Bio Data !!

14 December, 2010

உள்ளங்கையில் ஒரு ஓவியப் போட்டி !!


என்ன திடீர்னு உள்ளங்கை படம்னு பார்க்கிறீங்களா? எனக்கு மிகவும் பிடித்த ஓர் உறுப்பு உள்ளங்கை. அதில் ஓடும் வரிகள். அந்த வரிகளை வைத்து சின்ன வயதில் சொன்ன ஜோசியங்கள்.

"ஏய் !கைய காட்டுப்பா. ஒண்ணு, ரெண்டு, மூணு ...ஐயய்யோ !உனக்கு ஆறுபிள்ளைகள்". என்று கையின் ஓரங்களில் ஓடும் மெல்லிய வரிகளை எண்ணி சொல்வதும், "ச்சீய் ! போங்கப்பா" என்று அதற்கே வண்டி வண்டியாக வெட்கப்படுவதும்.சின்ன வயது செல்ல நினைவுகள்.

கல்லூரியில் "டீ! உனக்கு உள்ளங்கை மேட்டில் ஒரு பெருக்கல் குறி இருக்குது. உனக்கு காதல் திருமணம் தான்" என்று பதினைந்து வயது பையனைப் பார்த்தால் கூட வெட்கப்பட்டு ஓடும் ஒருத்தியை பார்த்து சொல்வதும், அவள் எதிர்பாரா விதமாக கல்லூரி  இரண்டாம் ஆண்டு படிக்கும் போதே காதல் திருமணம்  செய்ததும், அடுத்தவருக்கு தெரியாமல் தனது உள்ளங்கை மேட்டில் பெருக்கல் குறி இருக்கிறதா என்று சோதிப்பதுமாக கன்னி வயது காதல் நினைவுகள்.

நன்கு பேசிப் பழகிய நண்பன் திடும்மென நீட்டிய கையை  தயக்கத்தோடு குலுக்கியதும் அந்த உள்ளங்கையின் மென்மை நெடுநாள் வரை நினைவில் நின்றதும் , கை உயர்த்தி ஆசிர்வதிக்கும் சாமியார்களின் அந்தரங்கம் வீதிக்கு வரும் போது ஏமாற்றின் அடையாளமாய் உயர்ந்து நின்ற உள்ளங்கைகளே நெடு நாள் மறக்க முடியாமல் நினைவுக்கு வருவதும், பஞ்சின் மென்மையை தொடுதலில் உணரச் செய்யும் உள்ளங்கை பல உழைப்புகளை கடந்து வரும் போது காய்த்துப் போகுமே என திருமணமான புதிதில் பட்ட அதீத கவலையுமாய், நினைவில் பூவாய் விரியும் உள்ளங்கை.

கணப் பொழுதும் கணினியை விட்டு அகலாததால், சோர்வுற்று சூடேறிய கண்களின் மேல்  முழுவதுமாய்  குவிந்து, பசலை உற்ற பெண்ணை ஒரு தொடுகையில் குளிர்வூட்டும் தலைவனைப் போல குளிரச் செய்யும் உள்ளங்கைகள்.
தாமரையின் நிறமும், மென்மையும் வெட்குற்று தலை தாள வைக்கும் மழலையின் உள்ளங்கைகள்.

ஒரு விழாக் கால புறப்பாடு பிள்ளையார் சுழி போடுவது உள்ளங்கைகளின் மேல்  தீட்டும் "மெகந்தி" என்னும்   ஓவியப் போட்டியில் தான். இப்பொழுது சொல்லுங்கள் இந்த உள்ளங்கைகளின் மேல் நான் கொண்ட காதல் சரியானது தானா என்று.

15 comments:

  1. உள்ளங்கையை பற்றி ஒரு காவியமே எழுதிட்டிங்க.

    ReplyDelete
  2. பஞ்சின் மென்மையை தொடுதலில் உணரச் செய்யும் உள்ளங்கை பல உழைப்புகளை கடந்து வரும் போது காய்த்துப் போகுமே என திருமணமான புதிதில் பட்ட அதீத கவலையுமாய், நினைவில் பூவாய் விரியும் உள்ளங்கை.


    ........ ஆஹா.... எதை பத்தி எல்லாம் கவலை?

    கலக்கல் பதிவுங்க! I liked it so much.

    ReplyDelete
  3. " உள்ளங்கைகளின் மேல் நான் கொண்ட காதல் சரியானது தானா என்று"

    இதெல்லாம் ஓவர் பில்ட் அப்... உள்ளங்கைகளை இவ்வளவு தூரம் நேசிப்பது சரியில்லை என சொல்ல நினைத்தேன்..

    ஆனால்,,



    பசலை உற்ற பெண்ணை ஒரு தொடுகையில் குளிர்வூட்டும் தலைவனைப் போல குளிரச் செய்யும் உள்ளங்கைகள்

    தாமரையின் நிறமும், மென்மையும் வெட்குற்று தலை தாள வைக்கும் மழலையின் உள்ளங்கைகள்.

    இப்படி எல்லாம் எழுதி என் மனதை மாற்றிவிட்டீர்கள்..

    உங்கள் நேசிப்பு நியாயமானதுதான்...

    ReplyDelete
  4. மென்மையான உள்ளங்கைகளை ( அடுத்தவங்களோடதுதான்) எடுத்துக் கன்னத்தில் வைத்துக் கொள்வது எனக்கும் மிக பிடிக்கும் ;)

    ReplyDelete
  5. வழக்கம் போலவே நேர்மையான நெத்தியடியான பின்னோட்டம் பார்வையாளன்

    ReplyDelete
  6. பார்த்து, வைத்த கைகள் கன்னத்தை தாக்கிடாம பாலா

    ReplyDelete
  7. தாக்காத கைகள் தான என்னுடைய விருப்பமும் ;)

    ReplyDelete
  8. //பசலை உற்ற பெண்ணை
    ஒரு தொடுகையில்
    குளிர்வூட்டும் தலைவனைப் போல.,
    குளிரச் செய்யும் உள்ளங்கைகள்.

    தாமரையின் நிறமும், மென்மையும்
    வெட்குற்று தலை தாள வைக்கும்
    மழலையின் உள்ளங்கைகள். //

    கவிதை எழுத ஆரம்பிச்சிடீங்களே..
    வாழ்த்துகள்.. :)

    ReplyDelete
  9. பசலை உற்ற பெண்ணை ஒரு தொடுகையில் குளிர்வூட்டும் தலைவனைப் போல குளிரச் செய்யும் உள்ளங்கைகள்

    தாமரையின் நிறமும், மென்மையும் வெட்குற்று தலை தாள வைக்கும் மழலையின் உள்ளங்கைகள்.

    //
    அருமை அசத்தல் ரூஃபினா..:))

    ReplyDelete
  10. இப்படி உசுப்பேத்தறதே உனக்கு வழக்கமா போச்சு சிவா . வரல,வரல இந்த விளையாட்டுக்கு நான் வரல

    ReplyDelete
  11. நன்றி தேனம்மை. நான் நேசித்த வரிகள் அவை

    ReplyDelete
  12. இந்த பதிவை படிப்போருக்கு நாமும் இப்படி உணர்ந்திருக்கிறோம்னு உணர வச்சுட்டிங்க,கட்டை விரல் இல்லேன்னா மீதி விரல்களுக்கு சப்போர்ட் கிடையாதுன்னு உணர்ந்திருக்கலாம்,உள்ளங்கையே இல்லேன்னா .......? நினச்சே பார்க்க முடியல,உலகத்தில் உள்ளங்கைக்கு முக்கியத்துவமும்,வர்ணிப்பும் தந்த முதல் நபர் நீங்கதான்,, போங்க. எது எப்படியோ மருதாணி போட்டிருக்கும் கைகளும்,டிசைனும் நல்லாஇருக்கு.

    ReplyDelete
  13. நன்றி thirumathi bs sridhar
    இதில ஒரு விஷயம் சொல்ல விட்டு போச்சு.
    நான் பள்ளியில் படிக்கும் போது மருத்துவக் கல்லூரியில் ஒரு கண்காட்சி போனோம்.
    அங்கே vertical disection செய்யப்பட்ட உள்ளங்கை பார்த்தது இன்னும் நினைவு இருக்கிறது.
    கோயம்பேடு ஜங்ஷன் போல அங்கே தான் அத்தனை நரம்புகளும் u டர்ன் அடிக்கின்றன.

    ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!