Bio Data !!

27 October, 2009

ஹையோ!! ஹையோ!!

நயன்தாராவுக்கு கோயில் கட்ட போறாங்கலாம் நம்ம நயன்ஸ் மறுக்க மறுக்க!
ஆந்த்ராவில ஒரு "அ" னாவுக்கு அதாங்க நம்ம அனுஷ்காவுக்கு கோயில் கட்டப்போராகலாம் .
இந்த ரசிகர்களோட psychology எ என்னனு புரிய மாட்டேன்கிது . எல்லாத்திலையும் தீவிரம்.
ஒரு கோயில் கட்ட என்ன தகுதி வேணும்??
பாலாபிஷேகம் செய்யும் நடிகர்களின் ரசிகர்களுக்கு அவர்களுக்கு கோயில் கட்டணும்னு ஏன் தோன்ரதில்லை??
கோயில் கட்டும் அளவுக்கு மதிக்கும் குஷ்பூ தன் மனதிற்கு சரியென பட்டதை சொன்னால் ஏன் இவ்வளவு ரகளை ??
ஒண்ணுமே புரியல போங்க !!

எதையாவது செய்து மற்றவர்களை தன் பக்கம் திருப்ப முக்கியமாக நயன்தாராவை தன் பக்கம் திருப்ப செய்யும் செயலா (சதியா) இது ?

எனது கணிப்பு சரியானு தெரியலை. முகத்தில கர்வம் கொஞ்சம் தூக்லா தெரியற பெண்களிடம் நம்மூர் பிள்ளைகளுக்கு கொஞ்சம் கிர்ரடிக்கும்னு நினைக்கிறேன்.
" காணாக் கடவுளின்
சொர்க்க தேசத்துக்கு
கதவு ஏது.
நுழை வாயில் எங்கே?"
-சத்குரு
ஒரு பக்கம் கோயிலில் குடிஇருக்கும் கடவுளை நம்பாத ஒரு கூட்டம்.மறு பக்கம் மனிதனை கடவுளாக்கி பூஜிக்கும் ஒரு முட்டாள் கூட்டம்.
நம்ம எப்ப தான் தராசு முள் போல அங்கயும் சாயாம இங்கயும் சாயாம நடுவாந்தரமா இருக்க பழகுவோமோ தெரியல.

நவனாலி


அந்த காலத்தில் ஒரு குறிப்பிட்ட இனத்தில் உள்ள சிறுமிகளுக்கு ஒன்பது தங்க உருண்டைகளும் பத்து பவள மணிகளும் கோர்க்கப்பட்ட சரடு ஒன்று கட்ட படும். அதன் பெயர் தான் நவனாலி. பின்னர் திருமணம் நிகழ்ந்து கணவன் கட்டிய திருமாங்கல்யம் வந்ததும் இது கழற்றப்படும் . நவனாலி கழற்றப்படும் சடங்கிற்கு பெயர் "விளக்கிடு கல்யாணம் "
முன் காலத்தில் முஸ்லிம் மன்னர்கள் படையெடுத்து வரும் போது நாட்டில் உள்ள அழகான பெண்களை கவர்ந்து சென்று அந்தப்புரத்தின் எண்ணிகையை கூட்டினர். அவர்கள் ஒரு வரையறை வைத்திருந்தனர். திருமணம் ஆன பெண்களை அவர்கள் தொடுவதில்லை . தங்கள் பெண்களை பாதுகாக்கவே ஏற்பட்ட இந்த நவனாலி பின்னாளில் ஒரு அணிகலனாகிப் போனது.
நம் நாட்டில் சடங்குகளின் மூலக் காரணத்தை சொல்லாமல் போனதுதான் தவறாகியது. காரணம் புரியவில்லை என்றாலும் சடங்குகளை மதிப்போம் . அதுவும் இல்லை என்றால் சடங்கு செய்பவர்களின் மனதை மதித்து விவாதம் பண்ணாமல் விலகுவோம் என்ன நான் சொல்றது !!

10 October, 2009

செல்ல நாய்க்குட்டி மனசு

விரட்ட விரட்ட பின்னே வரும் நாய்க்குட்டி போல் என் மனசு தொந்தரவு செய்கிறது. பின்னூட்டம் இட்டது கூட ஒரு பதிவும் போடலாமே! விரட்டியும் ஆசை போகாததால் இந்த பதிவு. வல்லிக்கண்ணன் எழுதிய ஒரு புத்தகத்தில் "சொரி மணல்" பற்றி இருந்தது. அவர் எழுதியது கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் முந்தியது.தாமிரபரணி ஆற்றை கடக்கும்போது வெள்ளைதுரை குதிரையோடு சொரி மணலில் மறைந்து போனதை குறிப்பு இட்டிருந்தார்.இன்னும் அடங்கவில்லை சொரி மணலின் பசி. பள்ளியில் இருந்து மதிய உணவுக்கு வீட்டுக்கு வந்தான் மாணவன். இதோ வந்திரேன்னு போனவன் ஆற்றுக்கு குளிக்க போய் விட்டான். குறும்புக்கார மாணவர்கள் சிலரின் ஆசையால் அங்கே ஒரு உயிர் இழப்பு நேர்ந்தது. மகன் வந்ததும் சாப்பிடலாம்னு தாய் காத்திருக்க அங்கே மகனையே தின்று விட்டது சொரி மணல். மலைகளைக் குடைகிறோம். நிலங்களைத் தோண்டி வானுயர கட்டடங்கள் அமைக்கிறோம். இந்த சொரி மணலின் வாய்க்கு ஒரு பூட்டு போட்டால் எவ்வளவு நல்லா இருக்கும். என்றோ ஒரு நாள் தான் நடக்கிறது என்பதால் உயிரின் விலை மலிவாய்ப் போகலாமா?
இது கன்னிப் பதிவு தான்.
போக போக அசத்திருவோம்ல!