Bio Data !!

09 February, 2010

ஆதலினார் காதல் செய்வீர் !

"காதலுக்காக சாகக் கூடாது ;
காதலிக்காமல் சாகக் கூடாது "

எங்க ஊரில ஒரு வாலிபன் தான் காதலித்த பெண்ணை வேறு ஒருவருக்கு திருமணம் முடித்து விட்டார்கள் என்று விரக்தியின் விளிம்பில் ரோட்டோரம் இருந்த 60 அடி செல் டவரில் இருந்து கீழே குதித்து மரணித்து விட்டான். இதில் சோகம் அவன் தந்தை இழந்தவன் . தாய்க்கு ஒரே மகன் . தன் கடமைகளை மறக்கச் செய்யும் காதல் தான் ஆபத்தானது . காதலில் இறங்கும் போதே ஒரு வேளை காதல் நிறைவேற வில்லை என்றால் , இருவரில் ஒருவர் ஏமாற்றிவிட்டால் என்ன செய்ய போகிறோம் என்பதில் தெளிவான பின்பே இறங்க வேண்டும் .

சிலர் நான் காதலித்ததே இல்லைன்னு சொல்லலாம் .ஆனால் காதலிக்காதவர் யாருமே இருக்க முடியாது . அன்றாடம் மலர்வதும் பூக்கள் தான் . பன்னிரண்டு ஆண்டுக்கு ஒரு முறை மலரும் குறிஞ்சியும் பூ தான் . காலையில் மலர்ந்து மாலையில் மறைந்து விடுவது பூக்கள் தான் . வாடிப் போகாத க்ரோட்டன்சும் பூ தான் . என்ன, ஒருவர் நம்மை பாதிப்பதை உணரும் போதே அலெர்ட் ஆகி கவனமா குறுக்குச் சுவரை பலமா எழுப்பிக்கிறவங்க தப்பிச்சிடுறாங்க . மத்தவங்க பனால்.

காதல் என்பது மலர்ச்சி . மனதின் இறந்த செல்களை உதிர்த்து புதுசெல்களை பிறப்பிக்கும் காரணி காதல் . என்றும் உற்சாக துள்ளலோடு , இளமையாக வைப்பது காதல் . கிளைகளின் மலர்ச்சியை மலர்களாய் பார்க்க முடிகிறது . ஆனால் வேர்களின் மலர்ச்சி மறைவாகவே இருக்கிறது . அது மண்ணோடு முடிந்து விடுவது போல சிலரது காதல் மனதோடு முடிந்து விடுகிறது

காதல் என்ற பெயரில் கயமைத்தனம் அதிகமாகி கொண்டிருக்கும் காலம் இது. காதல் அறிவுரை நான் இளையவர்களுக்கு கொடுப்பதை விட பெற்றவர்களுக்கு கொடுப்பது நல்லது என்று நினைக்கிறேன். உங்கள் குழந்தைகள் காதலில் விழுந்தது (?) தெரிந்தால் உணர்ச்சி வசப்பட்டு உங்கள் கற்பனைகளில் பயப்பட்டு முரட்டுத் தனம் காட்டுவது எதிர் மறை விளைவுகளில் தான் கொண்டு நிறுத்தும். அநேகம் பேர் ஒரு புதியவரை தெரிந்து கொண்டதும் காட்டும் ஆர்வம் அற்ப ஆயுளில் தற்கொலை செய்து கொண்டு விடுகிறது. அது வரை பொறுக்காமல் நாம் செய்யும் அடாவடி செயல் அவர்கள் அவசர முடிவு எடுத்து அதல பாதாளத்தில் தள்ளுகிறது. பொறுமை காப்போம்.

கடந்த வாரம் கண்ட செய்தி. ஒன்பது வயது பெண்குழந்தை அதிக ஆண் நண்பர்களுடன் பழகிய காரணத்தால் நெருங்கிய உறவினர்களே கொன்று விட்டார்களாம். நுரையீரல் முழுவதும் மணல் நிரம்பி இருந்ததாம். தான் பெற்ற தண்டனைக்கான காரணம் கூட முழுமையாகப் புரியாத வயது. அடப் பாவிகளா!

காதல் வாரம் கொண்டாட கால அவகாசம் இல்லாத காரணத்தால் இன்றே என் காதலர் தின வாழ்த்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
என் செய்கைகளில் இருந்து
காதலை மட்டும் எடுத்துக் கொண்டு
காமத்தை விலக்கும்
அதிசயஅன்னம் நீ !
எனும் தபு சங்கரின் வரிகளை மனதில் இருத்தி காமத்தை ஒடுக்கி காதலை வளர்ப்போம். மீண்டும் ஒரு முறை
காதலர் தின நல்வாழ்த்துக்கள்!!!

19 comments:

  1. அருமை... பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. காமத்தை ஒடுக்கி காதலை வளர்ப்போம்.
    காதல் குறித்த பதிவு நன்றாக இருந்தது.

    ReplyDelete
  3. நல்ல எச்சரிக்கை..... காதலிப்பவர்களும்.... பெற்றோரும் பக்குவமாக நடந்துக்கொள்ள வேண்டும்.... இல்லையேல்... சோகம்தான் மிஞ்சும்.

    ReplyDelete
  4. //வேர்களின் மலர்ச்சி மறைவாகவே இருக்கிறது . அது மண்ணோடு முடிந்து விடுவது போல சிலரது காதல் மனதோடு முடிந்து விடுகிறது//

    superb sella naaykkutti manasu

    ReplyDelete
  5. நன்றி கருணாகரசு. நீங்களும் காதலித்துக் கொண்டிருந்தால் காதல் ஜெயிக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. நன்றி தேனம்மை என் பதிவில் எனக்கு ரொம்ப பிடித்த வரிகள் நீங்கள் சொன்னது தான்

    ReplyDelete
  7. ஒருவர் நம்மை பாதிப்பதை உணரும் போதே அலெர்ட் ஆகி கவனமா குறுக்குச் சுவரை பலமா எழுப்பிக்கிறவங்க தப்பிச்சிடுறாங்க . மத்தவங்க பனால்
    //
    Ha ha ha. Its True :D

    ரொம்ப எளிமையா எழுதறிங்க :)

    ReplyDelete
  8. செல்ல நாய்க்குட்டி மனசு மனைவி ஏற்கனவே அன்பு செலுத்துபவள்தான் ஆனால் சகோதரியரைப்பார்த்ததும் இன்னும் அதிக அன்பு செலுத்துகிறாள்

    ReplyDelete
  9. kaathal patriya ungal pathivu mika nalla pathivum kooda. vaalthukkal

    And also thank you to visit my blog, thala.

    ReplyDelete
  10. //மனதின் இறந்த செல்களை உதிர்த்து புதுசெல்களை பிறப்பிக்கும் காரணி காதல்//

    ரொம்ப சரியான வரிகள்.. ஹ்ம்ம்... அதெல்லாம் ஒரு காலம்.. :(

    ReplyDelete
  11. காதலர் தின நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  12. மனதை இளமையாக வைத்துக் கொள்ளுங்கள். அது என்ன அந்தக் காலம்?
    நன்றி மணிகண்டன்

    ReplyDelete
  13. திவ்யா ஹரி தங்கள் முதல் வரவு நல் வரவு ஆகுக.

    ReplyDelete
  14. நாய்க்குட்டி மனசு said...
    நன்றி கருணாகரசு. நீங்களும் காதலித்துக் கொண்டிருந்தால் காதல் ஜெயிக்க வாழ்த்துக்கள்//

    நான் காதலித்து தோல்விகண்டு... பின் காதலித்து வெற்றி கண்டவன்.

    ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!