Bio Data !!

27 October, 2009

நவனாலி


அந்த காலத்தில் ஒரு குறிப்பிட்ட இனத்தில் உள்ள சிறுமிகளுக்கு ஒன்பது தங்க உருண்டைகளும் பத்து பவள மணிகளும் கோர்க்கப்பட்ட சரடு ஒன்று கட்ட படும். அதன் பெயர் தான் நவனாலி. பின்னர் திருமணம் நிகழ்ந்து கணவன் கட்டிய திருமாங்கல்யம் வந்ததும் இது கழற்றப்படும் . நவனாலி கழற்றப்படும் சடங்கிற்கு பெயர் "விளக்கிடு கல்யாணம் "
முன் காலத்தில் முஸ்லிம் மன்னர்கள் படையெடுத்து வரும் போது நாட்டில் உள்ள அழகான பெண்களை கவர்ந்து சென்று அந்தப்புரத்தின் எண்ணிகையை கூட்டினர். அவர்கள் ஒரு வரையறை வைத்திருந்தனர். திருமணம் ஆன பெண்களை அவர்கள் தொடுவதில்லை . தங்கள் பெண்களை பாதுகாக்கவே ஏற்பட்ட இந்த நவனாலி பின்னாளில் ஒரு அணிகலனாகிப் போனது.
நம் நாட்டில் சடங்குகளின் மூலக் காரணத்தை சொல்லாமல் போனதுதான் தவறாகியது. காரணம் புரியவில்லை என்றாலும் சடங்குகளை மதிப்போம் . அதுவும் இல்லை என்றால் சடங்கு செய்பவர்களின் மனதை மதித்து விவாதம் பண்ணாமல் விலகுவோம் என்ன நான் சொல்றது !!

3 comments:

  1. அடடே..,இது நல்லா இருக்கே..
    காரணம் புரியாத இன்னும் பல விஷயங்களை கண்டுபிடிச்சு சொல்லுங்க..

    ReplyDelete
  2. வணக்கம்

    \\காரணம் புரியவில்லை என்றாலும் சடங்குகளை மதிப்போம் . அதுவும் இல்லை என்றால் சடங்கு செய்பவர்களின் மனதை மதித்து விவாதம் பண்ணாமல் விலகுவோம் என்ன நான் சொல்றது !!\\

    அதென்னங்க காரணம் புரியவில்லை என்றாலும் சடங்குளை மதிப்போம் -- காரணம் தேடுவோம், தெளிவோம் பின்பற்றுவோம்

    சடங்கு செய்பவர்களின் மனதை மதித்து விவாதம் பண்ணாமல் விலகுவோம் -- ம்ம்ம் இத இத வச்சிதாங்க சில நுற்றாண்டுகளாக நம்மை ஒரு இனம் முட்டாலாக்கிகிட்டு இருக்கு.

    இராஜராஜன்

    ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!