Bio Data !!

01 October, 2012

புறப்படு பெண்ணே புவியசைக்க !!

புறப்படு  பெண்ணே புவியசைக்க
புரிந்தவன் கணவனானால்
காத்திரு கண்ணசைக்க.
இல்லையெனினும்  செயல்படு!
இன்னும் சிறிது காலமாகலாம்
புரிதல் தொடங்க.

"அனைவரின் " அங்கீகரிப்பும்
அன்பும் அரவணைப்பும்
எதிர் நோக்காதே !
சிறு எதிர்ப்பின்
எதிர்வினை கூட
உன்னை சுருங்கச் செய்யலாம் .

அளவிலா அன்பின்
அடிநாதம் ஆராயாதே!
எதிர்ப்பும் ஏன்  வந்ததென
ஏங்கிப் போகாதே .
இரண்டும் ஆகிப் போகும்
உன் குறை வளர்ச்சியின் காரணமாய் .

குருவியின் தலையோன்றே
குறிக்கோளாய்
உன் வலிமைகளனைத்தும்
குவிந்தால் தான்
பற்றியெரியும் தீக்காடாய்
பாலியல் துன்பம் பதற்பதறாய்.

புறப்படு பெண்ணே புவியசைக்க!
பிறப்பதல்ல பூப்பது தான்
உன் திறமை.
நிலம் கீறி வெளியேறி
நின்று நெடுக உயிர் தாங்கி
வெம்பி விடாமல் வந்தால் தான்
பூப்பூக்கும் உன் வலிமை
புவியசைக்கும் புறப்படு....
 

13 comments:

  1. //"அனைவரின் " அங்கீகரிப்பும்
    அன்பும் அரவணைப்பும்
    எதிர் நோக்காதே !
    சிறு எதிர்ப்பின்
    எதிர்வினை கூட
    உன்னை சுருங்கச் செய்யலாம் .
    //

    உண்மையான வரிகள் .. அனைவருக்கும் பொருந்தும் வரிகள்

    ReplyDelete
  2. தன்னம்பிக்கை தரும் நல்ல வரிகள்... வாழ்த்துக்கள்... நன்றி...

    மிகவும் பிடித்தவை : (முக்கியமானதும் கூட ---> எல்லோருக்கும்)

    /// அளவிலா அன்பின்
    அடிநாதம் ஆராயாதே!
    எதிர்ப்பும் ஏன் வந்ததென
    ஏங்கிப் போகாதே .
    இரண்டும் ஆகிப் போகும்
    உன் குறை வளர்ச்சியின் காரணமாய் . ///

    ReplyDelete


  3. வணக்கம்..... :)
    பெயர்சூட்டுவிழா முடித்து குழந்தையின் சிரிக்கும் புன்னகையை சேமித்து,
    கண்டங்கடந்து இளைத்துருகி இளைப்பாறி இயல்பற்றவைகளை இயல்பாக்கி
    கைநிறைய மிட்டாயோடு இல்லந்திரும்புவதாய் இருக்கிறது, மீள் திரும்புதல்.

    நிலமகழ்ந்து நீர் தேடுதலாய் அமைகிறது... ஒவ்வொரு கவிதையும் வாசிப்பும்.
    நீண்ட வாசிப்பின் அனுகூலம் வரிகளில் புலப்படுகிறது..

    "அனைவரின் " அன்பரையும் சேர்த்தே... :)

    கிளிக்காக - குருவியென்றே கருதுகிறேன்.. :..??

    பூப்பது தான்
    உன் பெருமை என்றிருந்திருக்கவேண்டும்.?

    அன்பும் நன்றியும்..!

    ReplyDelete
  4. நிலம் கீறி வெளியேறி
    நின்று நெடுக உயிர் தாங்கி
    வெம்பி விடாமல் வந்தால் தான்
    பூப்பூக்கும் உன் வலிமை
    புவியசைக்கும் புறப்படு.... //

    அசத்தலோ அசத்தல் வாழ்த்துகள்...!

    ReplyDelete
  5. தன்னம்பிக்கை தரும் நல்ல வரிகள்....பகிர்வுக்கு மிகவும் நன்றி....

    நன்றி,
    மலர்
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  6. நன்றி ராஜா சார், தலைப்பு பெண்களுக்கானதாய் இருந்தாலும் நான் பொதுவாக அனைவரையும் மனதில் வைத்து தான் கவிதையை எழுதினேன்.
    தங்கள் கருத்திற்கு நன்றி.

    ReplyDelete
  7. ஹாய் ! சிவா !! எவ்வளவு காலம் ஆச்சு . உன் எழுத்தைப் பார்த்து. ரொம்ப சந்தோஷமா இருக்குது . கருத்துக்கு நன்றி அதென்ன மைக் டெஸ்டிங் மாதிரி ஒரு "test " மெசேஜ்

    ReplyDelete
  8. நன்றி மனோ. நல்ல கவிதைக்கு இருக்கும் வரவேற்பு சந்தோஷம் தருகிறது

    ReplyDelete
  9. அருமையான கவிதை.
    வாழ்த்துகள்.

    ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!