Bio Data !!

24 January, 2025

வட இந்தியப் பெண்கள் பொதுவாகவே நன்றாகத் தங்களை அலங்கரித்துக் கொள்வார்கள். வீட்டு வேலைக்கு வரும் பெண் கூட லிப்ஸ்டிக் இல்லாமல் ஒரு நாள் கூட வர மாட்டாள். அதற்கு வீட்டு ஆண்களும் ஒத்துக் கொள்வார்கள். நம்ம பக்கத்துல வயிறு தெரியாம சேலை கட்டு, ஷால் போடாம வெளியே போகாதே எனப் பல கட்டுப்பாடுகள் பார்க்கும் போது நான் நினைத்தேன் "பரவாயில்லையே, ஸ்லீவ்லெஸ் ப்ளவுஸ், லோ கட் நெக் எனப் போட்டு அவர்கள் ரொம்ப சுதந்திரமாக இருக்கிறார்களே என்று. நான்கு வருடங்கள் வட இந்தியாவில் இருந்தப்போ தான் தெரிந்தது அவர்கள் சுதந்திரம் ஆடை அளவில் தான் என்று. ஆணை மகிழ்விக்க பெண்கள் அழகாக இருக்கணும் அதைத் தாண்டி அவர்கள் சிந்திப்பதை அனுமதிக்கக் கூடாது என்ற எண்ணம் கொண்ட பலர் இருந்தனர். இப்போ அதுக்கும் வேட்டு வச்சிடுவாங்க போலிருக்குது. அலகாபாத் கும்ப மேளாவில் அழகிய ஐஸ்வர்யாக் கண்களுடன் பாசி மணி விற்றுக் கொண்டிருந்த பெண்ணை ட்ரென்டாக்கி விட்டு , போறவங்க வாரவங்க எல்லாம் வீடியோ எடுத்து, அவர்கள் வீட்டு ஆண்கள் அந்தப் பெண்ணை அங்கிருந்து அழைத்துச் செல்லும் படி செய்து விட்டார்கள் . இனி அந்த முகத்தில் பழைய சிரிப்பு வர அந்தப் பெண் எவ்வளவு போராட்டங்களைக் கடக்கணுமோ?? விட்டிடுங்க. அழகிய விஷயங்களை ரசிப்பதோட நிறுத்திக்கோங்க. அடுத்த கட்டத்துக்குப் போய் அவர்களை உலகப் பிரபலங்கள் ஆக்கி விடும் போது அவர்களுக்கு உள்ள சுதந்திரமும் பறி போகலாம்.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!