Bio Data !!

10 April, 2011

தாலாட்டு சுகம்!!

சின்ன குழந்தைகளுக்கு இப்போ தாலாட்டு சுகம் குறைஞ்சிடுச்சு, சில இடங்களில் இல்லைனே ஆகிப் போச்சு
ஆனால் தோளில் சாய்த்து, மெல்லிய தொனியில் பாடும் பாடலுக்கு சுலபமாய் கண்ணயரும் குழந்தைகள், இதற்கு பெரிய கவித்துவம் தேவையில்லை, தாலாட்டும் ராகம் மட்டும் போதும்.
ஒரு சின்ன முயற்சி, என்னுள் இருக்கும் ராகம் உங்களுக்குள் இறங்குதானு கொஞ்சம் சொல்லுங்களேன்.

ஆ..ரி ரா..ரி ராரி 
ராரோ !
ஆரி ரா...ரோ 
ரா....ரா....ரோ! (2 )

புன்னகை பூக்கும் 
நிலவே !
உன் புன்னகைப் 
பொருளென்ன !
அசைக்க மறந்த 
காற்றே !
உன் அமைதிக்கு 
பொருளென்ன !

சீறிச் சுட்டெரிக்கும் 
நெருப்பே !
உன் சிலிர்ப்புக்கு 
பொருளென்ன !

ஆழம் மறந்த 
கடலே !
உன் மடங்கலின் 
பொருளென்ன !

எல்லாம் ஒரு நாள் 
அடங்கும் !
அன்று நீயுமில்லை 
நானுமில்லை !

அதற்குள் இந்த ஆட்டம்
எதற்கு ?
அற்ப மானிடனே 
நீ அடங்கு !

ஆ..ரி ரா..ரி ராரி 
ராரோ !
ஆரி ரா...ரோ 
ரா....ரா....ரோ! (2 )




11 comments:

  1. எல்லாம் ஒரு நாள்
    அடங்கும் !
    அன்று நீயுமில்லை
    நானுமில்லை !

    அதற்குள் இந்த ஆட்டம்
    எதற்கு ?
    அற்ப மானிடனே
    நீ அடங்கு !



    ......தாலாட்டிலே மிரட்டல்??? ஹி,ஹி,ஹி,ஹி....

    கருத்து நல்லா இருக்குதுங்க....

    ReplyDelete
  2. சித்ரா தாலாட்டு மட்டும் தான் குழந்தைக்கு,
    பாடு பொருள் பாடுறவங்களுக்கு

    ReplyDelete
  3. நல்ல தாலாட்டு.
    ஆனால் இப்போது உள்ள பிள்ளைகளுக்கு தாலாட்டு தெரியாது.

    ReplyDelete
  4. மீண்டும் ஒரு குழந்தையாக மாற முடிந்தால் நன்றாக இருக்குமே என நினைக்க வைத்தது தாலாட்டு

    ReplyDelete
  5. நன்றி ரத்னவேல் சார், உங்கள் profile பார்த்து அசந்திட்டேன். hats off !! தங்கள் முதல் வரவு நல் வரவு ஆகுக. நான் என் பொண்ணுக்கு சினிமா பாட்டு தான் தாலாட்டா பாடினேன். இப்போ பேரனுக்கு தாலாட்டு பாடி தூங்க வைக்கிறேன். ராகம் மட்டும் தான் அவனுக்கு. வார்த்தைகள் எல்லாம் எனக்கு நானே சொல்லிக்கொள்வேன்

    ReplyDelete
  6. நன்றி பார்வையாளன். காமெடி கீமடி பண்ணலையே. சித்ரா பின்னூட்டத்தை பாருங்க

    ReplyDelete
  7. த‌லாட்டு எல்லாம் இப்ப‌வும் இருக்கா?.. நான் கேட்டு ரெம்ப‌ வ‌ருச‌ம் ஆச்சி..

    உங்க‌ளில் தால‌ட்டு சூப்ப‌ர்.. :)

    ReplyDelete
  8. அன்பின் நாய்க்குட்டி மனசு - தாலாட்டு அருமை - குழந்தை தூங்கி விடும் - பாடு பொருள் - ஆடாத ஆட்டமெல்லாம் ஆடினாலும் அடங்க வேண்டியதுதான் ஒரு நாள் . மிக இரசித்தேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  9. நன்றி சீனாவுக்கும், வலைச்சரத்தில் அறிமுகம் செய்த தம்பி கூர் மதியானுக்கும்

    ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!