27 December, 2024
முத்தச்சன் பாகம் 1
முத்துவுக்கு காலை யிலிருந்தே மனது நிலை க ொள்ளாமல் தவித்துக்
க ொண்டிருந்தது. அந்த சாவுச் செ ய்தியை கே ட்காமலே இருந்திருக்கலாம்.
கே ட்டாகி விட்டது. ப ோய் அவன் முகத்தில் கடை சி முழி முழித்திருக்கலாம்.
அதுவும் க ொர ோனா சாவு என்பதால் முடியாமல் ப ோய் விட்டது. மெ ல்லவும்
முடியாமல் துப்பவும் முடியாமல் துக்கம் நெ ஞ்சுக் குழியை அடை த்துக்
கிடக்கிறது.
ராபர்ட் அரசுப் பள்ளியில் முத்துவ ோடு படித்தவர். பள்ளி கல்லூரி என இருவரும்
ஒன்றாகவே பயணம் செ ய்தார்கள். இருவருமே ல ோயர் மிடில் கிளாஸ் வகுப்பை
சே ர்ந்தவர்கள் ஆதலால் ஈக ோ இல்லாமல் பழக முடிந்தது. ராபர்ட்க்கு
ஸ்ப ோர்ட்ஸ் பாடி. வாட்ட சாட்டம். வகுப்பில் மாணவர்களை உயர வரிசை யில்
நிறுத்தினால் முத்து முதல் மாணவன் ராபர்ட் கடை சி மாணவன். ஆனால்
எப்படிய ோ இருவருக்கும் நெ ருக்கமான நட்பு.
ராபர்ட்டுக்கு உடல் வலு இருந்தாலும் மனம் பலவனீ மாயிருந்தது. அதுவே
அவருக்கு க ொர ோனா வந்து விட்டது என்று தெ ரிந்ததும் சாவின் விளிம்பில்
க ொண்டு ப ோய் நிறுத்தி விட்டிருக்கலாம். ஆனால் இரும்பு மனம் படை த்த
முத்துவ ோ காலை யிலிருந்து ஆடிப் ப ோய் தான் இருக்கிறார். இருவருக்கும்
வயது எழுபதை நெ ருங்கி விட்டிருந்தது. அல்ப ஆயுசில் ப ோகவில்லை . ஆனாலும் மனம் ஏன் இப்படிக் கிடந்து தவிக்கிறது. அடுத்து தன் மரணம் தான ோ?
தான் தயாராகிக் க ொள்ள வே ண்டும ோ? மனை வி என்ற ோ அவரை நிர்கதியாக்கிப்
ப ோயிருந்தாள். நடு வயதில் மனை வியை இழந்த அவரை மறுமணம் செ ய்யச்
ச ொல்லி பலரும் வற்புறுத்தினாலும் தன் ஒரே மகனை நல்லபடியாக வளர்க்க
தான் தனியாய் இருப்பதே சிறந்தது என்று முடிவெ டுத்து இருந்தார்.
அந்த மகனும் அப்பாவின் சம்மதம் இன்றியே ஒரு மலை யாளப் பெ ண்ணை
திருமணம் செ ய்து பாம்பே ப ோய் பத்த ொன்பது ஆண்டுகளாகிறது. அதன் பின்
தனி மனித வாழ்க்கை தான். காலை யிலே யே தனக்கு தயாரிக்கும் ப ோதே
ராபர்ட்டுக்கும் சே ர்த்து ஒரு காஃபி கலந்து விடுவார். ராபர்ட் வரும் வழியில்
என்ன கிடை க்கிறத ோ அதை வாங்கி வருவார். ரெ ண்டு பே ரும் காஃபி
குடித்தபடியே நாட்டு நிலவரம் நகர நிலவரங்களை அலசுவார்கள். அவர்
கிளம்பிய பின் அன்று தான் சாப்பிடுவதற்கு தே வை யானதை தயார் செ ய்து
விடுவார். பின் பகல் முழுவதும் தனக்கு பிடித்த காரியங்களை செ ய்வதால்
அவருக்கு அந்த ஒற்றை வாழ்க்கை சலிக்கவே இல்லை .
இன்று தான் ஏன ோ எதை ப் பார்த்தாலும் யாரை ப் பார்த்தாலும் சலிப்பாகவே
வருகிறது. டீவி செ ய்திகளும் சலிப்பை அதிகரித்ததால் டீவியை ஆஃப் செ ய்து
கண்களை மூடி தன் கை யை நெ ற்றியில் வை த்தபடி சாய்ந்தார்.
நினை வு ராபர்ட்டை சுற்றியே ஓடியது. அன்பாகக் கவனித்துக் க ொள்ளும்
மனை வி, திருமணமான மகன் அவன் மனை வி குழந்தை , திருமணமே
வே ண்டாமெ ன இருக்கும் மகள், ஒரு விதவை த் தங்கை என வடுீ நிறை ந்து
மனிதர்கள். மனிதர்கள் நிறை ந்த வடுீ . அத்தனை பே ரும் பாதுகாப்பாக இருக்க
வே ண்டுமே என்ற நினை ப்பில் எல்லா காரியங்களுக்கும் அவரே வெ ளியே ப ோய்
ப ோய் வந்ததில் தான் இந்த நிலை மை .
அலை பே சி ஒலிக்க திடுக்கிட்டு எழுந்தார். பதிவு செ ய்யாத எண்ணிலிருந்து
அழை ப்பு. ஒரு ந ொடி எடுக்க வே ண்டுமா என்று ய ோசித்தவர் காதில் அலை
பே சியை வை த்து "ஹல ோ" என்றார். மறு முனை யில் பதிலில்லை . தன் குரலில்
க ொஞ்சம் கடுமை கூட்டி மறுபடியும் "ஹல ோ" என்றார். ஆழ்கிணற்றிலிருந்து
எழுந்தது ப ோல் மெ ல்லிய விம்மல் ஒலி. அமை தியாய் இருந்தார். பயமாக
இருந்தது. "முத்தச்சா!" என்றது ஒரு மலை யாள மணத்த ோடு ஒரு பெ ண் குரல்.
கை நடுங்கியது. தந்தை யும் மகனும் வை ராக்கியத்த ோடு எத்தனை ஆண்டுகள்
பே சாமல் இருந்து விட்டார்கள். பிறந்த குழந்தை யை தூக்கிக் க ொண்டு
வந்தவர்களை வட்ீ டுக்குள்ளே யே வர விடாமல் விரட்டி அடிப்பதுக்கு
முன்னாலாவது சில முறை ப ோனில் பே ச முயற்சி செ ய்தான். அதன் பின்
அவனும் தந்தை என்ற ஒருவர் தன் வாழ்வில் இருந்ததை யே மறந்து ப ோனான்.
இப்ப ோ மனை வியை விட்டு பே ச முயற்சிக்கிறான ோ? அதுவும் ஏன் இந்த இரவு
வே ளை யில்? இந்த கை வே று ஏன் இப்படி நடுங்கித் த ொலை கிறது? மறுபடியும்
பெ ண் குரல் "முத்தச்சா உங்க ம ோன் க ொர ோனா வந்து மரிச்சுப் ப ோயி. மூணு
திவசம் ஆஸ்பத்திரியில இருந்துச்சு. நிங்கள்ட பறை யே ண்டானு கரை ஞ்சு."
அழுது க ொண்டே தமிழும் மலை யாளமும் கலந்து ஒரு துக்க சே தியை ச ொல்லி
முடித்தாள். ஒரே நாளில் இரண்டாவது இடி. ஒன்றும் ச ொல்லாமல் காலை கட்
செ ய்தார். கண்களிலிருந்து கண்ணர்ீஊறி ஓடத் த ொடங்கியது.
அந்த எண்ணை மருமகள் என்று சே வ் செ ய்தார். என்ன ஒரு மடத்தனம்
செ ய்திருக்கிற ோம். "இழந்து விடுவ ோம் என்பது தெ ரிந்திருந்தால் இத்தனை
ஆண்டுகள் வை ராக்கியமாக பே சாதிருந்திருப்ப ோமா? என் கண்ணிலே யே
முழிக்காதே !" என்றது அப்படியே பலித்து விட்டதே . நெ ஞ்சுக் குழியில் அடை த்துக்
கிடந்த துக்கம் ராபர்ட்டின் மரணத்தால் என்று நினை த்த ோமே . என் மகன்
இறக்கும் நே ரத்தில் அவலமாய் அபயமாய் க ொடுத்த குரலல்லவா என் நெ ஞ்சுக்
கூட்டில் இடியாய் இறங்கி இருக்கிறது. என்ன செ ய்யப் ப ோகிறே ன்" என்று. அலமந்து ப ோனார். ஒரு துக்கத்தால் வலுவிழந்த மனம் அடுத்த துக்கத்தில்
இறுகிப் ப ோனது. எந்த ந ொடியில் யாருக்கு மரணம் என்பது அறிய முடியாத
ரகசியமாய் இருக்கிறது. இருக்கும் வரை என்னை ச் சுற்றி இருப்பவர்களிடம்
அன்பை மட்டுமே காட்ட வே ண்டும். தான் என்னும் அகந்தை யை தலை யை ச்
சுற்றி எறிய வே ண்டும் என முடிவெ டுத்தார்.
24 December, 2024
சதியின் கோரிக்கை.
*****
வேறெதுவும்
தேவையில்லை.
வேலைக் கனமென்னை
வெலவெலக்க
வைக்கும் போதோ
கற்பனையாய்
வியாதி எதுவும்
கதறி அழ
வைக்கும் போதோ,
உறக்கம் வராமல் நான்
உருண்டு புரண்டு
வரும் போது,
இறுக்கமாய் அணைத்து
நானிருக்கிறேன்
என்ற நம்பிக்கையை
தானமாய் தந்து விடு.
அன்னை மடி
கதகதப்பை
அள்ளி நீயும்
தந்து விட்டால்
ஆயுளுக்கும்
நீங்க மாட்டேன்.
கொஞ்சம் நான்
பிழைத்தும் போவேன்.
23 December, 2024
நாவலின் பெயர் : உடைந்த நிழல்.
ஆசிரியர் : பாரதி பாலன்.
சந்தியா பதிப்பகம்.
விலை. : ரூ. 120.
முதல் பதிப்பு : 2005.
இந்த ஆசிரியரை எனக்கு அறிமுகப்படுத்திய முதல் நாவல்.
தினமணி கதிரில் தொடராக வந்து பின் புத்தகமாகி இருக்கிறது.
" மாம்பூவும் , வேப்பம்பூவும் , தும்பைப் பூவும் பூவிலா சேர்த்தியாக இருக்கிறது. ஆனால் அடுக்கடுக்கான அதன் கட்டுடலும் நெகிழ்வும் வளவளப்பும் எத்தனை அழகு!! இதையெல்லாம் பார்க்கத் தனி கண் வேண்டும். மனது வேண்டும். என்று ஒரு முறை நரேஷ் முத்தையா சொன்னது இப்போது மனதில் படுகிறது." இது ஆசிரியர் பாரதிபாலன் தன் உரையில் கூறியிருப்பது. இத்தகைய பூக்களைப் போன்றவர்களே கதையின் மாந்தர்கள்.
கதை நண்பர்களான இரு இளைஞர்களைப் பற்றிய கதை. ஒருவன் காந்தி ராஜன். நேர்மை, உண்மை, போன்ற எதைப்பற்றியும் நினைக்காமல் லௌகீக வெற்றிகளை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு மனம் போன போக்கில் வாழ்பவன். ஆனால் நண்பனுக்கு உதவத் தன்னாலானதைச் செய்யத் தயங்காதவன். தன்னைச் சுற்றி இருப்பவர்கள் தன்னை மிக முக்கியமானவனாகக் கருதக் கூடிய அளவில் பேசத் தெரிந்தவன். அவன் வாழ்வில் நடப்பவை எல்லாம் சிறந்தனவாகவே இருக்கிறது.
அடுத்தவன் நரேஷ் முத்தையா. வேலை தேடி மாநகரம் வந்து காந்தியோடு இணைந்தவன். சரி, தவறு என்ற இரண்டுக்கும் நடுவில் அல்லாடிக் கொண்டு இருப்பவன். நியாயமற்று காந்தி செய்யும் பல காரியங்களில் தன்னை இணைத்துக் கொள்வதை விரும்பா விட்டாலும் வேறு வழியின்றி இணைந்து செல்பவன். தூசி படாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறா? நாம் தோற்றுப் போய் விட்டோமோ? காந்தி தான் புத்திசாலியோ என்ற குழப்பத்துடனே தனது வாழ்வைக் கழிப்பவன். காந்தியிடம் சிரித்துப் பேசும் பெண்களைப் பரிதாபமாகப் பார்ப்பான். "சாக்கடையில் விழப் போகிறது . அதற்கு ஏன் இத்தனை அலங்காரம் " என்று நினைப்பான்.
காந்தி ராஜன் தொடர்பு வைத்திருக்கும் பெண் ஜெயந்தி அவருடைய அலுவலகத்திலேயே பணிபுரிபவள். பணக்காரப் பெண்ணை திருமணம் செய்த பின்னும் அந்தத் தொடர்பை மிக தந்திரமாகத் தொடர்ந்து கொண்டு இருக்கிறான்.
பல இடங்களில் தமிழ் மிக அழகாக நடமிடுகிறது. நரேஷ் ஜெயந்தியின் புருஷன் மீது பரிதாபம் கொள்கிறான். அதைச் சொல்லும் போது " திருட்டு போனது தெரியாமல், திருடியவன் யார் என்று அறியாமல், அந்த ஆத்மா அலையப் போகிறது. பல நேரங்களில் அந்த ஆத்மாக்கள் எரிந்து சாம்பலான பின்னும் அறியப்படாமலே சாம்பலோடு சாம்பலாக கரைந்து விடுகிறது. " ஒரு பெண் செய்யும் தவறு பற்றி கடைசியாக அறிந்து கொள்பவன் அவளுடைய கணவனாகவே இருக்கிறான் என்று சொல்லப்படுவது இந்த இடத்தில் நினைவுக்கு வருகிறது
ஊரில் லதா என்னும் தன் உறவுக்கார பெண்ணை காதலிக்கிறான் நரேஷ் . ஆனால் அந்த காதலை அந்தப் பெண்ணிடமே கூட வெளிப்படுத்தும் துணிவு இல்லை. ஆனால் அந்த காதல் அவனை நேர்மையாளனாக வார்த்து எடுக்கிறது. அவள் வேறு ஒருவனைத் திருமணம் செய்து விட்ட பிறகும், அவளைத் தூக்கி எறிந்து விடவும் முடியாமல், சேர்த்து வைத்துக் கொள்ளவும் முடியாமல் மூச்சு திணறுகிறது அவனுக்கு.
இவ்விதம் நான்கு வித்தியாசமான கதாபாத்திரங்களை கொண்டு அழகாகப் பின்னித் தாழம்பூ தைத்தது போல் "உடைந்த நிழல்" கதை நமக்கு குளிர்ச்சியை தருகிறது. நல்லதோர் அறிமுகம்.
Subscribe to:
Posts (Atom)