Bio Data !!

12 October, 2010

நாய்க்குட்டி போல் என் மனசு!!

விரட்ட விரட்ட பின்னே வரும் நாய்க்குட்டி போல் என் மனசு தொந்தரவு செய்கிறது. பின்னூட்டம் இட்டது கூட ஒரு பதிவும் போடலாமே! விரட்டியும் ஆசை போகாததால் இந்த பதிவு. வல்லிக்கண்ணன் எழுதிய ஒரு புத்தகத்தில் "சொரி மணல்" பற்றி இருந்தது. அவர் எழுதியது கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் முந்தியது.தாமிரபரணி ஆற்றை கடக்கும்போது வெள்ளைதுரை குதிரையோடு சொரி மணலில் மறைந்து போனதை குறிப்பு இட்டிருந்தார்.இன்னும் அடங்கவில்லை சொரி மணலின் பசி. பள்ளியில் இருந்து மதிய உணவுக்கு வீட்டுக்கு வந்தான் மாணவன். இதோ வந்திரேன்னு போனவன் ஆற்றுக்கு குளிக்க போய் விட்டான். குறும்புக்கார மாணவர்கள் சிலரின் ஆசையால் அங்கே ஒரு உயிர் இழப்பு நேர்ந்தது. மகன் வந்ததும் சாப்பிடலாம்னு தாய் காத்திருக்க அங்கே மகனையே தின்று விட்டது சொரி மணல். மலைகளைக் குடைகிறோம். நிலங்களைத் தோண்டி வானுயர கட்டடங்கள் அமைக்கிறோம். இந்த சொரி மணலின் வாய்க்கு ஒரு பூட்டு போட்டால் எவ்வளவு நல்லா இருக்கும். என்றோ ஒரு நாள் தான் நடக்கிறது என்பதால் உயிரின் விலை மலிவாய்ப் போகலாமா?

நண்பர்களின் பிறந்த நாளைத் தான் வாழ்த்த மறந்து விட்டு அசடு வழிவோம் என்றால், எனக்கு பிடித்த, என்னை பீடித்த பதிவுலகில் நான் நுழைந்த முதல் நாளை எப்படி மறந்து போனேன். 10.10.2009 அதனால் நான் முதன் முதல் எழுதியது மீள் பதிவாய். 

ஒரு வருடத்துக்குள் என்னில் இத்தனை மாயமா? இத்தனை மாற்றமா? THANK U BLOG WORLD. 
ஒரு  சின்ன  திருத்தம் என் முந்திய பதிவில். ஹலோ FM நாளை நுழையப் போவது  ஐந்தாம் ஆண்டு என தவறுதலாக கொடுத்து விட்டேன். நான்காம் ஆண்டில் தான்.
இன்னும் பல ஆண்டு நிறைவு காணட்டும் வாழ்த்துக்கள்! !

19 comments:

  1. எனக்கு பிடித்த, என்னை பீடித்த பதிவுலகில் நான் நுழைந்த முதல் நாளை எப்படி மறந்து போனேன். 10.10.2009 அதனால் நான் முதன் முதல் எழுதியது மீள் பதிவாய். /////

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்! தங்கள் வாழ்வு மென்மேலும் சிறக்கட்டும்!

    ReplyDelete
  3. வாழ்த்துகள்:)

    ReplyDelete
  4. HAPPY ANNIVERSARY!!!!!!! தொடர்ந்து பல்லாண்டுகள் கலக்குங்க!

    ReplyDelete
  5. "விரட்ட விரட்ட பின்னே வரும் நாய்க்குட்டி போல் என் மனசு தொந்தரவு செய்கிறது".
    "இந்த சொரி மணலின் வாய்க்கு ஒரு பூட்டு போட்டால் எவ்வளவு நல்லா இருக்கும்"


    அருமை...
    ஆரம்பமே அசத்தல்.. மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. வாழ்த்துகள்

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள்.....

    ReplyDelete
  8. எழுத்துலக வாழ்க்கை இன்னும் சிறக்கட்டும்.. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. வாழ்த்துக்க‌ள்... தொட‌ந்து எழுதி க‌ல‌க்குங்க‌..

    ReplyDelete
  10. நன்றி வானம்பாடிகள் சார்,
    நன்றி சித்ரா

    ReplyDelete
  11. நன்றி பார்வையாளன்,
    நன்றி சக்தி

    ReplyDelete
  12. நன்றி சிவா, நாடோடி, வினோ, பாலாஜி

    ReplyDelete
  13. இன்னும் நெறைய வருடங்களும், பெருமைகளும் தொடரட்டும்!

    ReplyDelete
  14. நாய்க்குட்டி மனசு க்கு வாழ்த்துக்கள்... :)

    ReplyDelete
  15. நன்றி சிவா
    நன்றி சிந்தியா, என் பெண் பெயர் சிந்தியா தான்.

    ReplyDelete
  16. வாழ்த்துக்கள் அருமைத் தோழி.. இன்னும் சிறக்கவும் ஆசிகள்..:))

    ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!