சதியின் கோரிக்கை.
*****
வேறெதுவும்
தேவையில்லை.
வேலைக் கனமென்னை
வெலவெலக்க
வைக்கும் போதோ
கற்பனையாய்
வியாதி எதுவும்
கதறி அழ
வைக்கும் போதோ,
உறக்கம் வராமல் நான்
உருண்டு புரண்டு
வரும் போது,
இறுக்கமாய் அணைத்து
நானிருக்கிறேன்
என்ற நம்பிக்கையை
தானமாய் தந்து விடு.
அன்னை மடி
கதகதப்பை
அள்ளி நீயும்
தந்து விட்டால்
ஆயுளுக்கும்
நீங்க மாட்டேன்.
கொஞ்சம் நான்
பிழைத்தும் போவேன்.
No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!