Bio Data !!

19 September, 2010

நான் ரசித்த புத்தகச் சுரங்கம்!!

வாங்க மக்காஸ்,
ஆவலுடன் காத்திருந்த, புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள் பற்றிய விமர்சனம்.

எஸ். ராமகிருஷ்ணனின் "வாசக பர்வம்" 
உயிர்மை பதிப்பகத்தின் வெளியீடு.
விலை ரூ.110/-
முதல் பதிப்பு : டிசெம்பர் 2009

"வெள்ளிவீதியாரின் சங்கக் கவிதைகளை வாசித்து விட்டு மதுரையின் வீதிகளில் எந்த இடத்தில் அவள் இருந்தாள் என்று இரவெல்லாம் அவள் பெயர் சொல்லி அழைத்தபடி அலைந்திருக்கிறேன்" என்ற அவரின் முன்னுரையில் உள்ள வரிகளே உள்ளே இருக்கும் செய்திக்கு கட்டியம் கூறும் முன்னுரை. "ஏ வாசகா! உனக்குத்தான் எத்தனை எழுத்தாளர்கள் " என்ற நகுலனின் வரியை குறிப்பிட்டு "புத்தகங்கள் வாசிப்பதை விட உயர்ந்த சந்தோஷம் வேறு எதுவும் இல்லை என்று நம்புபவன் நான் " என்கிறார். நானும் தான்.
ஆம், வைக்கம் பஷீர், சுஜாதா, பிரபஞ்சன், வண்ண தாசன், நிலவன், கவிஞர் மீரா, ஜெயகாந்தன் போல பதினெட்டு எழுத்தாளர்களுடன் அவருக்கு உள்ள உறவைப் பற்றிய விளக்கங்கள் அழகு தமிழில். கல்லூரி நாட்கள் தொட்டே அறிமுகம் ஆன எழுத்தாளர்களைத் தேடி அவர்கள் இல்லம் சென்றிருக்கிறார். அவர்களைப் பார்த்த பரவசத்தில் பேச்சு வராமல் தவித்து இருக்கிறார். சினிமா நாயகன் , நாயகிகளைப் பார்த்து பரவசம் அடையும் நம் மக்களுக்கு மத்தியில் இப்படி ஒரு மனிதர். 

 பேராசிரியர் " எது உங்களை எழுத வைத்தது " என்று கேட்டதும் பஷீர் சற்றும் யோசிக்காமல் "பசி" என்றார். முகத்தில் அறைந்த இந்த பதிலை விட்டு நான் வெளியே வர சில நொடிகள் பிடித்தது. 

 பிரபஞ்சனைப் பற்றிக் குறிப்பிடும் இடத்தில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவிற்கு சென்ற இடத்தில் பேசும் போது தனக்கு அந்த புத்தகம் பிடிக்கவில்லை என்றும் பிடிக்காததற்க்கான காரணத்தையும் கூறி அபத்தம் நிறைந்த அர்த்தமற்ற இந்த புத்தகத்தை பாராட்டி பலர் பேசும் போது தன்னால் தொடர்ந்து இருக்க முடியாது என்று கூறி வெளியேறியதாகவும், சபை அதிர்ந்து போனதையும் குறிப்பிட்டு இருக்கிறார்.

பதிவுலகின் all time favourite வண்ணதாசன் பற்றியும் எழுதி இருக்கிறார். "யானைகள் உரத்த குரலிட்டு தன் இருப்பைக் காட்டிக் கொள்வதில்லை இயல்பிலேயே அது யாவரையும் கவர்ந்து விடுகிறது. வண்ணதாசனின் உறவும் படைப்பிலக்கியமும் அத்தகையதே. " என்கிறார்.

அடுத்து அருந்ததி ராயின் "தோழர்களுடன் ஒரு பயணம்" தமிழில் அ. முத்துகிருஷ்ணன் .
பயணி பதிப்பகத்தின் வெளியீடு. 
விலை ரூ.60/-
முதல் பதிப்பு : 2010
"பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை அதிகப்படியான ஊழல் மதிப்பு என்பது சில நூறு கோடிகளை தாண்டாது. ஆனால் இன்று மிகச் சிறிய பின் தங்கிய மாநிலங்களில் கூட ஆயிரம் கோடி ஊழல்கள் எல்லாம் சர்வ சாதாரணம். "  ௦
இந்த வரிகளை பதிப்பகத்தின் முன்னுரையில் படித்தது தான் எனக்கு இந்த புத்தகத்தை வாங்கத் தூண்டியது. வேகமாகக் கடக்க முடியாத வார்த்தைகள். அதனால் பயணிப்பு மெதுவாகத் தான். 
"பேய்கள் சிலருக்கு மேலே வட்டமிடும் ஆவியாகவும் சிலருக்கு இல்லாத ஒன்றாகவும் இருக்கலாம். அப்படியாயின் அந்த பேய்க்கு நேர் எதிரானது தான் இன்று வனங்களைக்  கிழித்து செல்லும் நால் வழிச் சாலைகள்.  அது நமக்கு வரப் போவதை முன் அறிவிக்கும் கட்டியக் காரனே.  " மலை வாழ் பழங்குடியினருக்கு ஆதரவான புத்தகம். 

"நான் திரும்பிப் பார்த்த போது அவர்கள் கை அசைத்து நின்றார்கள். இவர்கள் கனவுகளுடன் வாழ்பவர்கள். ஆனால் உலகில் மற்றவர்கள் எல்லாம் கொடுங்கனவுகளுடன் தான் இருக்கிறார்கள். ஒவ்வொரு இரவும் இந்த பயணத்தைப் 
பற்றியே நினைக்கிறேன்." என்கிறார்.

கொஞ்ச நாள்  முன்னால ஓவியர் புகழேந்தியின் ஓவியங்களைப் பற்றி எழுதி இருந்தேன் அவர் எழுதியதாலேயே இந்தப் புத்தகம் என்னைக் கவர்ந்தது. 
ஓவியர் புகழேந்தியின் "ஈழ மண்ணின் ஈரச் சுவடுகள் "
தோழமை  வெளியீடு. 
விலை ரூ.175/-
முதல் பதிப்பு : ஏப்ரல் 2006
இன்னும் வாசிக்கத் தொடங்கவில்லை. 

இன்னும் 'நர்சிம்'மின் " அய்யனார் கம்மா
அகநாழிகை வெளியீடு.
விலை ரூ.40
முதல் பதிப்பு : ஜனவரி 2010
ஆசிரியர் அனுப்பி வைக்கிறேன் என்று சொல்லி சொல்லியே ஏமாற்றி விட்டதால் அங்கே பார்த்த உடன் பற்றிக் கொண்டேன். "தந்தையானவன்" எத்தனை முறை வாசித்து இருந்தாலும் முதல் முறை படித்த போது இருந்த பாதிப்பை அப்படியே கொண்டு வந்தது. அது எழுத்தாளரின் வெற்றி. கிராமிய மணம் கொண்டு வருவதற்காகவே சில கதைகளில் அதிகப் படியான *** வார்த்தைகள். ஒரு இருபது ஆண்டுகளுக்கு முன் கிராமங்கள் அப்படி இருந்தன. இப்பொழுது மாறி இருக்கும் என்று நான் கருதுகிறேன். உண்மை என்ன தெரியவில்லை. இறுதிக் கதை முதன் முதலில் எழுதியது என்று நினைக்கிறேன்.பால் மணம் மாறா அறிமுக எழுத்தாளரின் வாசம் தெரிகிறது. பதிவுலக நண்பரின் புத்தகம் என்பதால் கூடுதல் ஒட்டுதலோடு படித்தேன். அதனால் குறைகள் அதிகம் தெரியவில்லை.   

இன்னும் இரண்டு புத்தகங்கள் 
ஜெயமோகனின் "அனல் காற்று
தமிழினி வெளியீடு.
விலை ரூ. 90௦
முதல் பதிப்பு : டிசெம்பர்  2009

மற்றொன்று கோபிநாத்தின் "ப்ளீஸ் ! இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க!" 
சிக்ஸ்த்  சென்ஸ் வெளியீடு .
விலை ரூ. 60
முதல் பதிப்பு : டிசெம்பர் 2008

இந்த ரெண்டு புத்தகங்களும் இன்னும் வாசிக்கவில்லை என்று தான் எழுதி முடிக்க நினைத்திருந்தேன். இரவு படுக்கையில் ஜெயமோகனின் குறு நாவலை லேசாக புரட்டிப் பார்க்கலாம் என்று தான் எடுத்தேன். உணர்வுகளின் அனல் காற்று. இரவு பனிரெண்டு மணி வரை படித்தேன். கீழே வைக்க முடியவில்லை. மறு நாள் அலுவலகப் பணியை எண்ணி மூடினேன். இன்று முடித்து விடுவேன். அதைப் பற்றி ஒன்றும் எழுதலைன்னு    பார்க்கிறீங்களா? எழுதறதா இல்லை. ஏன்னா இது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக உணர வைக்கும் நாவல் அவரவர் அனுபவங்களைப் பொறுத்து. அதனால் விமர்சனம் உங்கள் கைகளிலேயே விட்டு விடுகிறேன். 

வர்ரட்டா !!

12 comments:

  1. எஸ்.ராவின் கட்டுரைகளை படித்திருக்கிறேன் கொஞ்சம்..... மற்ற சம கால தமிழ் எழுத்தாளர்களை அதிகம் படித்ததில்லை! கண்டிப்பா படிக்க முயற்சி செய்கிறேன்! பதிவுக்கு நன்றி!

    ReplyDelete
  2. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  3. படிக்கும் ஆவலை தூண்டியுள்ளது விமர்சனம்.

    ReplyDelete
  4. நான் மிகவும் எதிர்பார்த்த பதிவு இது... அதிகம் காக்க வைத்து விட்டீர்கள்..

    பரவலான உங்கள் வாசிப்பு வியக்க வைத்தது,,,,
    எழுத்தில் , படிப்பில் உங்களுக்கு இருக்கும் ஆர்வம் தெரிந்த ஒன்றுதான்.. ஆனால் எப்படிப்பட்ட புத்தகங்கள் படிக்கிறீர்கள் என தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்த்தது..

    பலதரப்பட்ட புத்தகங்களையும படிக்கிறீர்கள்... மிகவும் சந்தோஷமாக இருந்த்தது..

    ஆனாலும் இந்த பதிவில் , எனக்கு பிடிக்காத ஒன்றும் இருக்கிறது..
    என்ன ?

    " அதைப் பற்றி ஒன்றும் எழுதலைன்னு பார்க்கிறீங்களா? எழுதறதா இல்லை. "

    இதுதான் பிடிக்கவில்லை.. ஒரு சினிமாவையோ, புத்தகத்தையோ நாம் ரசித்தால், நம் நண்பர் அதை எப்படி ரசிக்கிறார்.. அவருக்கு பிடித்ததா , இல்லையா...

    நாம் ரசித்த அம்ச்களைஅம்சங்களை அவர் ரசித்தாரா, அவர் ரசித்த அம்சங்களை நாம் மிஸ் செய்து விட்டோமா என்றெல்ல்லாம் தெரிந்து கொள்ள விரும்புவோம்.
    எனவே விரிவான விமர்சனம் எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன்

    ReplyDelete
  5. சிவராம் குமார் கண்டிப்பா மற்ற புத்தகங்களையும் படியுங்க , முக்கியமா "அனல் காற்று" நிஜம் முகத்தில் அறையும் கதை.

    ReplyDelete
  6. அது என் விமர்சனத்துக்கு கிடைத்த வெற்றி தமிழ்

    ReplyDelete
  7. ஒவ்வொரு பதிவு போடும் போதும் பார்வையாளன் என்ற ஆசிரியர் வைக்கும் தேர்வில் தேறுவோமா ஊத்திக்குமா என்ற பயத்தில் தான் எழுதுகிறேன். உண்மை பார்வையாளன்.

    ReplyDelete
  8. இவ்வளவு நல்ல புத்தகங்களுக்கு நடுவில் என் புத்தகத்தையும் சேர்த்தது தவறு என்றே படுகிறது. இதைப் பார்க்கும் பார்வையாளர்கள் மன்னிக்கட்டும் உங்களை.

    நன்றி

    ReplyDelete
  9. u take my words narsim, it is not too far for u to come in that region. thank u for ur comments

    ReplyDelete
  10. அருமையான அறிமுகமும் நலனாய்தலும்

    ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!