Bio Data !!

10 August, 2010

எண்ணச் சிதறல்கள் !!

எங்க வீட்டு கல்யாணத்தில பணம் திருடு போனதை கதையாக்கி இருந்தேன்.
இப்போ அதை திரும்ப பெற நாங்க பட்ட பாட்டை கொஞ்சம் சொல்றேன்.
காவல் துறையில் எங்கள் உறவினர் ஒருவர் மிக உயர்ந்த பதவியில் இருக்கிறார். அவர் திருமணத்திற்கு வந்ததால் கவனமாக இருந்த திருடன் அவர் சென்றதும் பணத்தை ஆட்டைய போட்டு விட்டான்.
உடனே அவருக்கு போன் கால் பறக்க இங்குள்ள உயர் அதிகாரிகளுக்கு தகவல் வந்து உடனே மண்டபத்துக்கு வந்து விட்டார்கள்.
வழக்கமான விசாரணை.
கீழே சாப்பாட்டு ஹால், மாடியில் ரிசெப்ஷன்.  நாங்கள் 'ஒரு' வீடியோ தான் ஏற்பாடு செய்திருந்தோம் ( அறியாமை தான், இனிமே கூட்டம் அதிகம் எதிர்பார்ப்பவர்கள் இரண்டு வீடியோ ஏற்பாடு செய்து கொள்ளுங்கள். சாப்பிடும் இடத்திற்கு தனியாக ஒன்று ) . காவல், கீழே சாப்பாட்டு அறையில் இருந்தவர்களை வீடியோ எடுத்தீர்களா என்றார். "இல்லை மாடியில் ஏகக் கூட்டமாய் இருந்ததால் கீழே வர முடியவில்லை." என்றோம். 
அப்படி இருக்கும் பட்சத்தில் அவனைப் பிடிப்பது சிரமம் தான் என்றும், திருடப் பட்டது பணமாக இருப்பதால் திரும்பக் கிடைப்பது சந்தேகம் தான் எனவும் பலர் பல விதமாக நம்பிக்கை அ'ழி'த்தார்கள்.
பணத்தை திருடியவன் தன்னை யாரும் பார்க்கவில்லை என்று உள்ளூரிலேயே இருந்திருக்கிறான். இதே மண்டபத்தில் முன்னர் ஒரு திருமணத்தில் மணப் பெண்ணின் நகை திருடு போய் இருக்கிறது. அவர்கள் வீடியோ வில் இருந்து சந்தேகப் படும் நபராக ஒரு பதினாறு வயதுப் பையனின் போட்டோ போலீஸ் ஸ்டேஷன் இல் இருந்தது. அதையும் வேறு சில நபர்களின் போட்டோ வையும் காட்டும் போது  சந்தேகப் படும் நபரை நன்றாக கவனித்திருந்த எங்கள் உறவுப் பெண் அந்த பதினாறு வயது பையனை உறுதியாக அடையாளம் காட்டினாள். 
அந்தப் பையனின் போட்டோ பேப்பரில் போடப் பட்டு "இவனைக் கண்டு பிடித்து தருபவர்களுக்கு தக்க சன்மானம் தரப்படும்" என அறிவிப்பு வந்தது. உடனே புள்ளி அலெர்ட் ஆகி திருப்பதிக்கு பறந்து விட்டது.
ஒரே மாதத்தில் காவல் துறை திருப்பதியில் இருந்தவனை கொத்தாக அள்ளிக் கொண்டு வந்து விட்டது. ஆனால் படு பாவி, நாங்கள் தொலைத்ததாக சொன்ன தொகையில் நாலில் ஒரு பங்கு தான் இருந்ததாக சத்தியம் அடித்திருக்கிறான்.
அவன் கையில் பணமாக இருந்தது Rs 27000/- மட்டுமே. ஒரு மாதத்தில் இவ்வளவு பெரிய தொகை ஒருவனால் செலவு செய்ய முடியுமா என்ற எண்ணத்தால் காவல் துறைக்கு, நாங்கள் திருடு போனதாக சொன்ன தொகையில் சந்தேகம் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். 
ஆனால் ஒரு சில நாட்களுக்குள்ளேயே அருகில் உள்ள ஒரு சிற்றூரில் சிலை கடத்தப் போவதாக வந்த தகவலில், இருந்த காவல் துறையின் கண்காணிப்பில், தங்களைக் கண்டதும் u டர்ன் அடித்த  ஆட்டோ மேல் சந்தேகம் வர மடக்கிப் பிடித்ததில் எங்கள் இல்லத் திருமணம் நடந்த மண்டபத்தில்  திருடிய பணத்தை முன் பணமாகக் கொடுத்து வாங்கப் பட்ட ஆட்டோ என்றும்  அந்தப் பயத்தில் தான் திரும்பியதாகவும் சொல்லி இருக்கிறான் பணத்தை திருடியவனின் அண்ணன். (இறைவன் இருக்கின்றானா....? இருக்கின்றான் .)
 ஆக  நாங்கள் தொலைத்த  பணம் Rs 27000/- பணமாகவும் மீதி ஆட்டோவாகவும்   காவல் நிலையம் வந்து சேர்ந்தது.
ஓராண்டு ஓடிப் போனது. காவல் நிலையத்தைக் கடக்கும் போதெல்லாம், வெயிலிலும் மழையிலும் நிற்கும் ஆட்டோ நாம் பெற்ற குழந்தை போல் கவலை கொடுத்தது. ஆனால் கைக்கு எதுவும் கிடைக்க காணோம். இரு முறை காவல் துறை கண்காணிப்பாளரை சென்று நான் சந்தித்திருந்தேன். நம்பிக்கை தரும் விதமாக அவர் பேசினாலும் கீழே  இருப்பவர்கள் அசையக் காணோம்.
ஹலோ எப் எம் இல் 'நிலா முற்றம்' என்னும் நிகழ்ச்சி என் நண்பர் நடத்திக் கொண்டிருந்தார். அதில் ஒரு நாள் "கண்காணிப்பாளரிடம் கேட்டுப் பதில் பெற்றுத் தருகிறோம், குறைகள் இருந்தால் தெரிவியுங்கள் " என்றார். பலத்த யோசனைக்குப் பின் நிகழ்ச்சியில் எனது பிரச்னையை எடுத்துரைத்தேன். நல்ல வேளையாக திரு மஞ்சுநாதா அவர்கள் நான் அவரை சந்தித்திருந்ததை நினைவு படுத்தி தன்னை வந்து சந்திக்குமாறும் ஆவன செய்வதாகவும் கூறினார்.
எனக்கு கொஞ்சம் உள்ளூர  உதறல் தான். இருந்தாலும் நிலா முற்றம் நண்பர் "எல்லாம் நல்ல விதமாகவே முடியும். தேவை ஏற்பட்டால் என்னை அழையுங்கள். உடனே வருகிறேன்" என்று தைரியப் படுத்தி அனுப்பி வைத்தார்.
கண்காணிப்பாளர் அலுவலகம் சென்றேன். உயர் அதிகாரிகள் நால்வர் மத்தியில் எனது நிலைமையை எடுத்து உரைத்தேன். போதுமான காலம் காத்திருந்த பின் எங்கள் பணம் வந்து சேராததால் எப் எம் இல் சொல்ல நேர்ந்ததை விளக்கினேன்.
அதன் பின் ஒரு வக்கீல் மூலம் , எனக்கு ஒரு அவசர  நிதி நெருக்கடி (எங்கள் பணத்தை நாங்கள் பெற! என்ன கொடும சரவணா? ) இருப்பதால்  திருடியவனிடம் இருந்து பணமாக பெற்ற தொகையை மட்டுமாவது தருமாறு விண்ணப்பம் கொடுத்து பெற்றோம்
மீதி வரும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. 
எங்கள் வீட்டில் உள்ளவர்கள் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று என்பது போல் மனம் மாறி விட்டார்கள். என்னால் முடியவில்லை. ரத்தத்தை உழைப்பாக்கி சேர்த்த பணம் இழந்ததில் இன்னும் நெஞ்சில் லேசாக வலி தான்.
எனக்கு சில சந்தேகங்கள்: 
-> உயர் அதிகாரிகள் துணை இருந்தும் முட்டி மோத வலு இருந்தும் நம்மால் இழந்ததை முழுவதுமாக பெற முடியவில்லையே? மற்றவர்கள் கதி! 
-> சில மண்டபங்களில் மானேஜர்களின்  துணையோடு இத்தகைய திருட்டு நடக்கிறது. திருமண மண்டபங்களில் இதை தடுக்க ஏதாவது சட்ட திட்டம் கொண்டு வர முடியாதா?
(திருமணம் என்பது வாழ்வில் ஒரு முறை நடக்கும் கோலாகலம், அதை துயரம் மிகுந்ததாக்குவது தவிக்கப் பட வேண்டியது  அல்லவா?)
-> நாங்கள் கோர்ட் , கேஸ் என்று அலைய முடியாமல் கிடைத்தது போதும் என்று இருந்து விட்டோம். அதில் பிடிபட்ட திருடன் எத்தனை காலம் பெயிலில் கையெழுத்து போட்டுக் கொண்டு இருப்பான். அவனுக்கு இந்த கேஸ் முடிவுக்கு வர வேண்டியது அத்தியாவசியம் அல்லவா? 
சந்தேகங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.
கவனமாய் இருங்கள் நண்பர்களே ! ஒரு நிமிட அஜாக்கிரதை உலுக்கி விடுகிறது நம்மை.  

9 comments:

  1. வந்தவரை லாபம். அவ்வளவுதான்.

    ReplyDelete
  2. பயனுள்ள பதிவு . கூட்டம் சேரும் இடங்களில் கவனம் தேவை .
    நம்பிக்கை அழித்தார்கள் என தமிழில் விளையாடுகிறீர்கள் . இந்த தமிழ் ஆர்வத்திற்கு அடிப்படை உங்கள் ஆசிரியர்களா ? குடும்ப பின்னணியா ,நண்பர்களா அல்லது நீங்களாகவே வளர்த்து கொண்டீர்களா ?

    ReplyDelete
  3. பயனுள்ள பதிவு . கூட்டம் சேரும் இடங்களில் கவனம் தேவை .
    நம்பிக்கை அழித்தார்கள் என தமிழில் விளையாடுகிறீர்கள் . இந்த தமிழ் ஆர்வத்திற்கு அடிப்படை உங்கள் ஆசிரியர்களா ? குடும்ப பின்னணியா ,நண்பர்களா அல்லது நீங்களாகவே வளர்த்து கொண்டீர்களா ?

    ReplyDelete
  4. கோர்ட்க்கு போன‌ எவ‌ரும் சுல‌ப‌மாக‌‌ வ‌ழ‌க்கை முடித்து கொண்ட‌தாக‌ நான் இன்னும் கேள்வி ப‌ட‌வில்லை... ந‌ம்முடைய‌ காவ‌ல்த்துறையும், நீதித்துறையும் அப்ப‌டித்தான் இருக்கிற‌து. என்ன‌த்த‌ சொல்ல‌..

    ReplyDelete
  5. கொடுமைங்க.
    காவல்நிலையத்தைக் கடக்கும் போதெல்லாம், அகப்பட்ட பல வாகனங்கள், வெயில் மழையினால் பாதிக்கப்பட்டு, வழக்கு முடியும் போது, காயலான் கடை சரக்கு போல மாறிவிடுகிறது. அதிலும், அனைத்து வேலை செய்யும் பாகங்கள் முன்பே கழட்டப்பட்டிருக்கும் :(

    ReplyDelete
  6. வந்ததே போதும் என்று தான் திருப்தி கொண்டோம். நன்றி வானம்பாடிகள் ஐயா.

    ReplyDelete
  7. தானா வருது பார்வையாளன்.
    ஒரு வகையில் நண்பர்கள் ஒரு காரணம். என் இலக்கிய தாகத்தை தணிக்கும் நண்பர்கள் ஒரு சிலராவது என் அருகில் இருக்கும் படி பார்த்துக் கொள்வேன்.

    ReplyDelete
  8. எனவே தான் எங்களுக்கு இந்த முடிவு சரியானதாக தோன்றியது. நன்றி நாடோடி

    ReplyDelete
  9. இதற்கு உரியவர்கள் ஏதாவது செய்தால் பரவா இல்லை. யாருக்கும் உபயோகம் இல்லாமல் அரசுப் பேருந்துகள் பார்க்கும் போது ஒரு வலி வரும். ஆட்டோ ஏலம் போட்டு பணம் கொடுப்பார்கள் என்றார்கள். அந்த ஏலம் சென்னையில் தான் போட முடியும் என்றார்கள். கொடுமை அது பின்னோக்கி, ஒரு நிமிடம் நாம் அஜாக்கிரதையாய் இருந்ததால் எத்தனை பேருக்கு வேலை பளு. அஜாக்கிரதையாய் இருந்தவர் மேல் வெளிப் படுத்த முடியாத கோபம் வரத் தான் செய்கிறது.

    ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!