Bio Data !!

19 December, 2010

ஈசன்!

நெல்லையில் புதிப்பிக்கப்பட்ட 'ரத்னா' திரை அரங்கம் .
திரைப்படம் : ஈசன்.
திரை அரங்கத்தில் நுழைந்து  "கூட்டத்தைப்" பார்த்ததும் ஒரு 'திக்'.
இனிய ஞாயிறு வீணாய்ப் போகுமோ? 
படம் வந்து அதிக  நாள் ஆகலியே , கூட்டம் இன்னும் அதிகமா இருக்கணுமே என்று எண்ணிய படியே அரங்கத்தினுள் நுழைந்தேன். 

பாட்டுடனே படம் ஆரம்பம். இந்த மாதிரி பாட்டோட படம் ஆரம்பித்தாலே பிடிக்க மாட்டேங்குது. ஆனால் அந்த பாடல் நடைபெறும் பப் தான் படத்தின் 'கோர் ' என்பது போக போகத்தான் புரியுது.

தன் நண்பன் சமுத்திரக்கனியை காவல்துறை அதிகாரியாக்கி அழகு பார்த்திருக்கிறார் சசிகுமார்.  பொருத்தமான உடல் வாகு சமுத்திரக்கனிக்கு. காவல் அதிகாரிகள் ஜிம்முக்கு போய் கட்டுக்கோப்பாய் உடலை வைத்திருப்பது பார்க்க அழகாத்தான் இருக்கிறது. கமிஷனரிடம்"லவ் பண்ணி போட்ட டிரஸ் சார் இது" என சமுத்திரக்கனி சொன்னதும் "இந்தக் கரை வேட்டி போனா இன்னொரு கரை வேட்டி. சலாம் போட கத்துக்கோ. " என்கிறார். அதில் அரசியல் வாதிகளுக்கு சலாம் போட வேண்டிய காவல் துறையின் வேதனை இழையோடுகிறது. சமுத்திரக்கனி இன்னும் கொஞ்சம் மிடுக்கைக் காட்டி இருக்கலாம் என்பது என் எண்ணம்.  

படத்தின் முதல் பாதி 'நீதி போதனை கதைகள்' புத்தகம் படிப்பது போல்  இருக்கிறது. ஒவ்வொரு நிகழ்ச்சியும் செய்தித்தாளில் ஏற்கனவே பார்த்த செய்திகளை நினைவூட்டுவது போலவே இருக்கின்றன. இன்டர்வெல்லில் "இந்த அபிநயாப் பொண்ணுக்காக படம் பார்க்க வந்தேன்,பொன்னான நேரத்தை வீண் செய்திட்டேன் போலிருக்கே" என்றேன். இன்டர்வெல் வரை அபிநயாவைக் கண்ணில் காட்ட மாட்டேன் என்கிறார்கள். என் மகள் " தலை (சசிகுமாருக்கு அவள் கொடுத்த பெயர்) ஏமாத்த மாட்டார் பாப்போம் " என்றாள்.  என் அருகில் இருந்த பெண் " என்ன சொல்ல வர்றாங்கன்னே புரிய மாடேங்குதே" என்றாள். இப்படியாக இடைவேளை இனிதே வந்தது.

சும்மா சொல்லக் கூடாது இடைவேளைக்கு அப்பறம் அரங்கம் அமைதி காத்தது. ஈசனூர் - சிவகங்கை மாவட்டம் என்ற பின் குறிப்புடன் அழகழகான இயற்கைக் காட்சிகள். அம்மா இல்லாமல் இருந்தாலும் தந்தையின் அரவணைப்புடன் கூடிய அழகான குடும்பம். என்று தொடங்கி நகரத் தொடங்கிய கதை அழகு. 

நகர வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று கேட்கும் நண்பனிடம் " நகரத்தில உதவி கேட்டா ஒவ்வொருத்தரும் ஒதுங்கிக்கிறாங்க. ஒருத்தர் முகத்தில கூட சிரிப்பைக் காணோம்" என்று அபிநயாவின் அப்பாவாக வரும் (மலையாள இயக்குனர்) நபர்  கேட்க " இன்னம் கொஞ்ச நாளில உங்களுக்கு இதெல்லாம் பழகிடும். அப்பறம் உங்க முகத்திலையும் சிரிப்பை பார்க்க முடியாது" என்கிறார். பின்னால் வரப் போவதை முன்னாடியே உணர்த்திய வசனம். 

அபினவ் வருகிறார். நடித்திருக்கிறார். மிகச் சிறப்பாக சொல்லும் படி எதுவும் இல்லை.
அமைச்சராக வரும் A .L . அழகப்பன் அம்சமாக பாத்திரத்தில் பொருந்துகிறார். அவர் மனைவியாக வருபவர் துளசி தானே? 
அபிநயா தான் யார் என்று அறிமுகப் படுத்தும் கட்டத்தில் "Poornima, the silence speaker"
என்கிறார். தான் வாய் பேச முடியாதவள் என்று சொல்ல "மௌன மொழி பேசுபவள்" என்பது ரசிக்க வைத்தது. 
அபிநயாவின் தம்பியாக வரும் துஷ்யந்த் சரியான தேர்வு. 
சுப்ரமணியபுரத்தில் மைனராக வருபவர் அமைச்சரின் அந்தரங்க சேவகனாக தன் வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். 
பாடல்கள் ஜேம்ஸ் வசந்தன். இசைத்திருக்கிறார். கடற்கரையில்  ஆஜானுபாகுவான அந்த பெண்ணின் பாடலும் பாடல் சார்ந்த நடனமும் வித்தியாசமாக இருந்தது. 

உதவி செய்பவன் மேல் உடனடிக் காதல். இன்னும் எத்தனை நாளுக்குத் தான் இப்படி காட்ட போகிறார்களோ என்று வேதனையாக இருக்கிறது . எனக்கு ஒரு சந்தேகம். இப்படி காதலிக்க ஆரம்பித்த பின் இன்னொருவன்  வந்து உதவி செய்தால் என்ன செய்வார்கள் .

சசிகுமாரிடம்  ஒரு கேள்வி. 'சுப்ரமணிபுரத்தில்'  இருந்த வேகம் இதில் குறைகிறதே ஏன்?
முதல் பாதியில் நகைச்சுவையை அதிகரித்திருந்தால் கதை பாலன்ஸ் ஆகி இருக்குமே. வெற்றியை பற்றிய பயம் கவனத்தை சிதைத்து விட்டதா? இன்னும் சிறப்பான பல திரைப்படங்களை உங்களிடம் எதிர்பார்க்கிறோம் சசிகுமார். 

மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டவில்லை என்றாலும் ஒரு நல்ல திரைப்படம் பார்த்த திருப்தியைக் கொடுத்தது ஈசன்

17 comments:

  1. ஈசனுக்கு ஒரு பாசிட்டிவ் விமர்சனம் உங்களோடது.

    ReplyDelete
  2. நன்றி பாலா. சசியும் சமுத்ரக்கனியும் கை கோர்த்து ஒருவர் பலத்தில் மற்றவர் மாற்றி மாற்றி அடி எடுத்து வைப்பது நன்றாக இருக்கிறது. பாராட்டு அவர்களை இன்னும் பலப்படுத்தும்

    ReplyDelete
  3. நல்ல விமர்சனம்.

    http://www.tamiluthayam.blogspot.com/

    ReplyDelete
  4. இப்படி காதலிக்க ஆரம்பித்த பின் இன்னொருவன் வந்து உதவி செய்தால் என்ன செய்வார்கள் "

    ha ha ..super...

    "இன்னும் சிறப்பான பல திரைப்படங்களை உங்களிடம் எதிர்பார்க்கிறோம் சசிகுமார்."

    yes...

    ReplyDelete
  5. ரத்னா திரை அரங்கம்..... ரீமாடல் பண்ணியாச்சா? சூப்பர்! next டைம்.......!!!!!

    ReplyDelete
  6. நன்றி தமிழ், உங்கள் விமர்சனம் பார்த்திட்டேன். ஈசனைப் பற்றி இன்னும் கொஞ்சம் அதிகமா சொல்லி இருக்கலாமே?

    ReplyDelete
  7. நன்றி பார்வையாளன், படம் பார்த்தாச்சா?

    ReplyDelete
  8. வாங்க சித்ரா. floor எல்லாம் மாற்றி full AC பண்ணி நல்லா இருக்கு திரை அரங்கம் எதிரில் உள்ள பார்வதி அரங்கத்தை திருமண மண்டபம் ஆக்கி விட்டதால் போட்டியும் குறைந்துவிட்டது

    ReplyDelete
  9. //படத்தின் முதல் பாதி 'நீதி போதனை கதைகள்' புத்தகம் படிப்பது போல் இருக்கிறது. ஒவ்வொரு நிகழ்ச்சியும் செய்தித்தாளில் ஏற்கனவே பார்த்த செய்திகளை நினைவூட்டுவது//

    உண்மை..

    ReplyDelete
  10. சமுத்திரக்கனி நன்றாகவே செய்துள்ளதாகவே தெரிகிறது. பதிவுலகில் ஈசனை இந்த அளவு பாரட்டியது உங்கள் விமர்சனமே.
    எப்படியாயினும் சசி சறுக்கிவிட்டார் என்பதே உண்மை.

    ReplyDelete
  11. அருமையான் விமர்சனம்.. சரளமா இருக்கு.. சசிகுமாரிடம் சரியான் கேள்வி கேட்டு இருக்கீங்க.. ரூஃபீனா.

    ReplyDelete
  12. விமர்சனத்துக்கு நன்றி

    ReplyDelete
  13. படம் பார்த்தாச்சா"

    பார்த்துட்டு அப்பவே மறந்துட்டேன்.. அதுக்கு விமர்சனம் எழுதுவீங்கனு எதிர்பார்க்கவே இல்ல..
    இந்த நேரத்துல ஒரு கதை எழுதி இருக்கலாம்..
    அல்லது பார்வதி அரங்கம் , ரத்னா போன்றவை குறித்து தகவல்கள் அளித்து இருந்தாலோ அல்லது சினிமாவுக்கு போக எப்படி முடிவெடுத்தீர்கள்.. அதை தொடர்ந்து நடந்த விவாதங்கள், போகும்போது ஏற்பட்ட அனுபவங்கள், சினிமா பார்த்த பின் நடந்த விவாதங்கள் , சண்டைகள் ( சே.. இந்த படத்துக்கு கூட்டி வந்து என் நேரத்தை வீணடிச்சுட்டீங்களே என்பது போல ) என எழுதி இருந்தால் , நன்றாக இருந்திருக்கும்..

    ஆனால் அதை எல்லாம் உடனடியாக எழுதாதீர்கள்... உங்க ஊர்காரர் சித்ரா மேடம் கொஞ்ச நாள் லீவ்ல போக போறாங்க...
    அவங்க வந்ததும் எழுதுங்க... ( அப்பத்தான் ரத்னா தியேட்டர் பற்றி சொல்வதில் தகவல் பிழை இருந்தால் கண்டுபிடிக்க முடியும் ,,, ஹி ஹி ... )

    ReplyDelete
  14. நன்றி பாரத் பாரதி, சருக்கியதற்க்கு காரணம் எதுவாகவும் இருக்கலாம். எதுக்கும் அடுத்த படம் பார்த்திட்டு சொல்லலாமே?

    ReplyDelete
  15. நன்றி தேனம்மை, நீங்கள் பெண்மையை உயர்த்த எடுக்கும் முயற்சிகளுக்கு பாராட்டுக்கள். தமிழ் செல்வி எழுதிய "அளம் "படித்துக் கொண்டு இருக்கிறேன். U will surely like it

    ReplyDelete
  16. எனக்கு எதுக்குப்பா நன்றி சிவகுமார், என்னை வைச்சு காமடி கீமடி பண்ணலியே

    ReplyDelete
  17. பார்வையாளன் உங்க பினாமி ஏற்கனவே பின்னூட்டம் இட்டு போயாச்சு. அல்லது ரெண்டாவது போடுறது தான் பினாமியா?
    --

    ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!