நெல்லையில் புத்தகத் திருவிழா !!
என்னைக்கு தொடங்கியது . இப்போ தான் எழுத நேரம் கிடைத்ததான்னு சொல்றீங்களா? Better late than Never என்ன நான் சொல்றது சரி தானா?இன்னும் மூன்றே நாட்கள் தான். நெல்லை வாசிகள் இன்னும் பார்க்க வில்லை என்றால் உடனே புறப்படவும்.
இந்த புகைப்படத்தில் இருப்பது என்னவென்று சொல்பவர்களுக்கு புத்தகத் திருவிழா நடக்கும் இடத்தில் களை கட்டிக் கொண்டிருக்கும் "உணவுத் திருவிழா" விலிருந்து அருமையான கம்மங் கஞ்சி வழங்கப்படும்.
கண்டு பிடிக்க வில்லை என்றால் கடைசியில் விடை சொல்கிறேன்.
சென்னையிலும் மதுரையிலும் புத்தகக் கண்காட்சியை பார்க்கும் போது எல்லாம் நம்ம ஊரில் எப்போ எப்போ என்று மனசு கிடந்து அடித்துக் கொள்ளும். ஒரு மாசம் முன்னதாக அறிவிப்பை கண்டவுடன் ரகசியமாக டப்பாங்கூத்து ஒன்று போட்டு விட்டது.
முதலில் இதை ஏற்பாடு செய்த அனைவருக்கும் ஒரு ராயல் சல்யூட். !!!
மாவட்ட ஆட்சியாளர் ஒரு புத்தகப் பிரியர் என்று அறிந்தேன். தன்னை வாசிப்பினால் மகிழ்வித்த புத்தகங்களுக்கு மறு மரியாதை செய்திருக்கிறார் இந்த விழாவை ஏற்பாடு செய்ய உதவிக் கரம் நீட்டுவதன் மூலம். ஆரம்ப நாளன்று போயிருந்தேன். ஒரு சிறு வருத்தம். மூன்றே பெண்கள் தான் இருந்தோம்.. அடுத்த அடுத்த நாட்களில் பெண்களும் இருந்தார்கள்.
"மாதொருபாகன்" வாசித்ததில் இருந்து பெருமாள் முருகன் அவர்களின் தீவிர ரசிகை ஆகி விட்டதால் அவரது புத்தகங்கள் ரெண்டு வாங்கினேன். அவரது நாவல்களின் பெயரே வாசிக்கத் தூண்டுவதாய் இருக்கிறது.
அநேகம் பள்ளிகளில் இருந்து மாணவர்களை அழைத்து வருகிறார்கள். சந்தோஷமாக இருந்தது. மாலையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பேச்சாளர்கள் திகட்ட திகட்ட விருந்து தருகிறார்கள். திரு இறைஅன்பு அவர்களும் திரு சைலேந்திர பாபு அவர்களும் வருகை தர இருக்கிறார்கள். தவற விட்டு விடாதீர்கள்.
புத்தகங்களை பற்றி எழுதிக் கொண்டு இருக்கும் போது இடையில் என்ன படம்னு பார்க்கிறீர்களா? இது நெல்லை மாவட்ட ஆட்சியாளர் எடுத்த புகைப்படம். இதைப் போல அவர் எடுத்த புகைப்படங்கள் ஒரு ஸ்டால் முழுவதும் வைத்து இருக்கிறார்கள். பத்தாண்டுகளுக்கு பின் நடந்தாலும் தித்திக்கும் விருந்தை அளிக்கிறது நெல்லை புத்தகத் திருவிழா !!
தமிழ் வளர்ச்சி பண்பாட்டுக் கழகத்தின் துணைத் தலைவராய் இருந்து இதில் முக்கியப் பங்காற்றும் "மயன் " கட்டுமானப் பணியின் உரிமையாளர் திரு ரமேஷ் உங்களுக்கும் வாழ்த்துக்கள்!! ஒரே ஒரே கேள்வி மட்டும் உங்களிடம். எங்கே இருந்து கிடைக்கிறது உங்களுக்கு மட்டும் இதற்கெல்லாம் நேரம்.இதற்கு மேல் "நீங்கள்" "உங்கள்" என்று உன்னை அழைக்க முடியாது "குட்டி" பல புத்தகப் பிரியர்களின் சார்பாக மனமார்ந்த நன்றிகள் !!
வித்தியாசமான படத்துடன் தகவலுக்கு நன்றி...
ReplyDeletenandri dhanabaalan.
ReplyDelete