Bio Data !!

13 July, 2011

செல்ல பூனைக்குட்டி!!

அது எங்கள் செல்ல பூனைக்குட்டி.
அதற்கென்று தனியாய் எதுவும் பெயர் இல்லை.
அழகான செங்கல் நிறத்தில் உடம்பெல்லாம் வரி வரியாய்.
நான் காலை நேரத்தில் வெளியே சென்று வந்தால் தனக்கு பிடித்தமான உணவு கிடைக்கப் போகும் ஆர்வத்தில் துள்ளி குதித்து ஓடி வரும் தன் வாலை செங்குத்தாக உயர்த்தி மெல்ல அதிர்ந்த படி. 
காலை நேர அவசர வேலைகளுக்கு நடுவேயும் அதன் சின்ன சின்ன குறும்புகளை ரசிப்பது பிடிக்கும்.

இப்படித்தான் ஒரு நாள்.
கிட்சனின் ஒரு ஓரத்தில் காய்ந்த சின்ன வாழை இலைத் துண்டு சுருண்டு கிடந்தது.
அதைப் பார்த்ததும் தன் எதிரியோ என்று என் செல்ல பூனைக்குட்டிக்கு சந்தேகம்.‌
புலி பாய்வதற்கு முன் பதுங்குவது போல் பதுங்கி அமர்ந்தது.
மெல்ல மெல்ல முன்னேறியது. அது எட்டும் தூரம் வரும் முன்னேயே, ஒரு காலை மட்டும் நீட்டி அதை தொடப் பார்த்தது.
பின் மெல்ல முன்னேறியது. இப்படியே அது காலுக்கெட்டும் தூரம் வரும் வரை மெல்ல முன்னே ஊர்ந்தது.எட்டும் தூரம் வந்தவுடன் நான் வேணுமென்றே ஒரு பாத்திரத்தால் சத்தம் செய்ய அது நிச்சயம் தன் எதிரி தான் என்று உறுதி செய்தபடி பின்னேறியது.

மறுபடியும் அதே முன்னேறல்.
இப்படியாய் அதன் அருகே வந்து விட்டது. அதன் காலும் அந்த இலை மேல்  பட்டு விட்டது. உடனே அது எதிர் தாக்குதல் செய்யும் என்று கொஞ்சம் பின்னுக்கு வந்தது.
அசைவில்லை என்றதும் தைரியமாய் அருகில் போல் இரண்டு கால்களாலும் புட் பாலை கோல் பாய்ண்டுக்கு கொண்டு செல்வது போல் தட்டியது.
அது வரை இருந்த கவனமும் முன்னெச்சரிக்கையும் நீங்க, அந்தக் காய்ந்த வாழை இலையை நன்கு கால்களால் நையப்புடைத்து அங்கிருந்து நீங்கியது.

எனக்கும் வாழ்வின் ஒரு தத்துவத்தை உணர்த்தியது.
இப்படியாகத்தான் நாமும் இல்லாத, கற்பனையான பிரச்னைகளுக்காக  பயந்து, அதனிடம் இருந்து நம்மைக் காப்பாற்றி கொள்ள முயற்சி எடுத்து, நமது நேரத்தை விரயம் செய்கிறோம். 
சிறிது நேரம் கழித்து வந்தாலே மனைவி மேல் கணவனுக்கு சந்தேகம்.
ஏதாவது புது விஷயத்தை பற்றி பேசி விட்டால் யாரிடம் இருந்து தெரிந்து கொண்டு இருப்பாள் என்று உறுத்தல்.
என்றும் இல்லா திருநாளாக, அழகாக உடை உடுத்தி கணவன் வேலைக்கு புறப்பட்டால் அலுவலகத்தில் ஏதும் புது நட்பு கிடைத்திருக்குமோ என மனைவிக்கு ஆர்வம். பெண் குழந்தைகள் அதிக நேரம் அலைபேசியில் சிரித்து சிரித்து பேசினால் அந்தப்புறம் இருப்பது ஆடவன் தானோ என பெற்றோருக்கு மன உழற்சி .இது தான் போகட்டும் என்றால் நல்ல நட்புக்குள்ளே கூட பொசஸ்சிவ்நஸ் தரும் கற்பனை அதிர்வுகள்.

எல்லாம் இதைப் போன்றது தான். ஒவ்வொரு நிகழ்வும் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமான அனுபவம் தரும். சிக்கல்களைப் பிரிப்பதில் ஒவ்வொருவர் செயல்பாடு தனித்துவம் நிரம்பியதாய் இருக்கும்.
 பிறரது அனுபவத்தைக் கேட்டு நமக்கும் அதே தான் நேரும் என்று நினைக்க வேண்டியது இல்லை.இதற்கு சரியான உதாரணம், தலையணை மந்திரம் பற்றி பெரிசுகள் சொல்லி கொடுப்பது. சில நேரங்களில் பிரச்னைக்கு வழியை நாம் சிந்திக்காமல் பிறரது அறிவுரைகளை கேட்பதாலேயே துயர் தீரா முனைக்கு கொண்டு செல்லப்படுவதும் உண்டு.நாம் தேர்ந்தெடுக்கும் தீர்வே எல்லா சமயங்களிலும் ஒரே போல இருப்பதில்லை. சமயத்திற்கு ஏற்றபடி, சந்தற்பத்திற்கேற்ற படி மாறும்.  எந்த சிக்கலும் வந்த பின் அதற்கான தீர்வைப் பற்றி சிந்திப்போம்.
யூகங்களுக்கும், கற்பனைகளுக்கும் இடம் கொடுத்தால் நமது பொன்னான நேரமும், உடல் மன நலமும் தான் பாதிக்குமே தவிர வேறெதுவும் நடப்பதற்கில்லை

ஏதோ  சொல்றதை  சொல்லிப்புட்டேன் , செய்றதை செஞ்சுக்கங்க.  


29 comments:

  1. நச்சுன்னு சொல்லி இருக்கீங்க சகோ நன்றி!

    ReplyDelete
  2. பரவாயில்லையே.... வாழை இலை ஒரு பூனை வச்சு ஒரு உலக மகா தத்துவம் சொல்லியிருக்கிங்க. அருமை/

    ReplyDelete
  3. மியாவ் மியாவ் ஃப்ரம் லொள் லொள் . ஹா ஹா

    ReplyDelete
  4. >>அதிக நேரம் அலைபேசியில் சிரித்து சிரித்து பேசினால் அந்தப்புரம் இருப்பது ஆடவன் தானோ என பெற்றோருக்கு மன உழற்சி

    அந்தப்புரமா? அந்தப்புறமா?

    ReplyDelete
  5. ஹா ஹா ஹா ஹா நல்ல ரசனை உங்களுக்கு, அது எழுத்தில் தெரிகிறது வாழ்த்துக்கள்.....

    ReplyDelete
  6. பூனைக்குட்டி உணர்த்திய வாழ்வின் தத்துவத்தினையும், குறும்புச் செயலினையும் பகிர்ந்திருக்கிறீங்க. அருமையான நினைவு மீட்டற் பதிவு.

    ReplyDelete
  7. அருமையான யோசிக்க வைக்கும் பதிவு அம்மா .

    ReplyDelete
  8. நன்றி விக்கி, சந்தோஷமா இருக்கு

    ReplyDelete
  9. ஒரு சின்ன திருத்தம் தமிழ் வாசி, "வாழை இலை " இல்லை "காய்ந்து போன வாழை இலை "

    ReplyDelete
  10. உங்கள் பின்னூட்டத்தை ரசித்தேன் சிபி

    ReplyDelete
  11. அந்தப்புறம் தான் சரி செய்து விட்டேன் நன்றி

    ReplyDelete
  12. வாழ்த்து சொல்றதுக்கு கூட சிவாஜி மாதிரி சிரிப்பா வாட் மனோ ?

    ReplyDelete
  13. நாம் ஏற்றுக் கொள்ள தயாராய் இருந்தால் சருகுகள் கூட தத்துவம் தருகின்றன. நன்றி நிரூபன்

    ReplyDelete
  14. நன்றி பாபு. உங்களை மறைக்கச் சொல்லி கட்டளை இட்டதால பாருங்க உணவு உலகம் என்னையும் சித்ராவையும் க்ளோஸ்அப் ல போட்டு மிரட்டிட்டார்

    ReplyDelete
  15. உங்களுக்கு மிகவும் பிடித்தது நாய் குட்டியா அல்லது பூனை குட்டியா ?

    ReplyDelete
  16. எனக்கு பிடித்தது நாய்க்குட்டி, அதுக்கு பிடித்தது பூனைக்குட்டி எப்பூடி ?

    ReplyDelete
  17. பார்க்கும் விதத்தில் பார்க்கத் தெரிந்தால்
    ஒரு சிறு நிகழ்வு கூட எவ்வளவு பெரிய
    தத்துவத்தை சொல்லித் தருகிறது
    தரமான பயனுள்ள பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. நன்றி ரமணி சார், உங்களைப் போன்ற பெரியவர்கள் பாராட்டும் போது புளகாங்கிதம் அடைகிறது மனது

    ReplyDelete
  19. ஆகா! நம்மள மாதிரி பலபேரு இருக்காய்ங்க போல!
    பூனைக்குட்டிகளை ரசிப்பது எனக்கும் மிகப் பிடிக்கும்! :-)
    பூனைக்குட்டிக்கு முகம் பார்க்கும் கண்ணாடியில் அதனைப் பார்க்க வைத்ததுண்டா! செம காமெடியா இருக்கும்!

    ReplyDelete
  20. ஒரு பூனை யை கொண்டு எவ்ளோ பெரிய தத்துவம் சொல்லி இருக்கீங்க ...வாழ்த்துக்கள் ..

    ReplyDelete
  21. யூகங்களுக்கும், கற்பனைகளுக்கும் இடம் கொடுத்தால் நமது பொன்னான நேரமும், உடல் மன நலமும் தான் பாதிக்குமே தவிர வேறெதுவும் நடப்பதற்கில்லை

    விதைக்குள்ளே ஒரு மரமே ஒளிந்துள்ளது போல்... அழகாக சின்ன நாய்க்குட்டியில் ஆரம்பித்து... என் மணகுழப்பத்தையும் தீர்த்து வைத்துவிட்டீர்கள்.. பாராட்டுக்களுடன் நன்றி..

    ReplyDelete
  22. சிறிது நேரம் கழித்து வந்தாலே மனைவி மேல் கணவனுக்கு சந்தேகம்.
    ஏதாவது புது விஷயத்தை பற்றி பேசி விட்டால் யாரிடம் இருந்து தெரிந்து கொண்டு இருப்பாள் என்று உறுத்தல்.

    செல்ல பூனைக்குட்டிக் கதையில் ஒரு பெரிய விசயமே ஒளிந்திருப்பது போல்....

    இதையும் வேறு வகையில் பார்ப்போமே..
    தன் மனைவியை அதிகமா அல்ல அளவுக்கு அதிகமா நேசிக்கும் ஒரு கணவனுக்கு வரக்கூடிய பயம்.....
    =====================
    என்றும் இல்லா திருநாளாக, அழகாக உடை உடுத்தி கணவன் வேலைக்கு புறப்பட்டால் அலுவலகத்தில் ஏதும் புது நட்பு கிடைத்திருக்குமோ என மனைவிக்கு ஆர்வம்

    தனக்குமட்டுமே உரியவன் திசை மாறி போய்விடக்கூடாதுங்குற பயம்....
    =============================

    அது மட்டுமல்ல நீங்கள் எதிர்பாத்திருப்பதற்க்கு உதாரணங்கள்....

    1. கணவன் மனைவியை சந்தேகப்படுவது... ஆனால் மனைவி கணவனுக்கு துரோகம் செய்யாமல் நல்லவளாக இருப்பது.

    2 . மனைவி கணவனை சந்தேகப்படுவது...
    ஆனால் மனைவிக்கு கணவன் துரோகம் செய்யாமல் நல்லவனாக இருப்பது.

    3. கணவன் மனைவியை நல்லவள் என நம்புவது.. ஆனால் மனைவி கணவனுக்கு துரோகம் செய்வது..

    4. மனைவி கணவனை நல்லவன் என நினைப்பது..ஆனால் கணவன் மனைவிக்கு துரோகம் செய்வது..

    இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.... so , ஒவ்வொன்றும் அமைவது இறைவன் கொடுத்த வரம்...... மன்னிக்கவும்.. பதிவைக் காட்டிலும் விமர்சனம் போட்டுக்கிட்டே இருப்பான் போலிருக்கு என்று நினைக்க வேண்டாம்.... நீங்கள் சொன்னது போல் கற்பனை அதிர்வுகள் தவிர்த்தால் நலம் தான்...ஆனால் நிறைய நேரங்களில் அதிர்வுகள் அதிகமாகும் சூழ்நிலையை தவிர்க்க முடியாமல் அல்லவா போகிறது..... ஆதங்கத்துடன்,
    rajeshnedveera/
    http://maayaulagam-4u.blogspot.com

    ReplyDelete
  23. நன்றி ஜீ! தங்கள் முதல் வரவு நல்வரவு ஆகுக பூனையைப் பற்றி ரசித்த பல விஷயங்கள் உண்டு. பாலூட்டி சோர்ந்து படுத்திருந்தாலும், வாலை லேசாக ஆட்டி ஆட்டி குட்டிகளுக்கு விளையாட்டு காட்டும் நேரம் ரொம்ப பிடிக்கும்

    ReplyDelete
  24. என் மணகுழப்பத்தையும் தீர்த்து வைத்துவிட்டீர்கள்.. //
    இதை பார்த்ததும் மனம் பேருவகையில் மிதந்தது மாய உலகம்
    மனம் நினைப்பதற்கும் நடைமுறைக்கும் அதிகம் வேறுபாடு வரும் போது மனம் நினைத்த தவறான நிலைக்கு பெண் தள்ளப் படும் வேதனையான சூழ்நிலை இருக்கிறது. இன்று அதிக மனிதர்களை சந்திக்கும் நிலையில் ஆணோ பெண்ணோ தன் வாழ்க்கை துணையை விட சிறந்தவர்களை பார்ப்பதற்கு சந்தர்ப்பம் உண்டு. அந்த பிரமிப்பும் நேசமும் சிறிது காலத்தில் சரி செய்யப்பட்டு நிதர்சனத்துக்கு வந்து விடக்கூடிய நிலையில், சந்தேகம் என்னும் வாள் கொண்டு அறுக்கும் போது அவள் தவறான முடிவு எடுக்க வாய்ப்பு உண்டு. நீண்ட பின்னூட்டம் போட்டதால் உங்களுக்கு எனது சின்ன அறிவுரை. கோபமோ சந்தேகமோ மனதில் தோன்றிய உடன் வார்த்தைகள் ஆக்காமல் கொஞ்சம் பொறுத்திருங்கள் உங்கள் சந்தேகம் நீங்குவதற்கான நிகழ்ச்சி உடனே நடக்கும் அதிசயம் உணர்வீகள் . நன்றி

    ReplyDelete
  25. லேட்டா போட்டுட்டேன்.. கால எந்திரத்தில் பயணித்து நேற்று இதை படிக்கவும்..

    ஹேப்பி பர்த்டே

    ReplyDelete
  26. நன்றி சிபி, அதே கால இயந்திரத்தில் ஏறிச் சென்று எனது நன்றியை பெற்றுக் கொள்ளவும்

    ReplyDelete
  27. இல்லாத கருப்பு பூனையை
    இருட்டு அறையில்
    இடைவிடாது ஒருவன் தேடினானாம்.

    இருள் நீங்கியபின்னே
    மருளும் தொலைந்ததாம்.

    சிறப்பென அமைந்துள்ளது தங்கள் கட்டுரை.
    வாழ்த்துக்கள்.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  28. தங்களின் இந்த பதிவை வலைச்சர வலைதளத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.கீழே உள்ள முகவரிக்கு வந்து பார்க்கவும்.
    http://blogintamil.blogspot.com/2011/10/6102011.html

    ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!