இப்படிப்பட்டவர்களும் இருப்பதால் தான் இன்னும் இயங்கிக் கொண்டிருக்கிறது உலகம்.
Avesh Vhichker . இவர் 25 வயது IT professional. அவர் ஒரு நாள் மாலை ஆறு மணிக்கு ஜிம்மிலிருந்து திரும்பும் போது தன் அபார்ட்மென்ட்டின் தூண்களில் லேசான விரிசல் தெரிகிறது. உறுத்துகிறது. அது ஒரு ஐந்து மாடிக் கட்டடம். ஆனால் சீரியஸா நினைக்காம வீட்டுக்கு போயிட்டார்.
அவர் அமர்ந்து டீ சாப்பிட்டுக் கொண்டிருந்த இடத்துக்கு பக்கத்தில் பிரிட்ஜ் இருந்திருக்கிறது. திடீரென்று அந்த பிரிட்ஜில் சின்ன அசைவு தெரிந்திருக்கிறது. அம்மாவிடம் ஏதும் வித்தியாசம் தெரிந்ததா எனக் கேட்டிருக்கிறார். அவர்கள் உணரவில்லை.
ஆனால் இவருக்கு தான் மாலையில் பார்த்த தூணின் விரிசல் ஞாபகம் வந்ததும் ஏதோ விபரீதம் நடக்க போகிறது என உணர்ந்து அவசரமாய் வீட்டிலுள்ளவர்களை அழைத்துக் கொண்டு வெளியேறி இருக்கிறார். இறங்கும் போது ஒவ்வொரு வீடாக தட்டி விஷயம் சொல்லி அனைவரையும் வெளியே வரச் சொல்லி 20பேருக்கு மேலாக காப்பாற்றி இருக்கிறார்.
அவர் பயந்தது போலவே கொஞ்ச நேரத்தில் மொத்த கட்டடமும் மண்ணோடு மண்ணாய். சுமார் 16 பேர் இறந்து போனார்கள். அந்த வீடுகளின் மொத்த எதிர்காலமும் மண்ணுக்குள் புதைந்தது.
ஒரு எலக்ட்ரீஷியன் Naveed Duste அந்த கட்டடத்துக்கு வேலை செய்ய வந்தவர் தனக்குத் தெரிந்த குடும்பம் அங்கே இருப்பது ஞாபகம் வர போய் காப்பாற்றி இருக்கிறார். திரும்பி வரும் போது அவர் இரு கால்களிலும் அடிபட்டு மருத்துவமனையில் கவலைக்கிடமாய்.
மற்றுமொரு தெய்வம் Kishore Lokhande. இவர் அங்கே இடிந்து கிடந்த கட்டட பாகங்களை நீக்கும் பணியில் இருந்தார். அவர் தான் அதற்கிடையே சிக்கிக் கொண்டிருந்த மனிதர்களை/மனித உடல்களை மீட்க உதவி உள்ளார். 24வயது இளைஞன். 36மணி நேரம் தொடர்சியாக அந்த JCB மெஷினில் அமர்ந்து உழைத்திருக்கிறார். மெஷினில் ஏறிய 26மணி நேரங்களுக்குப் பின் தான் முதன் முறையாக கீழே இறங்கி இருக்கிறார். நாலைந்து முறை இயற்கையின் அழைப்புக்கு இறங்கியது தவிர மீதி நேரமெல்லாம் மெஷினிலேயே. இவரது உதவியால் ஒரு நாலு வயதுக் குழந்தை உயிரோடு மீட்கப்பட்டிருக்கிறது.
மறு நாள் அங்கு குடி இருந்தவர்கள் அந்த கட்டட சிக்கல்களுக்கு நடுவே தன் வீட்டில் வைத்திருந்த பாஸ்போர்ட், ஆதார், பாங்க் பாஸ்புக் இன்னும் எத்தனை விலை உயர்ந்த பொருட்கள் நம் வீடுகளில் வைத்திருப்போம். அதில் ஏதாவது கிடைக்காதா என குப்பையைக் கிளரும் கோழிகளாய் சுற்றி வந்தது பரிதாபமாய் இருந்திருக்கிறது. ஒரு நிமிடத்தில் போட்டிருக்கும் உடைகள் தவிர வேறெதுவும் இல்லாதவர்களாகிப் போனார்கள்.
இது நடந்த அபார்ட்மென்ட்டின் பெயர் "Tarique Garden" New Mumbai. இந்த தெய்வங்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்கள். இவர்களால் தான் இன்னும் பூமி சுற்றிக் கொண்டிருக்கிறது.
No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!