Bio Data !!

10 January, 2011

எண்ணச் சிதறல்கள் !

என்ன புது வருஷம் ஜம்முனு போகுதா?

இந்த தடவை புது வருஷம் சனிக்கிழமை தொடங்கி இருப்பதால் விபத்துக்கள் அதிகம் நடக்க வாய்ப்புண்டுனு சொல்லறாங்க. எல்லோரும் கவனமா வண்டி ஓட்டுங்க. 
புத்தக கண்காட்சியை பற்றி பார்த்ததுமே ஒரு குடும்ப விழாவை பார்த்தது போல் மனதில் சந்தோஷம் பூக்கிறது. சென்னைவாசிகள் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்கள் தான்.

2G பிரச்னை "எங்கே செல்லும் இந்த பாதை யாரோ யாரோ அறிவாரோ ?" னு பாட வைக்குது. முடிவு தெரிந்தாலும் எந்த அதிர்ச்சியும் அடையும் நிலையில் மக்கள் இல்லை ஏன்னா வெங்காய விலையும் காய்கறி விலையும் "அட போங்கப்பா ! நீங்களும் உங்க 2G உம்"னு முணங்க வைக்குது.

நான் சமீபத்தில் படித்து முடித்த ஒரு புத்தகம். திருமதி சுமதி எழுதிய "கல் மண்டபம்" வாழத் துடிக்கும் ஒரு இளைஞன் ஒவ்வொரு அடி முன்னேறினால் பத்தடி பின் கீழே சறுக்குவதை பற்றிய கதை. அவனுக்கு வாழ்க்கை என்பது இது தான் என்பதை புரிய வைக்கும் ஒரு நண்பன். அவன் படிக்கும் காலத்தில் ஹாக்கி விளையாடுவதில் சிறந்து விளங்கியவன். ஒரு விபத்தில் பெற்றோர் இருவரும் இறந்து விட தனியனாகி இறந்த சடலங்களை எரிக்கும் இடத்தில் பணிக்கு சேர்கிறான். தனது விளையாட்டுத் திறமையை எரிந்த சடலங்கள் எலும்பை நொறுக்க பயன்படுத்துவதை பூடகமாக சொல்லும் இடம் நமக்கே அதிர்வை தருகிறது. 

தற்போது படித்துக் கொண்டு இருப்பது, தமிழ் செல்வியின் "கற்றாழை" அவர்களின் "அளம்" மிகுந்த பாதிப்பை ஏற்டுத்த இதை வாசிக்க தொடங்கினேன். ஆனால் நண்பர் ஒருவர் சொல்வது சரிதான் எனத் தோன்றுகிறது. எந்த எழுத்தாளரும் பிடிக்கிறது என்று தொடர்ந்து அதே எழுத்தாளருடையதை படிக்க கூடாது என்பார். ஒரு விதமான similarity  தெரிவதால் முழுவதுமாக ரசிக்க முடிவதில்லை. இருந்தாலும் ஏழ்மையும் அதன் விவரிப்புகளும் தமிழ் செல்விக்கு  மிக இயல்பாக  வருகிறது. சாண வேலையில் இரு கைகளும் திளைக்கும் நேரத்தில் தான் தலையில் அரிப்பு ஏற்படுவதை அவர் விவரிக்கும் போது இரு கைகளிலும் மருதாணி பூசி "அம்மா இங்கே சொறிந்து விடுங்க"னு தலையை அங்கும் இங்கும் காட்டி, அப்படியும் போதாமல் முழங்கையால் தலையத் தேய்த்துக் கொள்ளும் சிறு வயது நினைவு வந்தது.
  
இப்போதைக்கு இது போதும்னு நினைக்கிறேன். 
எல்லோரும் வளமோடு வாழுங்கள்!! நலமோடு வாழுங்கள்!!
திரை அரங்கம் சென்று திரைப்படம் காணுங்கள்!!!
விலை கொடுத்து வாங்கி புத்தகம் படியுங்கள்!!!
மீண்டும் சந்திப்போம்.

9 comments:

  1. ரொம்ப பிசியா ?

    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அருமையான பகிர்வு....
    HAPPY NEW YEAR!!! HAPPY PONGAL!!!

    ReplyDelete
  3. உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  4. புத்தாண்டு வாழ்த்துக்கள் பார்வையாளன், பிஸியா இருக்கிறேன்னு சொல்லி சொல்லி எனக்கே போர் அடித்து விட்டது. இன்னும் ஒரு மாதம் தான் அதன் பின் பாருங்க புலியின் பாய்ச்சலை . (ஆமா இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல னு அங்கே முணுமுணுக்கிறது யாரு ?)

    ReplyDelete
  5. வினோ உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள், பொங்கல் பொங்குவது போல் உங்கள் வாழ்வில் வளமும் பெருகட்டும்

    ReplyDelete
  6. புத்தாண்டு வாழ்த்துக்கள்.என் ப்ளாக்கை முதலில் பார்வையிட்டவர் நீங்கள்தான்,தற்போது http://www .aatchi.blogspot.com துவங்கியிருப்பதை தெரிவித்துக் கொள்கிறேன்

    ReplyDelete
  7. புத்தாண்டு வாழ்த்துக்களும் பொங்கல் வாழ்த்துக்களும் திருமதி ஸ்ரீதர்
    ஒரு வலைப்பூ சமாளிக்கிறதே பெரும் கஷ்டமா இருக்கும் போது இவ்வளவு விரைவில் மற்றும் ஒரு வலைப்பூ
    சபாஷ் !!
    வாழ்க ! வளர்க

    ReplyDelete
  8. நன்றிங்க.ஒன்று அம்மாவின் நினைவிற்காக .ஒன்று எனக்காக.எல்லாம் உங்களை போன்ற பதிவாளர்களின் பதிவுகளால் ஏற்பட்ட ஆர்வக் கோளாறுதான்.

    ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!