Bio Data !!

30 May, 2013

அழகை அதிகரிக்க சில வழிகள் !!!


நான் சமீபத்தில் கேட்ட ஒரு கருத்து "அழகாக"  இருந்ததால் இங்கே பகிர்கிறேன்.

நாம் வீடு கட்டும் போது ஜன்னல்கள் வைத்து கட்டுகிறோம். ஏன் ? நல்ல காற்றோட்டம்  இருப்பதற்காக. நல்ல திரை சீலைகள் போடுகிறோம்  வீட்டை அழகு படுத்த..

அதைப் போலவே நமது உடலில் இரண்டு ஜன்னல்கள் இருக்கின்றன. அவை தான் அழுகையும் சிரிப்பும். நாம் அழ வேண்டிய நேரத்தில் அழவும்  சிரிக்க வேண்டிய நேரத்தில் சிரிக்கவும் செய்தால் அழகாக இருப்போம். சிறு குழந்தைகள் எல்லாமே அழகு தான். காரணம் அவை அழுவதற்கோ சிரிப்பதற்கோ தயங்குவதில்லை. ஆனால் நாம் எங்கே அழுதால் நம்மை பலவீனமாய் நினைத்து விடுவார்களோ என்று அழுகையை அடக்கிக் கொள்கிறோம் . சரி அழுவதற்கு தான் தயக்கம் என்றால் சிரிக்கவாவது செய்கிறோமா என்றால் அதவும் இல்லை.

எனக்கு வாய் விட்டு சிரிப்பவர்களை பார்த்தால் பொறாமையாக இருக்கும் நான் சிரிப்பை மறந்து பல கால ம் ஆனதால். சிரிப்பில் சில வகை இருக்கும். பிறருடைய குறைகளை நக்கலாய் சொல்லி விட்டு அவர்களே பலமாக சிரிப்பார்கள். அவர்கள் தன்னம்பிக்கை குறைந்தவர்கள். இன்னும் சிலர் தன குறைகளை சொல்லி தானே சிரிப்பார்கள். இவர்கள் எங்கே மற்றவர்கள் சொல்லி விடுவார்களோ என்று தன குறைகளை தானே முந்தி சொல்பவர்கள். ஆனால் பிறர் ஏதாவது சொல்லி விட்டால் சுருங்கி விடுவார்கள். இன்னும் சிலர் நமட்டு சிரிப்பாய் சிரிப்பார்கள். அதன் அர்த்தம் அவரவர் வசதிக்கேற்ப. இன்னும் சிலர் மட்டுமே உள்ளத்திலிருந்து சிரிக்கிறார்கள்

நம் உள்ளத்தின் ஜன்னல்களான  அழுகையையும், சிரிப்பையும் விரியத் திறந்து வைப்போம்.  அதைப் போலவே பிறர் அழும்போதோ  சிரிக்கும் போதோ விமர்சிக்காமல் இருப்போமே. நீங்களே முயற்சி செய்து பார்த்து சொல்லுங்களேன் அழகை அதிகரிக்க இதுவும் ஒரு வழி  தான என்று. 

4 comments:

  1. வெல்கம் பேக் மேடம்....

    “ சிரிப்பவர்களை பார்த்தால் பொறாமையாக இருக்கும் நான் சிரிப்பை மறந்து பல கால ம் ஆனதால்.”

    ஹாஹா .. இன்னும் அந்த நகைச்சுவை குறையவில்லை.. தொடர்ந்து எழுதுங்க

    ReplyDelete
  2. சொன்ன விதம்-வலி(ழி) அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. பிச்சைக்காரன் ..... அந்த "வெல்கம் பேக்" கொடுக்கிற உற்சாகமே தனி தான்.

    ReplyDelete
  4. சீரியஸ் ஆக எடுத்துக் கொள்ள வேண்டாம் தனபாலன். இது "சிரிப்பதற்கான" விஷயம் தான்

    ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!