ஒரு நீண்ட நெடும் இடைவெளி.
செய்யும் தொழிலை திருத்தமாக செய்வோமே என கொஞ்சம் விலகி இருந்தேன்.
இதோ ஒரு சின்ன கவிதையோடு மறு விஜயம்.
தாய்க் கூடு தேடி என்னை வெறுமையில் விட்டுச் சென்ற பேரனின் தாக்கம் தான் கவிதையின் கருப் பொருள்.
இனி கவிதை(!?!)
எரிய மறந்த இரவு விளக்கும் ,
ஈரம் உலர்ந்த பக்கத்து படுக்கையும்,
ஆடாது அசையாமல் நின்ற
தொட்டில் கயிறும்,
முகம் சுழித்து எழும் உன்
விம்மல் கரைந்த காற்றும்,
விரல்களின் நிமிண்டலில்
கலகலத்து எழும் உன் சிரிப்பொலியும்,
உதடுகளின் முணுமுணுப்பில்
உறைந்த என் தாலாட்டுப் பாட்டும்,
என்னைப் போலவே
ஊமையாகி நின்றன .
என் செல்லமே !!
என் செல்லமே !!
உன் தாய் வீடு செல்ல நீ
தயாரான போது .
சிறு குழந்தைகளின் வளர்ப்பு பற்றி கேட்டு அறிந்த சிறு குறிப்பு உங்கள் உதவிக்கு.
காலையில் ஐந்து நிமிடம் குழந்தையின் இரு புருவங்களுக்கு மத்தியில் நாம் பொட்டு வைக்கும் இடத்தை நமது ஆள் காட்டி விரல் கொண்டு மெல்ல அழுத்தி விட வேண்டும். மூளையின் ஆரோக்கிய வளர்ச்சியை அதிகரிக்கும்.
பத்து விரல்களின் நுனியையும் கொஞ்ச நேரம் மெல்ல அழுத்தி விட வேண்டும். சிறு நீர், மலம் போன்ற கழிவுகள் நன்கு வெளியேற உதவும்.
அதைப் போலவே கால்களின் பத்து விரல் நுனிகளையும் பிடித்து விட வேண்டும். காது மடல்களின் ஓரங்களில் மெல்ல பிடித்து விட வேண்டும் . வந்தால் குழந்தையின் ஆரோக்கியம் சிறந்த முறையில் இருக்கும் .
நன்றி மீண்டும் சிந்திப்போம்!!

ReplyDeleteதயாரான போது//
மனசுல நிக்குது தாலாட்டு...!
//தாய்க் கூடு தேடி என்னை வெறுமையில் விட்டுச் சென்ற பேரனின் தாக்கம் தான் கவிதையின் கருப் பொருள்.//
ReplyDeleteஎங்க அம்மாவும் இதே மாதிரிதான் அக்கா ஊருக்குப்போனதும் கவிஞரா மாறிட்டாங்க :)
வருண்
welcome back
ReplyDeleteசிறப்பான பகிர்வோடு வந்துள்ளீர்கள்... தொடர வாழ்த்துக்கள்...
ReplyDeleteதாய்க் கூடு தேடி வெறுமையில் விட்டுச் சென்ற பேரனின் தாக்கம ..nice.....
ReplyDeleteநன்றி மனோ. தவித்து போகுது மனசு நெஞ்சை நெருங்கிய உறவுகள் விலகி செல்லும் போது
ReplyDeleteநன்றி வருண் தங்கள் முதல் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் .
ReplyDeleteஉணர்வுகள் உருக்கும் போது மட்டும் தான் கவிதைகள் பிறப்பெடுக்குது
நன்றி பார்வையாளன் . ப்ளாக் எழுதுறீங்களா?
ReplyDeleteநன்றிகள் திண்டுக்கல் தனபாலன், பதிவர் சந்திப்பு சிறப்பாக இருந்ததா?
ReplyDeleteநன்றிகள் பல FOOD சங்கரலிங்கம் சார், உங்களைப் போன்றவர்கள் கொடுக்கும் ஊக்கத்தால் தான் எழுத்து இன்னும் மூச்சு விட்டுக் கொண்டு இருக்கிறது
ReplyDeleteநன்றி ராஜ ராஜேஸ்வரி, ஒரே இனம் என்பதால் உணர்வுகள் அப்படியே சென்று சேர்ந்திருக்கும். நன்றி
ReplyDeleteபாட்டியானதுக்கு வாழ்த்துகள்
ReplyDeleteபேரனை பற்றிய கவிதை நெஞ்சில் நிற்கிறது ஆழமாக!
நன்றி ஆமினா !! பதிவர் சந்திப்பு சென்றது அறிந்தேன் . மகிழ்ச்சி .
ReplyDelete