Bio Data !!

04 April, 2011

நேரமும் மிச்சம் காசும் செலவில்லை !!

@@@ரொம்ப சந்தோஷமா இருக்குங்க உலக கோப்பையை நாம் அடைந்தது. சந்தர்ப்பங்களுக்கு தோதாய் உடனடி முடிவுகள் எடுக்கும் தலைமை இருந்தால் சச்சினே அவுட் ஆனாலும் ஆட்டத்தில் ஜெயிக்கலாம் என்பதற்கு உதாரணம்  உலக கோப்பை இறுதி ஆட்டம். மொத்த இந்தியாவிலும் கோலாகலத்தை பார்த்த வீரர்களுக்கு குறிப்பாய் கேப்டன் டோனிக்கு தான் பட்ட வேதனை எல்லாம் மறந்து போகும், மரத்துப் போகும்.முதல் இருவர் அவுட் ஆனதும், இலங்கை அணியினர் இனி கோப்பை நமக்குத் தான் என்ற எண்ணத்தில்  கோட்டை விட்டனர். இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நான் கற்றுக் கொண்ட பாடம், வெற்றிக் கனி கையில் கிடைக்கும் வரை வெற்றி பெற்றதாய் மமதை கொள்ளக் கூடாது.

@@@ இந்த விளம்பரங்கள்ல என்ன தான் சொல்றதுன்னு கிடையாதா? **** எண்ணெய் விளம்பரத்தில தினமும் பிள்ளைங்களுக்கு இட்லிப் பொடி போட்டுக் கொடுக்கிறதால "சாம்பார் சட்னின்னு செய்ய வேண்டியதில்லை. நேரமும் மிச்சம். காசும் செலவில்லை " னு ஒரு அபத்தமான விளம்பரம். சின்ன குழந்தைகளுக்கு நேரமும் காசும் மிச்சப் படுத்த தினமும் பொடி வைத்து இட்லி கொடுத்தால் அந்த சின்ன வயிறு என்ன ஆகும். விளம்பரதாரர்கள் இன்னும் கொஞ்சம் யோசிக்கலாமே?

@@@ ஆனா ரசிக்கத் தக்க விளம்பரமும் ஒண்ணு இருக்குது. சூர்யா ஜோதிகா ஜோடி, "காபியை தொடாமல் இருக்க முடியல இல்ல " னு ஜோதிகா சொல்ல "இல்ல உன்னை " னு சூர்யா ஹஸ்கி குரலில் சொல்வது ரசிக்க வைக்கும் ரொமான்ஸ். இவர்கள் விளம்பரங்களில் கவிதை எழுதத் தெரிந்தவர்கள். விளம்பரக் கான்வாஸில் ஓவியம் தீட்டத் தெரிந்தவர்கள்.

@@@ சுந்தர ராமசாமி அவர்கள் 1951 முதல் 2000 வரை எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு வாசிக்கும் அனுபவம் கிடைத்தது. பெரிய அலங்காரங்கள் இல்லாமல் ஜோடனைகள் இல்லாமல் சின்ன சின்ன நிகழ்வுகளால், மயிலிறகால் வருடிச் செல்லும் வசந்த காலக் கதைகள். கதைக்களங்கள் புதிது புதிதாய். 

உதாரணமாய்ச் சொல்ல வேண்டும் என்றால் ஒரு ரயிலின் ஓட்டுனர் தான் தினசரி செல்லும் பாதையில் சலிப்புற்ற நேரம் , பாதையில் உள்ள ஒரு வீட்டின் முன்புறம் நிற்கும் ஒரு தாயின் கையில் உள்ள குழந்தையிடம் 'நேசம்' வளர்ப்பதும் ,உலர்த்தி இருந்த அந்தக் குழந்தையின் உடை காற்றில் பறந்து வர அதைப் பத்திரப் படுத்தி வைப்பதும், சில காலம் அந்தக் குழந்தை கண்ணில் பட வில்லை என்றதும், தவித்துப் போய் அந்த உடையைக் கொண்டு கொடுக்கும் சாக்கில் அவர்கள் வீடு செல்லும் போது அந்த குழந்தை இறந்து விட்ட செய்தி அறிந்து துக்கத்தோடு திரும்பி மறுபடியும் அதே வெறுமையோடு ரயில் ஓட்டுவதுமாக செல்லும் கதை. 

@@@ இவ்வளவு சொல்லிட்டு இதைச் சொல்லாமல் போனால் நல்லா இருக்குமா? BSNL இல் 'நேசம் ' என்றொரு புதிய பிளான் அறிமுகம் செய்து இருக்கிறோம். Friends and family இல் ஐந்து எண்கள் வைத்துக் கொள்ளலாம். இதன் சிறப்பம்சம் ஐந்து எண்களில் மற்ற ஆப்பரேட்டர் எண்களும் வைத்துக் கொள்ள சம்மதிக்கிறோம். BSNL எண்களை ஒரு நிமிடத்திற்கு பத்து பைசா செலவிலும், மற்ற  ஆப்பரேட்டர் எண்களை நிமிடத்திற்கு முப்பது பைசா செலவிலும் பேசிக் கொள்ளலாம். இந்த ஐந்து தவிர மற்ற எண்கள் நொடிக்கு ஒரு பைசா . 15.06.2011 வரை இந்த ப்ளான் அமலில் இருக்கிறது. பழைய ப்ளானில் இருப்பவர்களும் ரூபாய் 198/- செலுத்தி 'நேசத்திற்கு 'வந்து விடலாம். 

@@@ ஊரெல்லாம் ஒரே தேர்தல் ஜுரம். ஊழல் நர்த்தகிகளின் ஊழித்தாண்டவம் நிறைய பார்த்து விட்டோம். வெயிலுக்கு வெதும்பி விடாமல், காத்திருத்தலின் சுகம் அனுபவித்து, கறை படாத கரங்களுக்கு சொந்தக்காரர்களை தேர்ந்தெடுத்து, உங்கள் விரல்களை கறை படுத்திக் கொள்ளுங்கள். இலவசமாக கொடுக்கும் பொருட்களை வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளி உரியவருக்கு உங்கள் ஓட்டு சென்று சேரும்படி செய்யுங்கள். நல்லதே நடக்கும்!!

10 comments:

  1. நிறைய விசியங்களை கொண்டுள்ளது பதிவு.நன்றி

    ReplyDelete
  2. இந்த மாதிரி கதம்ப செய்தி - கருத்து தொகுப்புக்கு, ஒரு பெயர் வைத்து வார வாரம் பதிவு போடலாமே....

    ReplyDelete
  3. அட . இப்படியும்கூட எழுதுவீங்களா ? சூப்பர் .

    ReplyDelete
  4. நானும் நினைப்பதுதான் சித்ரா, முடிய மாட்டேங்குதே!

    ReplyDelete
  5. நன்றி பார்வையாளன். அதென்னது 'இப்படியும் கூட' ?

    ReplyDelete
  6. அடுத்த பதிவுக்கு கரு ரெடின்னதும் நீங்களும் திட்டப்போறீங்க போலன்னு நினைச்சேன். நல்லவேளை திட்டலை :)

    ReplyDelete
  7. பயந்திட்டீங்களா? பின்னோக்கி சும்மா ஒரு பில்ட் அப் கொடுத்தேன்.

    ReplyDelete
  8. தொகுப்புக‌ள் அருமையா இருக்குங்க‌...

    நேச‌ம் பிளான் ந‌ல்லா இருக்கு..

    ReplyDelete
  9. நன்றி நாடோடி,
    நேசம் ப்ளான் உண்மையிலேயே நல்ல ப்ளான்

    ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!