Bio Data !!

14 January, 2011

வெள்ளித்திரையில் மட்டுமே வில்லேஜ் !!

முதலில் அனைவருக்கும்  புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!
வெள்ளித்திரையில் கிராமங்களை பற்றி எடுக்கும் எல்லா படங்களும் சூப்பர் ஹிட்.
அதனாலேயே ஹிட் கொடுப்பதற்காகவே வில்லேஜ் பற்றிய படங்கள். மொத்தத்தில் வியாபாரம் ஆக்கப்படும் கிராமங்கள். எனக்கு கற்பழிக்கப்பட்ட  பெண்களைத்தான் அவை  நினைவூட்டுகின்றன. 'தாசி திருந்தாமல் இருந்தால் தான் தனக்கு லாபம்' என நினைக்கும் ஆணின் மனது தான் தெரிகின்றது.

அது திரைப்படம் ஆனாலும் சரி, கதைகள் ஆனாலும் சரி, அதன் அடிப்படை நாதம் கிராமங்களாக இருந்தால் மிகுந்த உயிர்ப்போடு தான் இருக்கின்றன. ஆனால் கிராமங்கள் மட்டும் கிராமங்களாகவே, வறுமையிலேயே நின்று , வாசல் படலைப் பிடித்த படி நகரங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன.  கிராமங்களை தூக்கி நிறுத்த முயலும்  "கந்தசாமி"க்கள் தோல்வியில் துவண்டு சரிந்து கொக்கரித்துக் கிடக்கிறார்கள். 

இதெல்லாம் இப்படி இருக்க நான் இந்த பதிவு எழுத காரணம்.
கிராமத்தில் இருக்கும் இளம் பெண்கள் இந்த படங்களை பார்ப்பதன் மூலம் தன்னை திரைக்கதாநாயகிகளாக நினைத்துக் கொண்டு  தன் வாழ்வை பாழாக்கிக் கொள்வதை பார்ப்பதால் தான்.திரை அரங்குகள் ஆனாலும் சரி, ஊர் அடங்கி இருக்கும் மதிய மூன்று மணி வேளையானாலும் சரி அங்கங்கே ஜோடிப் புறாக்கள். அத்தனையும் கிராமப் புறாக்கள். பஸ் ஸ்டாண்டிலோ கண்களில் பயமும் பதற்றமும் படபடக்க, காதலனுக்காக காத்துக் கொண்டு மெல்ல நடை பயிலும் கிராமத்து மயில்கள். இளைஞன் இளம்பெண் இருவருமே அந்த நேர மகிழ்வைத் தவிர எதையும் நினைப்பதாய் இல்லை. தம் குடும்ப நிலை உயர்த்த, உழைக்க வேண்டும் உச்ச நிலை அடைய வேண்டும் என்ற எண்ணம் எல்லாம்  பின் தள்ளப்பட்டு வயிற்றுக்கும் தொண்டைக்கும் இடையே உருளும் உருண்டையில் மட்டுமே கவனம்.  

இவர்களின் உரையாடலைக் கவனித்தால் ஒரு விஷயம் நன்கு புரியும். அந்த இளைஞன், இளம் பெண்ணின் தோழியைப் பற்றி மிகவும் புகழ்வதும், புகழ்வதாலேயே ஒரு பொறாமை உணர்ச்சியை தூண்டி, எதையும் செய்ய சம்மதிக்கும் மன நிலையை பற்ற வைப்பதும், பரவலாக இருப்பது புரியும். "பாவம் பெண்ணே !! நீ பயணிக்க வேண்டிய பாதை இதுவல்ல என உனக்கு புரிய வைக்கப் போவது யார்?" 
மென்மையான ரசிப்பும் அழகும் இன்னம் மிச்சம் இருக்கும் கிராமங்களை விட்டு, நகரங்களின் மேல் நரக ஆசை கொண்டு உங்களை நீங்களே அழித்துக் கொள்ளாதீர்கள்.

இந்தப் பொங்கலுக்கு எனது சிறப்பு வாழ்த்துக்கள் கிராமத்துக் குயில்களுக்கு தான்.
நகரங்களில் இருந்து நல்லவை எடுத்து அல்லவை நீக்கும் அன்றில் போல் வாழ வாழ்த்துக்கள்!

6 comments:

  1. மிகவும் அக்கறையும் அன்பும் கொண்டு எழுதியிருக்கிறீர்கள் . சிறப்பான பதிவு

    ReplyDelete
  2. நன்றி பார்வையாளன்,
    பால் பொங்குச்சா? வயிறு வீங்கிச்சா?

    ReplyDelete
  3. நன்றி தமிழ் பையன், தங்கள் முதல் வரவு நல் வரவு ஆகுக.
    பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள் !!

    ReplyDelete
  4. உங்க பகிர்வு நல்லாயிருக்குங்க .....

    உங்களுக்கு என் பொங்கல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. என்ன திடீரென காணாமல் போய்விடுகின்றீர்கள்..... வேலை அதிகமோ......

    அவ்வபோது எழுதுங்க. நன்றி.

    ReplyDelete
  6. பொங்கல் நல் வாழ்த்துக்கள் கருணாகரசு!
    கொஞ்சம் வேலை பளு அதிகம் தான், உங்களைப் போன்ற வலைப்பதிவாளர்களின் வளர்ச்சி தான் விடாமல் எழுத தூண்டுகிறது. நன்றி

    ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!