Bio Data !!

27 January, 2011

சிகரம் சமைத்திட வா ! சாதனைப் பெண்ணே !!

குருவியின் கொறித்தலும்,
கோழியின் தூக்கமும்,
எருமையின் சுரணையும்,
குதிரையின் பாய்ச்சலும்  கொண்டு
 சிகரங்கள் சமைக்கும் 
சாதனைப்  பெண்ணே !

                                               இரைப்பைக்குள்
                                               அருவமாய் சுருண்டு கிடக்கும்
                                                பொறாமை நாகம்
                                                 சீறிப் படமெடுத்து தன்
                                                  விஷப் பற்களால்                         
                                                  உன்னைக் கொத்தக் கூடும்.
                                                  உன் சாதனை பார்த்த நொடி. 

கலங்கி விடாதே,
சிதறி விடாதே,
படமெடுத்தல்  தானே
நாகம் என்று விலகி விடு.
பறவைக்கு ஓர் குணம்
பாம்புக்கு மற்றொன்று.
இரண்டும் ஒன்றாய் இல்லை என்று 
ஏங்கி விடாதே. 

                                                     பாராட்டும் பழிச்சொல்லும்
                                                     ஒன்றெனவே கொண்டு
                                                     சிகரம் சமைத்திட வா !
                                                     சாதனைப் பெண்ணே !!






10 comments:

  1. சாதனைப் பெண்ணே.. மிக அருமைடா..:))

    ReplyDelete
  2. பறவைக்கு ஓர் குணம்
    பாம்புக்கு மற்றொன்று.
    இரண்டும் ஒன்றாய் இல்லை என்று
    ஏங்கி விடாதே.


    .....அருமையாக எழுதி இருக்கீங்க... பாராட்டுக்கள்!

    ReplyDelete
  3. அருமையான வரிகள் .நல்ல சிந்தனை .

    ReplyDelete
  4. நன்றி தேனம்மை, இன்ட்லி ல வோட் போடுற மாதிரி அரச தேர்ந்தெடுத்தால் எவ்வளவு நல்லா இருக்கும்.
    நமக்கே சொதப்பலா எழுதிட்டோமோ னு தோணினால் நாலே வோட் தான். நல்லா எழுதினா தாராளமா தந்திடுறாங்க

    ReplyDelete
  5. நன்றி சித்ரா. அது புரிந்தால் அநேகம் சிக்கல்கள் பிரிந்து விடும்

    ReplyDelete
  6. பார்வையாளன் , சரியில்லையே அக்கு வேறு ஆணி வேறா பிரிச்சு வருமே விமர்சனம் இப்போ ஒண்ணிரண்டு வார்த்தைகளில் தான் வருது

    ReplyDelete
  7. நல்லாயிருக்குங்க

    ReplyDelete
  8. நன்றி ரியாஸ், தங்கள் முதல் வரவு நல்வரவு ஆகுக !

    ReplyDelete
  9. பாராட்டும் பழிச்சொல்லும்
    ஒன்றெனவே கொண்டு
    சிகரம் சமைத்திட வா !
    சாதனைப் பெண்ணே !!

    நிறைய வரவேண்டும் இன்னமும் இது போல் நிறைய பேரும் சொல்ல வேண்டும் அது நிகழ

    மிக அருமை

    நன்றி
    ஜேகே

    ReplyDelete
  10. நன்றி ஜே கே !நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் கை கொடுத்து உயர்ந்தால் சிகரம் சமைத்தல் சுலபமாய்ப் போகும்

    ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!