Bio Data !!

12 September, 2010

பாஸ் (எ) பாஸ்கரன்


                                                                                            
"ஹல்லோ!! என்ன பாஸ்!!"
"**********"
"படித்த புத்தகம் பற்றிய பதிவா?"
"**********"
"அடுத்த போஸ்ட் அது தான் பாஸ், கொஞ்சம் பிஸி "
"********"
"என்ன பிஸியா ?ஹி!! ஹி!!பாஸ் (எ) பாஸ்கரன் பார்க்க போயிட்டேன்  பாஸ்" 
ஆமாங்க !!உலக வரலாற்றில் முதல் முறையாக  பாஸ் (எ) பாஸ்கரன் படம் வந்த ரெண்டாம் நாளே பார்த்து விட்டேன். 
படம் சூப்பருங்க. !!!
கடிகார முள் சுற்ற சுற்ற, படத்தில் உள்ளவங்க பெயர் வரும் போதே படம் வித்தியாசமா இருக்கப் போகுதுன்னு பட்சி சொல்லிருச்சு. 
அட ! ஆர்யா என்ட்ரி சீனுக்கு விசில் தூள் பறந்தது. அதுவும் ,
"பாசு, பாசு, பாசு 
என் பேரக் கேளு பாசு" பாட்டில யுவன் இசையும், முத்துக் குமாரின் பாடல் வரிகளும், ஆர்யாவின் நடனமும் ரசிகர்களின் விசிலும் சேர்ந்து பட்டையைக் கிளப்புச்சு போங்க. 
என் உடன் வந்த எங்க அம்மா படம் பார்க்க விட மாட்டாங்க போலிருக்கே ன்னாங்க.ஆனா கொஞ்ச நேரத்தில அரங்கம் அமைதி ஆகி விட்டது. 

ஆர்யாவுக்கு மதராசப் பட்டணத்துக்கு அப்பறம் மௌசு கூடிட்டுதுன்னு நினைக்கிறேன். பட்சி இன்னும் ஒண்ணும் சொல்லுச்சு. ஆர்யா டாப் லிஸ்ட்ல வர்ற நாள் இன்னும் அதிக தூரத்தில் இல்லை. வரிசையா மூணு படம் சூப்பர் டூப்பர் ஹிட்.(மூணாவது எந்த படமா? இது தாங்க அது)

நயன்தாரா ! ரஜினி கூடவும் சரத் கூடவும் நடித்த பப்ளிமாஸ் நயன் தானா இது? ஒரு சுத்து மெலியும் போது சின்ன புள்ளைங்களுக்கு ஜோடியா நல்லா இருந்தது.ஆனா இப்போ ? ஆனாலும் அந்தச் சிரிப்பு மட்டும் அழகு குறையாமல். ரொம்ப மெலிந்ததால் இயக்குனருக்கு அமலா நினைவுக்கு வந்து விட்டார் போல, அதனால் சத்யாவின் "வளை ஓசை" பாடல் ஒரு 'இடை' செருகல். 

படத்துக்கு வருவோம். வேலை வெட்டி இல்லாத வெட்டிப் பய ரோல நன்கு உணர்ந்து நடிச்சிருக்கார்  ஆர்யா. நயனைக் கை பிடிக்க அண்ணி போடும் கண்டிஷனுக்காக வீட்டை விட்டு வெளியேறி கஷ்டப்பட்டாலும் "சினிமாக் கதாநாயகன் எப்படியும் ஆறே மாதத்தில் அம்பானி ஆகி விடுவான் " ஆதலால் ஆர்யாவின் மேல் இரக்கம் வரவே இல்லை.

ஆர்யாவின் அண்ணா,  தொலைகாட்சி தொடர்களில்  வில்லனாக வந்தவர், அண்ணியும் அப்படித்தான். அழகும் இயல்பான நடிப்புமாக அசத்துகிறார்கள். இவர்களை பெரிய திரையில் முன்னமேயே எதிர்பார்த்தேன். கொஞ்சம் லேட் ஆக வந்தாலும் கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.       

அடுத்து சந்தானம், படம் முழுவதும் பக்க பலமாக வருகிறார். ஜென்ட்ஸ் பார்லர் வைத்திருப்பதால் கொஞ்சம் ஸ்டைலாகவே இருக்கிறார். இவரும் ஆர்யாவும் சேர்ந்து படம் முழுவதும் சிரிக்க வைத்திருக்கிறார்கள். எனக்கு இன்டேர்மிஷன் வந்ததும் ஒரு சந்தேகம் அடுத்த பாதி எப்படி இருக்குமோனு. ஒரு நண்பனுக்கு எஸ் எம் எஸ் தட்டினேன். " இது வரை நல்லாத்தான் போயிட்டிருக்கு. இனிமே எப்படி" 
பதில் வந்தது "டோன்ட் வொரி . நல்லாவே போகும்" 
சொன்னது போலவே படம் முடியும் கடைசித் துளி வரை சிரிப்புக்கு பஞ்சமில்லை. 

அது என்னங்க,  பாட்டு சீன் வந்ததும் வெளி நாடு போயிடறாங்க. எந்த நாடு போனாலும் நம்ம நாட்டு ஆண் மக்கள் இருக்கையில் இருந்து  புறப்பட்டுறாங்க. இந்த முறை சில பெண் மக்களும். வேறு சிலர் செல்லில் கேம் விளையாடப் போறதா சொல்றாங்க. லவ்ஸ் வந்ததும் வெளி நாட்ல போய் டான்ஸ் ஆடுறதும், கூடவே சில வெளி நாட்டினர் நம்ம இளைய தளபதி டான்ஸ் ஆடுறதும் படா தமாசா கீதுங்க. 

பலரால் முடியாத ஒரு காரியத்தை ஒரு மாற்றுத் திறனாளி செய்து முடிப்பதாகக் காட்டியதற்கு இயக்குனர் ராஜேஷுக்கு ஒரு பாராட்டு. ஆனால் மலையாளப் பட பிட்  நாயகியை படத்தில் திணித்து மாணவர்களை ஜொள்  விட வைத்ததற்கு ஒரு குட்டு.  

படத்தின் இறுதியில் நட்புக்காக  ஜீவா . அசத்திட்டீங்க  ஜீவா! கட்சி பத்து நிமிடங்களை கல கலப்பாகவே கொண்டு செல்கிறார்.  மொத்தத்தில் நீங்கள் தான் 'நண்பேன்டா'
சித்ரா லக்ஷ்மணன், நாடோடிகளில் சசிகுமாரின் அம்மாவாக வந்தவர், படத்தில் ஆர்யாவின் தங்கையாக வந்தவர் இன்னும் பலரும் தங்கள் பகுதிகளை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

நான் ரசித்த காட்சி. ரயில் நிலையத்தில் நயன்தாரா வருத்தத்தில் தனிமையில் இருக்க, ஒரு மன நிலை பிறழ்ந்தவர் தொல்லை கொடுக்க, வருண பகவான் போல எதிர்பாராத நேரத்தில் அங்கே வந்த கதாநாயகன் " எங்கேயாவது லவ் தோற்றுப் போய் பொம்பளப் பிள்ளைங்க நே நே நே  னு தலையைப் பிராண்டிக் கிட்டு சுத்தறதைப் பார்த்திருக்கோமா? நீங்க மட்டும் ஏன்டா இப்படி" என்கிறார். அட! ஆமாமில்லை.  

யுவன் சொல்லவே வேண்டாம். 
முத்துகுமார் சொல்லவே வேண்டாம், 
இன்னும் பல விஷயங்கள் சொல்லவே வேண்டாம், என்னங்க இன்னும் கிளம்பாமவா இருக்கீங்க படம் பார்க்க. 

20 comments:

  1. நான் ரசித்த காட்சி. ரயில் நிலையத்தில் நயன்தாரா வருத்தத்தில் தனிமையில் இருக்க, ஒரு மன நிலை பிறழ்ந்தவர் தொல்லை கொடுக்க, வருண பகவான் போல எதிர்பாராத நேரத்தில் அங்கே வந்த கதாநாயகன் " எங்கேயாவது லவ் தோற்றுப் போய் பொம்பளப் பிள்ளைங்க நே நே நே னு தலையைப் பிராண்டிக் கிட்டு சுத்தறதைப் பார்த்திருக்கோமா? நீங்க மட்டும் ஏன்டா இப்படி" என்கிறார். அட! ஆமாமில்லை.


    .... Good review. :-)

    ReplyDelete
  2. ரைட்டு.......... கிளம்பிடோம்ல ;)

    ReplyDelete
  3. என்னங்க.. திங்கட்கிழமை ஆபீஸ் போகலாம்னா படத்துக்குப் போங்கன்னு சொல்றீங்க :)

    ReplyDelete
  4. :)). இந்த விமரிசனம் நல்லாருக்கு

    ReplyDelete
  5. "ஹல்லோ!! என்ன பாஸ்!!"
    "**********"
    "படித்த புத்தகம் பற்றிய பதிவா?"
    "**********"
    "அடுத்த போஸ்ட் அது தான் பாஸ், கொஞ்சம் பிஸி "
    *************************************
    நான் பேச நினைத்ததை நீங்களே பேசிட்டீங்க...
    அடுத்த பதிவுக்காக காத்து இருக்கிறேன் .. என்ன புக் வாங்குனீங்க , என்ன படிக்றீங்க, எப்படி இருந்தது... என் அதை வாங்குனீங்க.. எதிர்பார்ப்பு ஏற்றவாறு புக் இருந்துச்சா ? எல்லாம் விரிவா எழுதுங்க ..

    ReplyDelete
  6. ரெம்ப‌ ர‌சிச்சி பார்த்திருக்கீங்க‌ என்று நினைக்கிறேன்.. உங்க‌ள் விம‌ர்ச‌ன‌மும் அப்ப‌டிதான் இருக்கிற‌து.. :)

    ReplyDelete
  7. ஆனாலும் அந்தச் சிரிப்பு மட்டும் அழகு குறையாமல். ரொம்ப மெலிந்ததால் இயக்குனருக்கு அமலா நினைவுக்கு வந்து விட்டார் போல, அதனால் சத்யாவின் "வளை ஓசை" பாடல் ஒரு 'இடை' செருகல்.

    //

    Ha ha ha. Cr8

    ReplyDelete
  8. என்னது புறப்பட்டோம்ல வா அப்போ
    ஆபீஸ் ??

    ReplyDelete
  9. இது ஆபீஸ் முடிஞ்சு வீட்டுக்கு வந்த பிறகு பின்னோக்கி

    ReplyDelete
  10. அண்ணியா வந்தவுக 'பிரண்ட்ஸ்" படத்துலே சூரியா ஜோடியா வந்தவுக! நல்ல உத்து பாருங்க... கொஞ்சம் அதிகமாவே சதை போட்டுடாக

    ReplyDelete
  11. வானம்பாடிகள் சார், மிக்க நன்றி. வீட்ல தங்கமணியை கேட்டதா சொல்லுங்க

    ReplyDelete
  12. நன்றி பார்வையாளன், கண்டிப்பா எழுதறேன். உங்க கடையில கொஞ்ச நாளா அசைவ வாடை அதிகமா இருக்கே?

    ReplyDelete
  13. நிச்சயமா நாடோடி. ஏற்கனவே ஆர்யா வெள்ளந்தியா பேசுறது பிடிக்குமா, இந்த மதராசபட்டணம் பார்த்த பிறகு அந்த பய புள்ளைய ரொம்ப பிடிச்சு போச்சு.

    ReplyDelete
  14. thanks சேது. அது என்ன அரிசி பேரு மாதிரி cr 8 . புரியுது, புரியுது

    ReplyDelete
  15. வாங்க சிவகுமார், தங்கள் முதல் வரவு நல்வரவு ஆகுக.
    நம்மூர் தான் போல. அது எழுதும் போது ஞாயபகம் வந்தது. ஒரு flow வுக்கு நல்லா இருக்குதேன்னு அப்படியே விட்டுட்டேன். இதுக்கு இன்னொரு பேர் உண்டு சமாளிபிகேஷன்

    ReplyDelete
  16. அட.... பட ரிவ்யூவா ....கலக்கல் மச்சி..:))

    பார்க்கணும்னுதான் இருக்கேன்..:))

    ReplyDelete
  17. வாங்க தேனம்மை, படம் கண்டிப்பா பாருங்க. நல்ல டென்ஷன் ரிலீவர்

    ReplyDelete
  18. hat-trick hit ah??? madrasapattinam, boss , apram enna padam ???

    gud review!!!!

    ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!