Bio Data !!

10 May, 2010

மாயக் கண்ணன் ... நிறைவு பாகம்

போனவன் போயே போய் விட்டான். ....
நேரம் நகர நகர சுமி பதறத் தொடங்கி விட்டாள்.
" என்னம்மா, இவர இன்னும் காணோம். புள்ளைய வேற தூக்கிட்டு போனாங்க."
"பயப்படாத, எங்கேயாவது லேட் ஆகி இருக்கும். வந்திரும்."
"பச்ச மண்ண தூக்கி தூக்கி போடாதீங்கன்னா கேட்கிறதே இல்லை. ஏதாவது ஆகி இருக்குமோ? எனக்கு பயமா இருக்கும்மா." என்றாள்.

"நீ வேற எப்போ பார்த்தாலும் தப்பு தப்பா நினைச்சிக்கிட்டு. தம்பி அடுத்த பஸ்ல போகலாம்னு நினைச்சு இருக்கும்." தனக்குள்ளே இருந்த பயத்தை மறைத்துக் கொண்டே பேசினாள் அம்மா.

"அண்ணா, நீயாவது வா அண்ணா, ரெண்டு மணி நேரத்துக்கு மேல ஆயிடுச்சு. ஒரு வேளை வீட்டுக்கு போய் இருக்காங்களோ என்னமோ. வா ஒரு நடை வீட்டில போய் பார்த்திட்டு வந்திடலாம்."

"அம்மா நீ அவங்க வந்தாங்கன்னா இருக்கச் சொல்லு. கிளம்பிட வேணாம். நாங்க இதோ வந்திறோம்." தூக்கி இடுப்பில் செருகி இருந்த புடவையை இழுத்து விட்டபடி, வீட்டுச் சாவியை எடுத்துக் கொண்டே 'வாண்ணா' என்றாள்.

ஓட்டமும் நடையுமாக சென்று வீட்டை திறந்தாள்."அண்ணா, இங்கே வாயேன் பீரோ திறந்து கிடக்குது. ஐய்யயோ ! திருடன் வந்திட்டான் போலிருக்கே." என்றவாறு தன் சொற்ப நகைகளை முடிந்து வைத்திருந்த இடத்தில் பார்த்தாள். நட்டு வைத்த கல்லாய் அசையாது இருந்தது. அப்பொழுது தான் ஒரு உண்மை அவள் முகத்தில் அறைந்தது. கணவனாகப் பட்டவனின் உடைகளை வைத்திருந்த மொத்த பகுதியும் காலியாக இருந்தது. தனக்கு வந்த சந்தேகம் உண்மையானால் தன் மொத்த வாழ்க்கையும் பாழ்.
அப்பொழுது தான் நினைவுக்கு வந்தவளாக " ஐயோ, என் குழந்தை" என்று அலறினாள்.

" இரும்மா, பதறாத. மாப்பிள்ளை மேல சந்தேகம் வர மாதிரி இது வர நடந்ததில்லை. நம்ம ஒரு பக்கம் வந்திருப்போம். அவர் ஒரு பக்கம் போய் இருப்பார். நான் வீட்டுக்கு ஒரு போன் பண்ணி பார்த்திட்டு வரேன்" என சதீஷ் சொல்லும் போது தான் கவனித்தான், பீரோவின் மேல் வைக்கப்பட்ட ஒரு துண்டு துள்ளிக் கொண்டிருந்தது .

"இதென்ன?" ஏதாவது பூச்சி பொட்டாக இருக்குமோ என பயந்த படியே தொடப் போகும் போதே தெரிந்து விட்டது அது சைலன்ஸ் மோடில் போடப்பட்ட ஒரு செல் போன் என்பது.
அவசரமாக எடுத்தான். " ஹலோ" என்றான் ஆனால் அவனுக்கு இருந்த பதற்றத்தில் குரலே எழும்பாததால் எதிர் முனையில் இருந்தவன் அடையாளம் கண்டு கொள்ளாமலே பேசத் தொடங்கினான், " அண்ணே ! நம்ம ப்ளான்ல மாற்றம் இல்லை தானே. சொன்ன படி கிளம்பிடுங்க. நான் எல்லா ஏற்பாடும் பண்ணிட்டேன். துபாய் பார்ட்டி. புள்ள வேற தங்க விக்ரமா இருக்கிறானா என்ன கேட்டாலும் கொடுப்பாங்க. இந்தக் கையில பணத்தை வாங்கறோம். அந்தக் கையில புள்ளையக் கொடுத்துட்டு நீங்க வடக்கப் பாக்க போங்க நான் கிழக்கப் பார்க்க போறேன். " சதீஷ் அவன் பேச்சில் பேயறைந்ததைப் போல் இருக்க அவன் அப்பொழுது தான் எதிர் முனையில் பதிலே இல்லாததைக் கண்டு ஒரு சில நொடிகள் தயங்கி கட் செய்தான்.

சுமிக்கு நடப்பது எதுவும் தனக்கு நல்லதற்க்கில்லை என்பது மட்டும் புரிந்தது. எதுவும் பேசாமல் அண்ணனையே வெறித்தபடி இருந்தாள். சதீஷ் கால் வந்த எண்ணுக்கே மறுபடியும் அழைத்தான்.
 மறு முனையில் இருந்தவன் தான் ஒரு எண்ணிலிருந்து அழைப்பதாகவும், தன்னை வேறு எண்ணுக்கு அழைக்க வேண்டும் எனவும் பேசி இருந்ததற்கு மாறாக தான் அழைத்த எண்ணுக்கே அழைப்பு வந்ததும் மறு முனையில் தான் எதிர்பார்த்தவர் இல்லை எனப் புரிந்து கொண்டு அமைதியாக இருந்தான்.

"நாம மோசம் போய்ட்டோமே!" என முணங்கிய படி சரிந்தான் சதீஷ்.
"என் புள்ளை, என் புள்ளை " என புலம்பிய படியே ஒரு பக்கம் விழுந்து கிடந்தாள் சுமி.

அவசர அவசரமாக ஒரு  ஆட்டோ பிடித்து தங்கையையும் ஏற்றி அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு விரைந்தான். சுருக்கமாக நடந்தவற்றை விவரித்தான்.

"அவன் எந்த ஊருன்னு சொல்றீங்க?" என்றார் அதிகாரி.
"தெரியல சார்"
"தெரியலையா?  சார் உங்க தங்கையை கல்யாணம் பண்ணிக் கொடுத்து இருக்கீங்க. எந்த ஊர் காரன்னு தெரியலன்னு சொல்றீங்க"
"தனக்கு குடும்பமோ, உறவுக்காரங்களோ கிடையாதுன்னு சொன்னான். ரொம்ப நல்லவனாத் தெரிஞ்சான்."
"ஆள் பார்க்க நல்லா இருந்தான்னு சொல்றீங்க. உங்களுக்கெல்லாம் ஆள் வெள்ளையும் சொள்ளையுமா இருந்தா நல்லவனாத்தான் இருக்கணும்னு அசைக்க முடியாத நம்பிக்கை. 
"சரி எங்கே வேலை பார்த்துக் கொண்டு இருந்தான்."
"சார், ஆரம்பத்தில ரெண்டு மூணு கம்பனி மாறினார். இடம் பிடிக்காம மாறினார்னு நினைச்சேன். தானா எதுவுமே சொல்ல மாட்டார் சார், அதனால அப்பறம் நான் கேக்கிறதே இல்லை" னு சொல்லும் போதே தன் முட்டாள் தனம் மஞ்சள் கோடிட்டு தெரிந்தது. 
"உங்களுடைய முட்டாள் தனத்தினால இப்போ எத்தனை பேருக்கு வேலை பாருங்க. இவனை கண்டு பிடிக்கிறது வரை எங்களுக்கு சாப்பாடு கிடையாது, தூக்கம் கிடையாது." 
"குழந்த பேர் என்னனு சொன்னீங்க. "
"கண்ணன்" 
தன் குழந்தையின் பெயரைக் கேட்டதும் இது வரை வெறித்தது போல் இருந்த சுமித்ரா எழுந்து அதிகாரியின் சட்டையை பிடித்தாள். " என் பிள்ளையை எங்கேடா? எங்கே? "என்று உலுக்கினாள். அது வரை அதிர்ச்சியில் தான் இப்படி இருக்கிறாள் சரியாகி விடுவாள் என்று எண்ணிக் கொண்டு இருந்தவனுக்கு அப்பொழுது தான் புரிந்தது அவள் மன நிலை பாதிக்கப் பட்டு விட்டது என்று. அவளை இழுத்து வந்து "எப்படியாவது கண்டு பிடிச்சிடுங்க சார், எங்க குல விளக்கு சார், அது. " என்றான். 

கண்டு பிடிச்சிடலாம். எங்கே போயிடப் போறாங்க. என்ன, அந்தக் குழந்தை விஷயம் தான் கொஞ்சம் உறுத்துது. கை மாறிட்டா விஷயம் கொஞ்சம் கஷ்டமாயிடும். பார்க்கலாம்.அந்த செல் போனை கொடுத்துட்டு போங்க.  அவன் போட்டோ மட்டும் கொண்டு வந்து கொடுங்க. உங்க தங்கையை பார்த்து கூட்டிகிட்டு போங்க . ரொம்ப அப்செட் ஆனா மாதிரி தெரியுது. "
என்றார் காவல் துறை அதிகாரி.

அம்மா, போராட்டங்களை சந்தித்து சந்தித்தே இதயம் பலகீனமாகிப் போனவள் , அவளிடம் இந்த  விஷயம் சொல்லப் போவது சுலபமாக இருக்கப் போவதில்லை.
வீட்டு வாசலில் நிலைப் படியில் தலை சாய்த்து அமர்ந்திருந்த அம்மா ஆட்டோ சத்தம் கேட்டு  திடுக்கிட்டு எழுந்தாள். " என்னடா, என்ன ஆச்சு? ஐயோ என் புள்ளைக்கு என்ன ஆச்சு?" என்றபடி சுமியை கைத்தாங்கலாக பிடித்தாள்.

"வீட்டுக்குள் வந்து விஷயம் முழுவதும் கேட்டு முடித்ததும் நெஞ்சைப் பிடித்துக் கொண்டே சாய்ந்திருக்கும் அம்மா கொஞ்ச நேரம் ஆனால் சரியாகி விடுவாள் என்று இருப்பதா?

குடிமி வைத்த திண்டுத் தலையணையை அணைத்த படி " என் புள்ளை, என் புள்ளை " என அரற்றிக் கொண்டிருக்கும் மன நிலை திடீரென பாதிக்கப் பட்ட தங்கை இயல்பாகி விடுவாள் என்று நம்புவதா?

காவல் குழந்தையை கண்டு பிடித்து விடுமா? நான் என் கடமையில் கொஞ்சம் மெத்தனமாக இருந்து விட்டேனோ இன்னும் கொஞ்சம் அவனைப் பற்றி விசாரித்து இருக்கலாமோ. எனக்கு ஒரு அன்பான பெண்ணின் தோளில் சாய்ந்து விம்மி வெடிக்க வேண்டும் போல் இருக்கிறதே."

பலவிதமான எண்ணச் சுழல் சதீஷை புரட்டி எடுக்க ஒரு கையால் தன் தங்கையின் தலையை வருடிய படி மறு கையால் தாயின் நெஞ்சை நீவிக் கொண்டே " ஒரு கல்யாணம் பண்ணி இருந்திருக்கலாமோ? நான் சாய ஒரு தோள் வேண்டுமே? "
என  நினைத்தான்.

25 comments:

  1. "ஆள் பார்க்க நல்லா இருந்தான்னு சொல்றீங்க. உங்களுக்கெல்லாம் ஆள் வெள்ளையும் சொள்ளையுமா இருந்தா நல்லவனாத்தான் இருக்கணும்னு அசைக்க முடியாத நம்பிக்கை.
    "


    ......விழிப்பாய் இருக்கிறவர்கள் கூட, கன நேரத்தில் எப்படி ஏமாந்து விடுகிறார்கள்? மனதை உலுக்கும் கதை.

    ReplyDelete
  2. I appreciate ur immediate response chitra.
    எழுத ஆசைப்படுறவங்களுக்கு இந்த மாதிரி உந்துதல் தேவையாயிருக்கு. அது வலைப்பூவில் அதிகம் கிடைக்குது. நன்றி.

    ReplyDelete
  3. //நான் என் கடமையில் கொஞ்சம் மெத்தனமாக இருந்து விட்டேனோ இன்னும் கொஞ்சம் அவனைப் பற்றி விசாரித்து இருக்கலாமோ.///

    இது தான் க‌ண் கெட்ட‌ பின் சூரிய‌ந‌ம‌ஸ்கார‌ம் என்ப‌தா?... க‌தை ந‌ல்லா இருந்த‌துங்க‌..

    ReplyDelete
  4. பட்டுன்னு முடிச்சிட்டீங்க..?!?!
    :(

    ReplyDelete
  5. கதை நல்லா இருக்குதுங்க.......... கடைசி கட்டங்களில் நிறைய மாற்றம் நல்ல யோசிச்சிருக்கீங்க.., நல்ல ஆக்கம், வாழ்த்துக்கள்..!

    ReplyDelete
  6. நன்றி நாடோடி. ஒரு குறிப்பிட்ட நட்சத்திரம் உள்ளதால் உறவுகளே இல்லாத வரன் வந்ததும் வேகமாக திருமணம் முடித்ததாக எழுத நினைத்தேன் பின்னர் அந்த குறிப்பிட்ட நட்சத்திரம் உள்ள யாரையும் வருத்தி விடக்கூடாதென்று விட்டு விட்டேன்.

    ReplyDelete
  7. இன்னும் எழுதினா வள வளன்னு ஆகிடுமோனு தோணுச்சு மணிகண்டன்

    ReplyDelete
  8. நன்றி சிவா, என்ன நண்பர்கள் இருவரும் அடுத்தடுத்து பின்... போட்டுடீங்க.

    ReplyDelete
  9. கலாப்பிரியா சார், உங்க மெயில் பப்ளிஷ் பண்ணினேன், எங்கேயோ பறந்து விட்டது. வரும் வரும் வரும் னு காத்து இருக்கிறேன்.
    தங்கள் பின்... என்னை மிகவும் உற்சாகப் படுத்துகிறது நன்றி.

    ReplyDelete
  10. உயிர்களின் சுபாவம் விசித்திரமானது, அது கடும் வெப்பத்திலும் குளிர்ச்சியான இடத்தை தேடிக்கொள்ளும் என்ற புத்தரின்(தம்மபதச்)சிந்தனைகளை....நினைவூட்டியது.. கதையின் முடிவு...அங்கேதான் ஒரு சிறுகதை மலர்கிறது...என்ற ரீதியில் எழுதியிருந்தேன்..

    ReplyDelete
  11. //நாய்க்குட்டி மனசு said...

    இன்னும் எழுதினா வள வளன்னு ஆகிடுமோனு தோணுச்சு மணிகண்டன் ///


    ரொம்ப சரி , கரக்டா முடிசிருகீங்க

    ReplyDelete
  12. இவ்ளோ வெள்ளந்தியாவா அண்ணங்காரன் இருக்கணும்னு கோவம் வருது!!

    ReplyDelete
  13. you know how to write..i appreciate it..

    But you know where to stop.. that makes story so grisp and great...

    well written

    ReplyDelete
  14. அண்ணனுக்கு வீட்டில் ஒரு இழப்பு ஏற்பட்ட தருணத்தில் தனக்கு ஒரு இணை வேண்டும் என்ற சிந்தனை ஏற்பட்டது கதையில் ஒரு நெருடலாக இருக்கிறது தோழி...தோள் சாய துணை வேண்டும் என்பதுதான் கருத்தா..?
    மற்றபடி விறு விறுப்பான கதை ஓட்டம்...!!குட் வொர்க்

    ReplyDelete
  15. நெஞ்சை கஷ்ட படுத்துற கதை. ரொம்ப நல்லா ஏழுதி இருக்கீங்க அக்கா

    ReplyDelete
  16. ஹுசைனம்மா , அப்படிப்பட்ட ஒரு அண்ணனின் கதை. நன்றி

    ReplyDelete
  17. நன்றி அஹமத் இர்ஷத் தங்கள் முதல் வரவு நல் வரவு ஆகுக

    ReplyDelete
  18. தங்கள் பாராட்டுக்கு நன்றி பார்வையாளன்

    ReplyDelete
  19. சதீஷ் இவன் மிகச் சாதாரண தன் தங்கைக்கு ஒரு வரன் கிடைத்த சந்தோஷத்தில் வேறு எதையும் ஆராயாத மிகச் சராசரி மனிதன். அவனில் இருந்து யோசித்து பாருங்கள் அப்படித்தான் நினைக்கத் தோன்றும். நன்றி

    ReplyDelete
  20. நன்றி RJ , எங்கே ப்ளாக் பக்கம் ரொம்ப நாளா காணோம் ?

    ReplyDelete
  21. இந்த கதையோட நடையால் வெகுவாக கவரப்பட்டேன். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  22. நன்றி நீச்சல்காரன். தங்கள் முதல் வரவு நல்வரவு ஆகுக.
    உங்களைப் போன்றவர்களின் ஊக்கம் எழுதிப் பார்க்க சொல்கிறது. நன்றி.

    ReplyDelete
  23. ஒரு குடும்ப செண்டிமெண்ட் த்ரில்லர்... நல்ல நடையுள்ள கதை... முடிவை, எதிர்பாரா இடத்தில், யதார்த்தமாகவும், மனரீதியாகவும் முடித்திருக்கிறீர்கள்... தொடர்ந்து கலக்குங்க..!

    -
    DREAMER

    ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!