தனிமை
முதியவர்க்கு மட்டுமல்ல தனிமை
பெரும்படை கொண்டு முன்னேறும் முரட்டு பெருவேந்தனுக்கு தன் பாதிப்படை அழியும் போது கிளம்பும் ஒரு தனிமை.
அப்பப்பா அம்மம்மா பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி என கூட்டுக் குடும்பமாய் வாழுமிடத்தில் ஒரு குடும்பம் தனித்துப் போனாலும் கிளம்பும் ஒரு தனிமை.
தனிக்குடும்பமாகவே இருந்தாலும் ஒரு பெண் பிள்ளை திருமணமாகிப் போனதும் கிளம்பும் ஒரு தனிமை.
திருமணமான பெண் பிரசவத்துக்கு வந்து திரும்பும் போது பேரப் பிள்ளைகளின் அழு குரல் நின்று கிளம்பும் ஒரு தனிமை.
பிள்ளைப் பிராய பள்ளித் தோழி ஒருத்தி தந்தையின் வேலை மாற்றத்தால் பிரிந்து போனால் கிளம்பும் ஒரு தனிமை.
இறுதி வரை துணையிருப்பேன் என்று கரம் பிடித்த கணவனோ மனைவியோ நடு வழியில் தவிக்க விட்டு பிரிந்து போனாலோ , இறந்து பிரிந்தாலோ கிளம்பும் ஒரு தனிமை.
இவ்வளவுக்கும் பின் தான் பெற்ற பிள்ளைகள் வரவேயில்லையே என முதுமையில் கிளம்பும் ஒரு தனிமை.
ஆனால் நாம் முதுமையின் தனிமைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து துவண்டு போகிறோம்.
துவண்டு போகும் நேரத்தில் நம்மை தூக்கி விடவே ஆன்மீகம். நான் மேலே சொன்ன தனிமையில் வாடும் வகையினருக்கு நாம் துணையிருப்போம். மீண்டு வர கரம் கொடுப்போம்.
No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!