27 September, 2023
நிழல் இளவரசி ஒரு மொழி பெயர்ப்பு நாவல். நாம் காதல் இணையாக ஷாஜகானையும் மும்தாஜ் ஐயும் தான் அடையாளப்படுத்திக் கொண்டு இருக்கிறோம். ஆனால் இந்த கதை ஷாஜகானின் மகள் ஜஹனாராவும் நஜ்பத்கானும் கொண்ட காதலை ஊடுபாவாக கொண்டது.
மும்தாஜ் இன்னொருவனின் மனைவி என்றதுமே அவர்கள் காதலின் தீவிரம் வலு இழக்கிறது. இருந்தும் தாஜ்மஹால் ஒரு வரலாற்று சின்னமாய் இருந்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. ஆனால் ஜஹனாரா தன் பாட்டி இருக்கும் இடம் சென்று அங்கு பெர்ஷிய நாட்டு கலை வடிவில் அமைக்கப்பட்ட சமாதியை பார்த்து அதை அடிப்படையாய் வைத்து தாஜ்மஹல் கட்டும் போது பல யோசனைகளை சொல்லியதாக படிக்கும் போது அவளது பங்கு சரித்திரத்தில் பெண் என்பதால் மறைக்கப்பட்டதோ என ஐயம் எழுகிறது.
நஜ்பத்கான் மேல் ஆசை கொண்ட ஜஹனாராவின் தங்கை அவள் மேல் உள் ள நல்லெண்ணத்தை அழிப்பதற்காக தனது அக்காவிற்கும் அப்பாவிற்குமே தொடர்பு இருப்பதாக வதந்தி பரப்புவதை பார்க்கும் போது இன்று மட்டுமல்ல என்றுமே பெண்ணுக்கு பெண்ணே எதிரி என்று தோன்றுகிறது.
நஜ்பத்கானுக்கு ஏற்கனவே இரண்டு மனைவிகள் இருந்தாலும் ஜஹனாராவின் மேல் கொண்ட அன்பில் மிகவும் நேர்மையாய் இருப்பதும் அவள் அழைத்தால் மட்டுமே அவளைச் சென்று பார்ப்பதும் , யாருமறியாமல் பெற்றெடுத்த அவர்கள் மகனை தான் பொறுப்பெடுத்து வளர்ப்பதும், தந்தையின் விருப்பத்திற்கிணங்க திருமணமே செய்யாமல் அரச காரியங்களில் அவர் இறுதி காலம் வரை அவருடனே இருப்பதும், தன் மேல் மிகுந்த அன்பு காட்டும் ஔரங்கசீப்பின் போக்கு பிடிக்காத காரணத்தாலேயே அவன் எவ்வளவு வற்புறுத்தியும் அவனோடு போகாமல் இருக்கும் போதும் ஜஹனாரா மேல் நமக்கு அன்பு அதிகரிக்கிறது.
எனக்கு மிகவும் பிடித்து படித்த ஒரு நாவல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!