Bio Data !!

25 November, 2012

"தே............வதை"



முதன் முறையாய்
தொண்டை நரம்புகள் புடைக்க
என்னைப் பார்த்து நீ
"தே .................!" என்று கத்திய போது
பதறிப் போனேன் .
நான் "தேவதை" என்று
நிரூபிக்கத் துடித்தேன்.

தவறி மலக் கிடங்கினுள்
முழுமையாய் விழுந்து
எழுந்ததைப் போல
குன்றிப்   போனேன்.

என்னைப் பெற்றவர்கள் வளர்ப்பின்
எச்சத்தின் மிச்சங்களால்
உறக்கத்தில் கூட
உதறி எழுந்தேன்.

காலச் சக்கரம்
சுழன்று ஓடியது.

இன்றும் கோபம் கொப்பளிக்க
குரல் தடிக்க அழைக்கிறாய்
"தே ....................!"
என்னைப் பெயர் சொல்லி
அழைத்தது போல்
இயல்பாய் திரும்புகிறேன்.

7 comments:

  1. நான் "தேவதை" என்று
    நிரூபிக்கத் துடித்தேன்.//

    தேவதைகள் என்றும் தேவதைகளாகவே இருக்கிறார்கள்...!

    ReplyDelete
  2. அழகு அழகு
    அழகிய சிந்தனை சகோதரி...

    நான் கொண்ட நிலையதை
    நிதர்சனம் மாற்றிடுமோ
    நானாக நானில்லை
    நின்றநிலை ஏகிடுமோ ....

    காலச்சூழலில் அடித்துக்கொண்டு
    செல்லப்படும் சிறு துரும்புகளாம்
    நம்மில் தான் எத்தனை எத்தனை
    வாழ்வியல் போராட்டங்கள்...

    அதில் ஒரு சாராரை எடுத்து
    அற்புதமாக புனையப்பட்ட கவிதை...

    ReplyDelete
  3. நன்றி மனோ சில தேவதைகள் பிறரோடு நடத்தும் போராட்டத்தோடு தனக்குள்ளே நடத்தும் போராட்டமும் சேர்ந்து கொள்கிறது

    ReplyDelete
  4. நன்றி தனபாலன். உங்கள் ஆசி துன்பப் படும் அத்தனை பெண்களையும் சென்று சேரட்டும்

    ReplyDelete
  5. நன்றி மகேந்திரன் உங்களுக்கும் கவிதையில் ஈடுபாடு இருப்பது தெரிந்தது. எழுதியதும் அது என்னை சார்ந்த கவிதை என்று யோசிக்காமல் துன்புறும் ஒரு பெண்ணைச் சார்ந்த கவிதை என்ற புரிதலுக்கு நன்றி.

    ReplyDelete
  6. இந்த நிலை மாறும்.

    ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!