Bio Data !!

09 September, 2012

குரல்களின் ஆகர்ஷம்

எனக்கு எப்போதுமே குரல்களின் இனிமையில் ஒரு ஈர்ப்பு உண்டு. கல்லூரி நாட்களின் ஒரே பொழுது போக்கு சாதனமாக இருந்த ரேடியோவில் இலங்கையின் வானொலி நிகழ்ச்சிகள்  கேட்டால், எல்லாம் பெற்ற ஒரு நிறைவு இருந்தது.  தமிழ் பாடல்களில் இடையே S.P.B சிரிக்கும் ஒரு சிரிப்புக்காக வீட்டின் எந்த மூலையில் இருந்தாலும் வானொலியின் அருகே ஓடி வந்த காலம் அது. பொற்காலம் !!


  படிப்பு முடிந்து வேலை வேட்டையை தொடங்கிய போது முதல் விண்ணப்பம் அனுப்பியது தொலை தொடர்பு துறைக்குத் தான். இரண்டு விதமான பணிகளுக்கு விண்ணப்பித்தேன். ஒன்று "ஆப்பரேட்டர் " பணி , மற்றொன்று எழுத்தர் பணி. மனதுக்குள் நான் விரும்பியது "ஆப்பரேட்டர் " பணி தான். அந்த வேலைக்கு காலையில் எழுத்துத் தேர்வு, மதியம் interview . ஒரு அறையில் அதிகாரி இருப்பார். மற்றொரு அறையில் இருந்து அவரது போன் காலை நாம் எடுத்து பேச வேண்டும். தொலைபேசியை பார்த்திருப்பதே அரிதான காலம் அது.  நான் பேசிய விதத்தையும் குரலையும் வைத்து உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பிருக்கிறது என்று அங்கிருந்தவர்கள் சொன்னார்கள். ஆனால் காலையில் ஒரு எழுத்துத் தேர்வு இருந்ததே. அதில் ஊத்திக் கொண்டு விட்டது. நாங்கள் வீட்டில் பெண்களாக இருந்த காலம். பொது அறிவில் பூஜ்யம். அதனால் மற்றொரு வேலையான  எழுத்தர் பணி கிடைத்தது. அதில் இருந்து முயற்சி செய்து தற்போது இருக்கும்  இடம் .

முகம் அறிமுகம் இல்லாமல் தொலைபேசியில் மட்டுமே பேசும் போது அவர்களுக்கு அவர்களின் குரல்களை வைத்து ஒரு உருவம் சமைத்திருப்போம். அநேகமாக நேரில் பார்க்கும் போது  இரண்டிற்கும் பெரும் இடைவெளி இருக்கும். ஆனால் அதன் தாக்கம் பெரிதாக இருக்காது. ஏற்கனவே குரல்களின் நாண்களால் கட்டப்பட்டிருப்பதால் உருவ ஏமாற்றம் நட்பில்  தொய்வு ஏற்படுத்தாது.காதலிலும் கூட. தொலைபேசியில் மட்டுமே பேசிப் பழகி திருமணம் முடித்தவர்கள் அன்று எங்கள் துறையில் இருந்தார்கள்.

வீட்டில் குழந்தை இருந்ததால் தூங்கும் நேரம் கண்டபடி மாறி இருந்தது. அப்படிப்பட்ட ஒரு நாளில் இரவு பதினோரு மணிக்கு FM  வைத்தேன். அதில் கேட்ட ஒரு குரல் தான் இந்த பதிவு எழுதக் காரணம்.  "காற்று மண்டலத்தை கற்கண்டு மண்டலமாக மாற்றும் பாடல் தேர்வுடன் 'யாழ் ' சுதாகர் " ஆரம்பமே ஈர்த்தது. சிறப்பான பாடல் தேர்வு. நாம் மறந்து போன நல்ல நல்ல பாடல்களின் "தொகுப்புத் தோரணம் "(இதுவும் அவரது சொல்லாடல் தான்) "ராக கலா ஜோதி " இளையராஜா , ஏழிசை மன்னன் T .M . சௌந்தரராஜன் என ஒவ்வொருவருக்கும் ஒரு அடை  மொழியோடு அறிமுகம். பாடல்களின் ராகங்களை நமக்கு அறிமுகப்படுத்தும் உத்தி. இலங்கைத் தமிழ் கொஞ்சு தமிழாய் கிளம்பியதும் அந்தக் கால கல்லூரி நாட்களுக்கு பயணப்பட்டேன்.

"மலரும் நினைவுகளுக்கு மரியாதை தரும் விதமாக அந்த நாள் ஞாபகம் "
கே.எஸ் ராஜாவின் குரலுக்காக தவமிருந்த கல்லூரிக் காலம். குரல்களைக் காதலித்து, குரல்களில் உருகி குரல்களுக்காகவே வாழ்ந்த காலம். பல பத்தாண்டுகளுக்குப்பின்னும், டெக்னாலஜி பெரிதாக வளர்ந்த பின்னும் , அதே போல குரல்களில் மயங்கும் தன்மை மாறாமல் இருப்பது தான் வானொலியின் சிறப்பு.

எனக்குள் ஒரு மெல்லிய சோக நீரோட்டம். கொஞ்சம் கொஞ்சமாக இலங்கை இனிமை மாறி , இன்னும் கொஞ்ச நாளில் "யாழ்" சுதாகர் "நெல்லை"த்தமிழ் ஜோதியில் கலந்து விடுவாரோ?  கலந்து விடாமல் தன் குரலின் தனித்தன்மையை காத்துக் கொள்ள வேண்டும். வாழ்க வளமுடன்.!!

10 comments:

  1. ரசித்து எழுதி உள்ளீர்கள்... ...ம்... பொற்காலம் தான்...

    ReplyDelete
  2. "மலரும் நினைவுகளுக்கு மரியாதை தரும் விதமாக அந்த நாள் ஞாபகம் "
    கே.எஸ் ராஜாவின் குரலுக்காக தவமிருந்த கல்லூரிக் காலம். குரல்களைக் காதலித்து, குரல்களில் உருகி குரல்களுக்காகவே வாழ்ந்த காலம். பல பத்தாண்டுகளுக்குப்பின்னும், டெக்னாலஜி பெரிதாக வளர்ந்த பின்னும் , அதே போல குரல்களில் மயங்கும் தன்மை மாறாமல் இருப்பது தான் வானொலியின் சிறப்பு." ------
    Sagothari, neengalum en vayathoti than iruppingnu nenaikiren. Nanum ungalaipolve en College dayslayum ippadithan en manam ilangai vanoliim kuralakku manam alaipanjuthu' -- Karunakaran, Chennai

    ReplyDelete
  3. "காற்று மண்டலத்தை கற்கண்டு மண்டலமாக மாற்றும் பாடல் தேர்வுடன் 'யாழ் ' சுதாகர் " ஆரம்பமே ஈர்த்தது. சிறப்பான பாடல் தேர்வு. நாம் மறந்து போன நல்ல நல்ல பாடல்களின் "தொகுப்புத் தோரணம் "(இதுவும் அவரது சொல்லாடல் தான்) "ராக கலா ஜோதி " இளையராஜா , ஏழிசை மன்னன் T .M . சௌந்தரராஜன் என ஒவ்வொருவருக்கும் ஒரு அடை மொழியோடு அறிமுகம். பாடல்களின் ராகங்களை நமக்கு அறிமுகப்படுத்தும் உத்தி. இலங்கைத் தமிழ் கொஞ்சு தமிழாய் கிளம்பியதும் அந்தக் கால கல்லூரி நாட்களுக்கு பயணப்பட்டேன்.
    --Sago, ennai meendum 80 kaluku kondu ponathu.
    karunakaran, Chennai

    ReplyDelete
  4. nandri dindugal dhanabalan, sangaralingam sir, and karunakaran, chennai.

    ReplyDelete
  5. கருணாகரன் மிக்க நன்றி தங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்

    ReplyDelete
  6. //முகம் அறிமுகம் இல்லாமல் தொலைபேசியில் மட்டுமே பேசும் போது அவர்களுக்கு அவர்களின் குரல்களை வைத்து ஒரு உருவம் சமைத்திருப்போம். அநேகமாக நேரில் பார்க்கும் போது இரண்டிற்கும் பெரும் இடைவெளி இருக்கும். ஆனால் அதன் தாக்கம் பெரிதாக இருக்காது. ஏற்கனவே குரல்களின் நாண்களால் கட்டப்பட்டிருப்பதால் உருவ ஏமாற்றம் நட்பில் தொய்வு ஏற்படுத்தாது//

    :-)

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள்...

    நன்றி,
    மலர்
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  8. Really rufi mam
    Naanum ungalai pola kuralgalin inimaikku adimai than
    Antha naatkalil ilangai vaanoliyin kuralgalukkagave
    odi odi vanthu ketpen
    Ippothum enakku perithum thuani intha vaanoli than
    Neengal kettu rasitha kuralai naan romba kaalamaga kettu rasithu kondirukkiren

    Vaazhaga valamanan kuraludan
    Endrum inimai pongattum iniya kuralgalai kettu
    Priyamudan
    pushkarani

    ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!