலில் சாதரணமாகத்தான் இருந்தது. போக போக at a stretch வாசித்து முடித்து தான் கீழே வைத்தேன் .அழகான பணிக்கு செல்லும் திருமணத்தை விரும்பாத மூன்று பெண்கள்.வயதான தாய் தந்தையர்.ஒரு குட்டி தம்பி.கதை முடியும் வரை நாமும் அந்த குடும்பத்தின் ஒரு அங்கமாக நினைக்க வைப்பது தான் கதையின் சிறப்பு. பாலசந்தர் இதை படமாக எடுக்கலாம். இன்னொரு அவள் ஒரு தொடர்கதை கிடைக்கும். அது தவிர இரண்டு குறு நாவல் கள். இரண்டும் நல்ல நட்பை எடுத்துக் காட்டும்.வாசிக்கலாம்