Bio Data !!

08 February, 2010

நன்றி சொல்ல எனக்கு ....,

இந்தக் காதல் வாரம் ரொம்ப இனிப்பாக எனக்கு தொடங்கியது. இது யூத்துக்கு , பெருசெல்லாம் ஒத்து ன்னு அங்கங்கே குரல்கள் எழும்பினாலும், நாங்க அடங்கிறதா இல்லை. அன்னைக்கு ஒரு மனசு, இன்னைக்கு ஒரு மனசு எங்க கிட்ட கிடையாது. ஒரே மனசு, காதல் மனசு.
அது இருக்கட்டும் என்ன இனிப்புன்னு கேட்க மாட்டீங்களா?
"அன்புடன் ராட் மாதவ்" ஒரு சிறுகதைப் போட்டி வைத்திருக்கிறதா சொல்லி என் சென்னை நண்பன்(முகம் அறியா நண்பன்) ஒரு மெயில் எனக்கு அனுப்பினார். உங்கள் எழுத்து நல்லா இருக்கு எழுதுங்கன்னு சொன்னார். போட்டி முடிய ஒரு வார காலமே இருந்த நிலையில் அவ்வளவா நம்பிக்கை இல்லை. திடீர்னு ஒரு செய்தி. சென்னை அப்போலோவில் பெண்கள் மட்டுமே உள்ள ஒரு ஸ்கானிங் சென்டர் தொடங்கி இருப்பதாக. அதையே கதையாக்குவோம், சிலரை சென்று அடையுமேனு முயற்சி செய்தேன்.
முதல் பரிசு கிடைத்திருப்பதாக செய்தி. ரெண்டு தினமா நடக்கிறதே இல்லை , மிதந்துக்கிட்டு இருக்கேன். முதல் முதலாக எழுதும் கதைக்கே முதல் பரிசுனா ...
இது வலைப்பூ தந்த வரம் என்பதில் சந்தேகமே இல்லை. என் எழுத்துக்கு உரமூட்டிய அனைவருக்கும் நன்றி.
இது தாங்க அது .

6 comments:

  1. நன்றி அண்ணாமலையான், டெஸ்ட் ல்லாம் வைக்க மாட்டேன் கூட ரெண்டு வார்த்தை எழுதுங்க .

    ReplyDelete
  2. அட வாழ்த்துக்கள் நண்பரே செல்ல நாய்க்குட்டி மனசுன்னு பேர் வைச்சுக்கிட்டு அசத்துறீங்க

    ReplyDelete
  3. வெற்றி பெற்றதுக்கு வாழ்த்துக்கள்...
    மேலும் பல கதைகள் எழுதுங்கள் :)

    ReplyDelete
  4. thank u test. எல்லாம் உங்கள் ஆசி. அதென்ன பேர் test. எல்லோருக்கும் பரீட்சை வைப்பீங்களா?

    ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!