Bio Data !!

10 October, 2009

செல்ல நாய்க்குட்டி மனசு

விரட்ட விரட்ட பின்னே வரும் நாய்க்குட்டி போல் என் மனசு தொந்தரவு செய்கிறது. பின்னூட்டம் இட்டது கூட ஒரு பதிவும் போடலாமே! விரட்டியும் ஆசை போகாததால் இந்த பதிவு. வல்லிக்கண்ணன் எழுதிய ஒரு புத்தகத்தில் "சொரி மணல்" பற்றி இருந்தது. அவர் எழுதியது கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் முந்தியது.தாமிரபரணி ஆற்றை கடக்கும்போது வெள்ளைதுரை குதிரையோடு சொரி மணலில் மறைந்து போனதை குறிப்பு இட்டிருந்தார்.இன்னும் அடங்கவில்லை சொரி மணலின் பசி. பள்ளியில் இருந்து மதிய உணவுக்கு வீட்டுக்கு வந்தான் மாணவன். இதோ வந்திரேன்னு போனவன் ஆற்றுக்கு குளிக்க போய் விட்டான். குறும்புக்கார மாணவர்கள் சிலரின் ஆசையால் அங்கே ஒரு உயிர் இழப்பு நேர்ந்தது. மகன் வந்ததும் சாப்பிடலாம்னு தாய் காத்திருக்க அங்கே மகனையே தின்று விட்டது சொரி மணல். மலைகளைக் குடைகிறோம். நிலங்களைத் தோண்டி வானுயர கட்டடங்கள் அமைக்கிறோம். இந்த சொரி மணலின் வாய்க்கு ஒரு பூட்டு போட்டால் எவ்வளவு நல்லா இருக்கும். என்றோ ஒரு நாள் தான் நடக்கிறது என்பதால் உயிரின் விலை மலிவாய்ப் போகலாமா?
இது கன்னிப் பதிவு தான்.
போக போக அசத்திருவோம்ல!

7 comments:

  1. vaazhha valamudan...thodarattum ungal ezhuththup pani.adhenna peyar?naaikutti manasu?peyaril irundhae ungal manadhum purihiradhu.niraya ezhudhungaL.

    ReplyDelete
  2. கன்னி முயற்சிக்கு வாழ்த்துக்கள்..,
    இன்னும் பல சிகரங்கள் தொடணும்..
    நான் கடவுளை நம்பல..,ஆனா காலத்தை நம்புறேன்..காலம் உங்களை கலாம் ஆக்கட்டும்..
    நட்புடன்
    சிவ சங்கர்.

    ReplyDelete
  3. நன்றி தமிழினி - உங்கள் பெயர் தமிழில் எழுதும் போது இன்னும் அழகாக இருக்கிறது
    நன்றி சிவ சங்கர் வாழ்த்துக்கு வணங்குகிறேன்

    ReplyDelete
  4. வாருங்கள்!
    வளருங்கள்!

    ReplyDelete
  5. வாங்க!! வாங்க!!

    ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!