Bio Data !!

19 April, 2010

உடன் பிறவா சகோதரிகள்.

நமது உடலின் உள் உறுப்புகளில் அதிக எடை உள்ள உறுப்பு எது தெரியுமா? கல்லீரல் அதன் எடை ஒன்றரை கிலோ. இறைவனின் படைப்பில் நான் மிகவும் ஆச்சரியப்படுவது என்ன வென்றால் 'the arrangement of internal organs of our body' பாதுகாப்பாக இருக்க வேண்டிய உறுப்புகளை மிக மிக பாதுகாப்பாக வைத்துள்ள அவரின் நேர்த்தி.

பௌர்ணமி நிலவின் ஒளியில் நட்சத்திரங்கள் மறைவதைப் போல இதயமும், நுரையீரலும் பெறும் முக்கியத்துவத்தை கல்லீரல் பெறத் தவறி விட்டது.

கல்லீரல் தன் வருத்தத்தை சொல்றதைக் கொஞ்சம் கேளுங்க.

ஒரு சின்ன கீறலின் மூலம் வெளியேறும் ரத்தம் கூட உறையலேன்னா உங்க உயிருக்கே ஆபத்து. அது உறையிரதால தான் ரத்தம் வர்றதே நிக்குது. ரத்தத்தை உறைய வைக்கிறதே நாம தானுங்கோ

இதயத்துக்கு வர்ற ரத்தத்தின் அளவு திடீர்னு உயர்ந்திட்டுன்னா நான் பலூன் மாதிரி ஊதி, ஏற்கனவே நான் மெத்து மெத்துன்னு இருப்பேனா, அந்த ரத்தத்தை உறுஞ்சி மெதுவா தேவையான அளவ மட்டும் இதயத்துக்கு கொடுப்பேன்.

ஆனா உங்கள்ள பலருக்கு காக்டெயில் தினசரி மெனுவில் ஒரு பகுதி ஆகி விட்டது. ஒரு முதலாளி தொழிலாளியின் உழைப்பை உறுஞ்சுவது போல் ஆல்கஹால் என் உழைப்பை உறுஞ்சி உறுஞ்சி ஒரு கட்டத்தில என்னை பிளாட் ஆக்கிடுது.

மஞ்சக் காமாலை வந்ததும் பதறி அடிச்சு டாக்டர்ட்ட ஓடுறீங்க. அது ஒரு வியாதின்றத விட எனக்கு கோளாறு தொடங்கிடுச்சு னு உங்களுக்கு நான் காட்டுற அறிகுறி தான் அது. கான்செர் என் 80% பகுதியை அழிச்சிட்டாக் கூட நான் பயப்படறதில்ல. எனக்கு இறைவன் கொடுத்து இருக்கிற ஒரு வரம் என்னனா பீனிக்ஸ் போல நான் அழிய அழிய முழு உருவத்தை அடைஞ்சிடுவேன். ஆனா நோயின் தீவிரத்தை பொறுத்து எனது மிருதுத் தன்மை கடினப் பட்டு கடினப் பட்டு போகும் போது நீங்களே நினைச்சாலும் என்னைக் காப்பாற்ற முடியாது. அப்பறம் யார் நினைச்சாலும் உங்களைக் காப்பாற்ற முடியாது.

எப்படி அமைதியா ஆர்ப்பாட்டம் இல்லாம வேலை பார்க்கிறவங்கள உங்கள்ள அங்கீகரிக்க மாட்டாங்களோ அது போல இரைச்சலற்று இருக்கிற என்னையும் யாரும் மதிக்கிறதே இல்லேங்க .

எனக்கு ஒரு தங்கச்சி இருக்குதுங்க. அதும் பேரு கணயம் உங்களை எப்போவாவது பெரிய நாய் ஏதாவது தொரத்தி இருக்குதா. இல்லைனா அடுத்த தடவை தொரத்தும் போது பாருங்க. அதோட நாக்கு மாதிரி தான் அழகா இருப்பா என் தங்கச்சி. குட்டியா 85gm எடையில இருந்தாலும் ஒரு நாளைக்கு 900 gm இன்சுலின் உற்பத்தி செய்வா. அவள் வேலை செய்றதில்ல ஏதாவது தடங்கல் வந்தா அவ்வளவு தான் உங்களுக்கு சர்க்கரை வியாதி தான்.

எங்க குடும்பத்தில நிறைய பேர் இருக்கிறதாலையும் எல்லோரும் ரொம்ப ஒட்டி நெருக்கமா இருக்கிறதாலேயும் எங்கள்ள யாருக்காவது நீங்க செய்யற அறுவை வைத்தியம் கொஞ்சம் அஜாக்கிரதையா இருந்தாலும் அடுத்தவங்களை பாதிச்சிடும்.

கணயத்துக்கு ஏதாவது ஆச்சுனா உங்களுக்கு கடுமையா வயிறு வலிக்கும். ஆனா அதுக்கும் மற்ற வயிற்று வலிக்கும் ரொம்ப வித்தியாசம் தெரியாது. அது தான் கஷ்டம். ஆனா ஒண்ணு மட்டும் சொல்லித் தாரேன் தொடர்ந்து வயிற்றோட்டம், எடை இழப்பு, மஞ்சள் காமாலையின் அறிகுறிகள் இருந்ததுன்னா உடனே டாக்டர் பார்த்திடுங்க.

எவ்வளவு வியாதிகள் வருது, காரண காரியம் தெரியாமலே. ஆனா நாங்க பாதிக்கப் படுறதுக்கு முக்கிய காரணம் 'குடி' தாங்க.

தெரிஞ்சே அந்தத் தப்பை பண்ணலாமா? நல்லதில்லீங்க. இப்போல்லாம் சின்ன புள்ளைங்க கூட பழகிடுறாங்க. விட்டுடுங்க.

குடி குடியை மட்டும் கெடுக்கிறதில்லீங்க .
கூடவே கல்லீரலையும் கணயத்தையும் கூட

27 comments:

  1. ம‌ருத்துவ‌ த‌க‌வ‌லுட‌ன் அறிவுரையும்.... ந‌ல்லா இருக்கு...

    ReplyDelete
  2. நுரையிரலும், கல்லீரலும் கூறிய தங்கள் கதையை தெரிந்து கொண்டோம.

    ReplyDelete
  3. நன்றி நாடோடி, ஆனா கேட்கணுமே?

    ReplyDelete
  4. நுரையீரல், கல்லீரல்...
    இவ்ளோ விஷயம் இருக்கா?
    பகிர்வுக்கு நன்றி.. :)

    ReplyDelete
  5. நல்ல உபயோகமான பதிவுங்க.

    ReplyDelete
  6. நன்றி நர்சிம், தங்கள் முதல் வரவு நல்வரவு ஆகுக.

    ReplyDelete
  7. நன்றி ஆனந்தி, ஒரு சின்ன தப்பு நடந்து போச்சு. இப்போ சரி பண்ணிட்டேன், அறியாமையில் வந்த தவறல்ல, அவசரத்தில் வந்த தவறு. மறுபடியும் ஒரு தடவை பார்த்திருங்க.

    ReplyDelete
  8. உபயோகமானப் பதிவுங்க. படங்கள் போட்டிருந்தா இன்னும் விவரமா இருந்திருக்கும்.

    ReplyDelete
  9. போட நினைத்தேன் ஹுசைனம்மா. அதுக்கென்ன இப்போ போட்டுட்டா போச்சு. நன்றி

    ReplyDelete
  10. "ஒரு முதலாளி தொழிலாளியின் உழைப்பை உறுஞ்சுவது போல் ஆல்கஹால் என் உழைப்பை உறுஞ்சி உறுஞ்சி ஒரு கட்டத்தில என்னை பிளாட் ஆக்கிடுது."

    அட ஆண்டவா !!!! இப்படி ஒரு சோதனையா...
    இன்பத்தை இறைவன் படைத்தான்... அதில் ஏன், ஒரு துன்பத்தை நுழைத்தான்
    "அதோட நாக்கு மாதிரி தான் அழகா இருப்பா என் தங்கச்சி "

    ஒரு கடினமான சப்ஜெக்ட்டை கூட படிக்க வைத்தது , இந்த தமிழ் தான்
    "ஆனா நாங்க பாதிக்கப் படுறதுக்கு முக்கிய காரணம் 'குடி' தாங்க"
    தடுப்பு மருந்து எதுவும் இல்லையா...

    புது தகவல்களை பகிர்ந்து கொண்டதுக்கு நன்றி

    ReplyDelete
  11. ட்ரை சப்ஜெக்ட் எனினும் உத்தியால் சுவாரசியமாகவும் (கொஞ்சம் பயமேற்படுத்தியும்) சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துகள். தொடர்க..

    (மருத்துவரா நீங்க?)

    ReplyDelete
  12. நன்றி பார்வையாளன், எனது பதிவைப் பார்த்து ஒருவர், ஒரே ஒருவர் நிறுத்திடலாமானு நினைத்தால் கூட எனக்கு வெற்றி தான்.

    ReplyDelete
  13. நன்றி ஆதிமூல கிருஷ்ணன், தங்கள் முதல் வரவு நல்வரவு ஆகுக.
    நான் மருத்துவர் ஆக ஆசைப்பட்டு தோற்றவள்.
    உங்கள் பதிவு தொடர்ந்து பார்க்கிறேன். நன்றாக இருக்கிறது. ஆனா கொஞ்சம் கோபக்காரர்னு பட்சி சொல்லுது. சரியா?

    ReplyDelete
  14. "எனது பதிவைப் பார்த்து ஒருவர், ஒரே ஒருவர் நிறுத்திடலாமானு நினைத்தால் கூட எனக்கு வெற்றி தான்."
    அவ்வளவு சுலபத்தில் நிறுத்த முடியாது ... பல சமுதாய சிக்கல்கள் இருக்கின்றன... நாலு பேர் ஒரு அலுவலக் விருந்தில் மது அருந்துபோது நாம் சும்மா இருக்க முடியாது... குறிப்பாக, வெளிநாட்டினரை உபசரிக்கும்போது, மதுவை தவிர்க்க முடியாது ..( அவராக பார்த்து வேண்டாம் என சொன்னால்தான் உண்டு )

    ஆனாலும், கணையம் கல்லிரல் என நீங்கள் பயமுறுத்தி இருப்பதற்கும், உங்கள் சமுக அக்கறைக்கும் மதிப்பு அளித்து சிலர் நிறுத்த கூடும்..
    என்னை பொறுத்தவரை, குறைத்து கொள்கிறேன் என உறுதி கூறுகிறேன்... அலுவலக நிமித்தம் அல்லாத, என் தனிப்பட்ட நண்பர்களுக்காக அருந்துவதை நிறுத்த முடியும்... நிறுத்துகிறேன்...
    இது வெறும் பேச்சு அல்ல... இன்று நனப்ரகளுடன் பார் செல்வதாக இருந்தது... அதை ரத்து செய்து விட்டேன்...

    ReplyDelete
  15. மருத்துவ தகவலை ஒரு குடும்பக் கதை பாணியில் சொல்லி அசத்தியிருக்கீங்க..! இந்த நடையில் தகவல்களை படிப்பதால், ஈஸியாக மனதில் பதிகிறது. சுவாரஸ்யமாகவும் இருக்கிறது. நல்ல முயற்சிங்க..! வாழ்த்துக்கள்!

    -
    DREAMER

    ReplyDelete
  16. very sorry பார்வையாளன்,
    உங்கள் பின்.. பார்த்ததும் உடனே பதில் போட விரும்பினேன்.
    நீண்ட விடுமுறைக்குப் பின் இன்று பணிக்கு சென்றதால் நினைத்ததை நடத்த முடியவில்லை. நீங்கள் சொல்லி இருப்பது தொடர்ந்து கடைப்பிடிக்க முடியுமா என்பது கேள்வி இல்லை. நினைத்ததற்க்கே மிகப் பெரிய நன்றி. முயன்றால் முடியாதது எதுவும் இல்லை.

    ReplyDelete
  17. கல்லீரல் கணயம் பற்றீ ரொம்ப சுவாரசியமான இடுகை ..பயனுள்ளதும் கூட...அழகா சொல்லிட்டீங்க ராஜ்

    ReplyDelete
  18. உடன் பிறவா சகோதரிகள் என்றவுடன் பிரபலமானவர்களைப் பற்றிய பதிவோ என்று ஆர்வமாக படிக்கத் தொடங்கினேன் ! ! ! ஆனால் பிரமாதமான பதிவு ! ! !

    ReplyDelete
  19. நன்றி maiden போஸ்ட். தங்கள் முதல் வரவு நல்வரவு ஆகுக. ஒரே நேரத்தில் மூன்று பதிவுகளைப் பார்த்து பின்... இட்டதில் மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
  20. just facts; still something is special. may be the presentation or the cute doggy at the top :)

    ReplyDelete
  21. ””நெட் கிடைச்சு ஒரு வழியா கண்ணச் சுழற்றுகிற பத்தரை மணி இரவில்” நானும் மனைவியும் உங்கள் ‘அப்பாவைப் பற்றிய’ இடுகையை படித்து முடித்து விட்டோம்.....முடிகிற துயரில்லை அது.. ஆனால் இடுகை அழகாக முடிந்திருக்கிறது..நன்றியும் வாழ்த்துக்களும்-கலாப்ரியா

    ReplyDelete
  22. மிக நேர்த்தியான பதிவுங்க.... இம்பூட்டு செய்தி இருக்கா இந்த கலையத்தில.... மன்னிக்க கணையத்தில..... தகவலுக்கு மிக்க நன்றி.

    உங்களுக்கு மே தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  23. நல்ல பதிவு. தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!