Bio Data !!

24 May, 2010

சிவசு வாத்தியார் - பாகம் ஒன்று

சிவசு வாத்தியார்.
கொளுத்தும் வெயிலுக்கு விரித்து பிடித்த குடையும், கால் தடுக்காமல் வேட்டியின் ஒரு முனையை வலது கையின் இரு விரல்களால் தூக்கிப் பிடித்த படி மெல்ல நடந்து வந்து கொண்டு இருந்தார்.
அவரது நடையில் ஒரு மெல்லிய சோகம்.
இன்றோடு இருபது ஆண்டுகளாக சுமந்து கொண்டிருந்த சோகத்தை இறக்கி விடலாம்.
அவரது அறுபதாம் கல்யாணத்தை சிறப்பாக கொண்டாட பிள்ளைகள் திட்டம் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு இது மிகப் பெரிய அதிர்ச்சி தான்.
அவரது நிலை கண்டு கோபித்து சிவந்தது போல் எழுந்து நிற்கிறது கோர்ட் கட்டடம்.
இன்றோடு அவருக்கும் சியாமளாவுக்கும் இருந்த திருமண உறவு முறிகிறது.

சிவசு ஐயா நாற்பது ஆண்டுகளுக்கு முன் மதுரைக்கும் காரைக்குடிக்கும் இடையேயான நத்தம் என்ற கிராமத்துக்கு ஆசிரியராக வந்து சேர்ந்தார். நல்ல உயர்ந்த ஆஜானுபாகுவான தோற்றம். அசப்பில் அன்றைய ரங்காராவ் . மாணவர்கள் அவரை சினிமா கதாநாயகன் போல் கவனித்தார்கள். அவர் சொல்வது தான் மாணவர்களுக்கு வேத மந்திரம்.

அவரது உயரத்திற்கு பொருத்தமாய் திருமாலுக்கு லக்ஷ்மி போல் கூட வந்தாள் அவரது மனைவி சியாமளா.இருவருக்கும் இடையே பத்து வயது வித்தியாசம். இருவரையும் கிராமமே கொண்டாடியது. ஆதர்ச தம்பதிகளுக்கு ஒரு உதாரணமாக. . காலையில் காபி டபராவுடன் இருவரும் வாசலில் அமர்ந்து பேசிக் கொண்டு இருப்பதை வயலுக்கு போகும் அவசரத்திலும் கவனித்து புன்னகைக்கும் கிராம மக்கள்.

எந்த ஒரு பரபரப்பும் இன்றி வாழ்க்கையை ரசித்து சுவைக்கும் ஒரு குடும்பம். அழகழகாய் ஆணொன்றும் பெண் ஒன்றுமாய் இரு பிள்ளைகள். இரவு படுத்த படி அவர் கதைகளை உரக்க படிக்க, வேண்டாம் வேண்டாம் என்றாலும் கூட  கால்களைப் பிடித்து விட்ட படி சியாமளா அதை கேட்பது வாடிக்கையாய் இருந்தது. காவியக் குடும்பம்.

அன்று  பள்ளியில் ஆண்டு விழாவுக்காக மாணவர்கள் ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்க மீதி மாணவர்கள் வகுப்பில் இருந்தனர். 

வாத்தியார் "இப்போ எல்லோரும் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்குது. எப்படி இருக்கணும்னு ஆசைப்படுறீங்கனு ஒவ்வொருத்தராய் வந்து சொல்லுங்க பார்ப்போம் " என்றார்.  

வேகமாய் எழுந்து வந்த ஒரு மாணவன் " ஐயா ! நான் பெரியவன் ஆனதும் உங்களைப் போலவே வாத்தியார் ஆகணும். எங்க அப்பா எப்போ பார்த்தாலும் அம்மாவை அடிச்சிட்டே இருப்பார் ; அப்படி இல்லாம வீட்டிலேயும் உங்களைப் போலவே அன்பா இருக்கணும்."  என்று சொல்லி விட்டு உலகத்துக்கே மிகச் சிறந்த ஒரு சேதியை சொல்லி வந்ததைப் போன்ற பெருமிதத்துடன் நடந்து சென்று அமர்ந்தான். 

மற்றுமொரு மாணவன் " ஐயா ! நான் ஆட்சி தலைவர் ஆகணும். நான் பேசிற எல்லா கூட்டங்களிலும் நான் இப்படி வருவதற்கு சிவசு ஐயா தான் காரணம்னு சொல்லணும். 
இப்போ எங்க வீடு சுத்தமே இல்லாம இருக்கு. நான் பெரியவன் ஆனா எங்க வீட்டை உங்க வீடு போல சுத்தமா வைச்சுக்கணும். " என்றான்.

மொத்தத்தில் எல்லா மாணவர்களுமே  சிவசு ஐயாவை ஒரு ரோல் மாடலாக சித்தரித்து பேசி முடித்தார்கள். இது இன்று நேற்றல்ல . பல ஆண்டுகளாக ஐயாவின் மாணவர்களின் நிலைப்பாடு இது தான்.ஐயாவுக்கு சந்தோஷமாக இருந்தாலும் கூட " எல்லோரும் என்னைப் போல இருக்கணும்னு சொன்னதில எனக்கு சந்தோசம் தான். இருந்தாலும் நானும் ஒரு மனிதன் தான். தவறுகள் செய்யலாம். என்னை முன்னோடியாக கொள்வதற்கு பதிலாக நீங்கள் எப்படி எல்லாம் இருக்கணும்னு நினைக்கிறீங்களோ அந்த குணங்கள் கொண்ட ஒரு மனிதனை கற்பனை முன்னோடியாக வையுங்கள். தினம் தினம் உங்களுக்கு அறிமுகம் ஆகும் நல்ல குணங்களால் அவரை அழகு படுத்துங்கள். அந்த மனிதன் ஒரு போதும் தவறு செய்ய மாட்டார். அந்த மனிதரைப் போல நீங்கள் ஆக முயற்சி செய்யுங்கள்." என்றார். 

பேசிக் கொண்டிருக்கும் போதே பள்ளி மணி அடிக்க மாணவர்கள் மாலையில் கூடு திரும்பும் பறவைகளைப் போல சல சலத்து கலைந்தனர். அதில் சில மாணவர்கள் ஆசிரியரின் அருகில் வந்து ' இரவு வணக்கம் ஐயா' என்று சொல்லி ஓடினர். சிவசு ஐயாவுக்கு தான் பேசிய வரிகளில் ஒன்று மட்டும் மறுபடி மறுபடி மனதில் ஓடிக் கொண்டிருந்தது. "நானும் ஒரு மனிதன் தான். தவறுகள் செய்யலாம்." அப்படியே இரு கைகளாலும் தலை முடியை பின்னுக்கு ஒதுக்கி விட்டபடி நாற்காலியில் சாய்ந்தார். " நான் ஏன் எல்லா மனிதர்களையும் போல உழைத்து களைத்து மனைவியை கூடி ஒரு சாதாரண வாழ்க்கை வாழ முடியவில்லை. தமிழக அரசின் விருது பெற்றது போன்ற மிகச் சந்தோஷமான நாட்களிலும், சாதத்தில் கள்ளிச் சொட்டாய் கருவாட்டுக் குழம்பு ஊற்றி  உருட்டிக் கொடுத்த தாய்க்கும் கம்பீரத்தைக் கற்றுத் தந்த தந்தைக்கும் திருமண வெள்ளி விழா  முடிந்த நிறைவிலும், இதைப் போன்ற இன்னும் சில சிறப்பான சந்தர்ப்பங்களில்  மட்டுமே மனைவியைக் கூடி இருக்கிறேன் காரணம் எதுவும் சொல்லாமல் சியாமளா அழுத போது அவளைச் சமாதானப் படுத்தி, அப்பொழுது கூட அழுததன் காரணம் கேட்காமல் பூனைக் குட்டி போல் நெஞ்சில் சாய்ந்திருந்தவளை ஆற்றுப்படுத்திய போது ஒரு முறை. "
எண்ணி விடலாம் சேர்ந்து இருந்த நாட்களை. அப்படிப் பட்ட அற்புதமான நாட்களில் உருவானது தான் இரண்டு முத்துக்கள்.

மற்ற சந்தர்ப்பங்களில் அவளை ஒரு மனுஷியாக மதித்து அவளது ஆசா பாசங்களுக்கு முக்கியத்துவமே தரத் தோன்றியதில்லை. இயல்பிலிருந்து தான் விலகி இருப்பதாகவே தோன்றியது. சிந்தித்த படியே கண் அயர்ந்து விட்டார். "ஐயா, வீட்டுக்கு போகலிங்களா ஐயா ?" என்று பள்ளி யின் பணியாள் வந்து குரல் கொடுத்ததும் தான் விழித்தார்.

மறு நாளில் இருந்து தனது வாழ்க்கையில் இடி மின்னல் புயல் வரப் போவதை உணராமல் வீட்டுக்கு கிளம்பினார்.

(இன்னும் வரும்)

16 comments:

  1. அவர் "self-assessment" செய்து கொள்ளும் வேளையில், இன்னும் இடி மின்னலாய் சம்பவங்களா? சரியான இடத்தில் பிரேக் போட்டு இருக்கீங்க.....

    ReplyDelete
  2. ரொம்ப பிடிச்சிருக்கு நடை. தொடருங்கள்.

    ReplyDelete
  3. சித்ரா நன்றி, வழக்கம் போல் சூடு ஆறும் முன் விமர்சனம். என்னை குதூகலப் படுத்தும் விஷயம் இது நன்றி.

    ReplyDelete
  4. நன்றி தமிழ், எங்கே ரொம்ப காலமா காணோம்.

    ReplyDelete
  5. வானம்பாடிகள் ஐயா, உங்களுக்கு பிடிக்கும் விதத்தில் எழுதுவது எனக்கு பெருமை. நன்றி

    ReplyDelete
  6. அட‌டே... அடுத்த‌ தொட‌ர்க‌தையா?... ஆர‌ம்ப‌மே ந‌ல்லா இருக்கு..தொட‌ருங்க‌ள்..

    ReplyDelete
  7. //சாதத்தில் கள்ளிச் சொட்டாய் கருவாட்டுக் குழம்பு ஊற்றி//

    இந்த சாரதாரண வரிகளில் அவரின் ஆரம்ப வாழ்கையின் ஏழ்மையும்., தாயும் சேய்க்குமான அன்பையும் அழகாக வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்.. மற்றபடி தலைப்பிலிருந்தே ஆரம்பிக்கிறது கதை, தொடர்ச்சிக்கு காத்திருக்கிறேன்.. :)

    ReplyDelete
  8. நன்றி நாடோடி,
    நன்றி சிவா , உங்கள் ஆதரவு தொடரட்டும்

    ReplyDelete
  9. ஒவ்வொரு மனிதனும் வெளியே ஒரு முகம், உள்ளே ஒரு முகம் என்று இருக்காங்க
    சீக்கிரம் மீதி பதிவையும் போடுங்க ;)

    ReplyDelete
  10. நன்றி சேது, இந்த குழப்பம் தான் சில சமயங்களில் வாழ்வில் நம்பிக்கை இழக்க வைக்கிறது.

    ReplyDelete
  11. அருமையான தொடக்கம்... மனதின் சென்சிடிவான பிரசினைகளை தொட்டு இருக்கிறீர்கள். இதை தொடர்வது பெரிய சவால்... இந்த சவாலில் வெற்றி பெறுவீர்களா என ஆவலுடன் கவனிக்கிறேன் ( வெற்றி பெற வேண்டும் எனபது என் விருப்பம்..அனால் அது அவ்வளவு சிலாபம் அல்ல ) . சீக்கிரம் அடுத்த பகுதியை வெளி இ டுங்கள்

    ReplyDelete
  12. கதை சுவராஸ்யம்.. நல்லாயிருக்கு அடுத்ததுக்காக வெயிட்டிங்..

    ReplyDelete
  13. பார்வையாளன் நான் எழுதுவது பெரிய சவாலான கருவாக எனக்கு தெரியவில்லை. அதில் ஜெயிப்பது தோற்ப்பது வும் இல்லை. ஏதோ என் சிற்றவிற்க்கு தோன்றுவதை எழுதுகிறேன். உங்கள் ஆதரவிற்கு நன்றி. அடுத்த பகுதி போட்டாச்சு படியுங்கள்.

    ReplyDelete
  14. இர்ஷாத் , நன்றி, நோ வெய்டிங் , proceed

    ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!