Bio Data !!

14 November, 2012

உழைப்பின் சின்னம்

அன்றொரு நாள் , நான் சாலையில் கண்ட வயதானவர் தான் இந்த கவிதையின் கருவானவர். நல்லா வந்த மாதிரி இருக்குதேன்னு பத்த்ரிகைகளுக்கு அனுப்பினேன், மெயிலில் தான், ஹார்ட் காப்பி அனுப்புவதில் படு சோம்பேறியான நான் , ஆனால் வந்த பாடாய் இல்லை சரி இருக்கவே இருக்குது வலைப்பூன்னு நினைச்சு போட்டு விட்டேன் . நல்லா இருக்குதா சொல்லுங்க.
                                                                                .........
ஒடுங்கிய தேகம்,
இடுங்கிய கண்கள்,
ஒட்டிய கன்னம்,
கையில் குறுந்தடி,
அரையில் அழுக்கு வேஷ்டி,
கீழே
இரு சிறு துணிப் பொதி,
வயது எண்பதிருக்கலாம் ,
அதற்கு மேலேயும் இருக்கலாம்,

உள்ளிருந்து ஏனத்துடன்
வரும் பெண்ணை
பார்த்திருந்த கிழவரை
என் பரிதாபப் பார்வை
ஊடுருவ
சுற்றுமுற்றும்  பார்த்து
குரல் கொடுத்தார்,
"கோலப் பொடிய்ய்ய்ய்ய்ய்........"

உழைப்பின் சின்னமாய்
இருந்த அவரை
கூசிக் குறுகி பார்த்த நான்
மெல்லச் சொன்னேன் ,
"இங்கிருந்து மூணாவது ,
தெக்கப் பார்த்த வீடு,
வாங்க, வாங்கணும் "
உள்ளுக்குள் சொல்லக் கொண்டேன்
"நாளையிலிருந்து கோலம் போட
பழகணும்"

11 comments:

  1. மற்றவர்களுக்கும்
    பெற்ற குழந்தைகளுக்கும்
    பாரமில்லாமல் ( பாரமாக நினைக்கும் குழந்தைகளுக்கு)
    தமது வாழ் நிலைக்கு
    தாமே ஆதாரமாய்
    இருக்கும் முதியவர்கள்
    அனைவருக்கும்
    சிரம் தாழ்ந்த
    வணக்கங்கள்...

    ReplyDelete
  2. உழைப்பின் சின்னம் மிக அருமை.....பகிர்வுக்கு மிக்க நன்றி......

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  3. அருமை... உழைக்கும் தெய்வங்கள்...

    ReplyDelete
  4. 80 vayathu thaandiyum keerai virkum paatiyum, serupu thaikum thaathaavum enakku thantha paathipin pathivaai ülaipin sinnam.Nice
    ...Vanaja

    ReplyDelete
  5. thalladum vayathilum keerai virkum paatiyum, serupu thaikkum thaathaavum enaku thantha paathipin pathivaai ungal ulaipin sinnam. nice....vanaja

    ReplyDelete
  6. enbathu vayathilum uzhaipathu periyavarukku perumai
    aanal avar uzhathu than sappida vendum endra nilayil
    vaitha avar pillaigalukko sirumai allava
    ithai maatra naam enna seyya vendum thozhi

    ReplyDelete
  7. ஒரு வகையில் வயதானவர்கள் இயக்கத்தில் இருப்பது நல்லது தான். ஆனால் தள்ளாமையிலும் பிறரது உதாசீனத்தால் பணி புரிபவர்கள் தான் வேதனை தருத்கிரார்கள். நன்றி மகேந்திரன்

    ReplyDelete
  8. நன்றி திண்டுக்கல் தனபாலன்

    ReplyDelete
  9. நன்றி வனஜா. ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு அரசாங்கமே மூன்று வேலையும் உணவு தரும் திட்டம் ஏதாவது கொண்டு வந்தால் தேவலாம் இந்த இலவசங்களுக்கு பதிலாக

    ReplyDelete
  10. சரியாய் சொன்ன புஷ் மேலே நான் சொன்ன ஐடியா சரி தான பாரு ஓய்வு பெற்ற பிறகு வயதானவர்களின் பசியை போக்க ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணமுண்டு . இறைவன் அருள் பாலிக்கட்டும்

    ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!