Bio Data !!

10 November, 2009

நாயும் நாய் சார்ந்த நினைவுகளும் !!

எனக்கு ரொம்ப நாளா நாய் வளக்கணும்னு ஆசை. ஆனா அது செல்லா காசைப் போலவே செலவாகாமல் என்னிடமே இருந்து விட்டது. ஆனாலும் நாய் சார்த்த எனது நினைவுகளில் நவ ரசமும் உண்டு. சிலதை எடுத்து விடுறேன்.
நான் school ல படிக்கிறப்போ பார்வதி பார்வதி னு ரெண்டு friends உண்டு. அதுல ஒரு பார்வதி வீட்ல ஒரு பெரிய அல்சேஷன் இருக்கும். அவங்க வீட்டுக்கு நான் போகும் போதெல்லாம் நான் ஓட அது விரட்ட, அது விரட்ட நான் ஓடனு ஒரே கபடி ஆட்டம் தான். இதுக்கு எதாவது technique கண்டு பிடிச்சே ஆகணும்னு எனக்கு பலத்த யோசனை. நான் school ல இருந்து எதாவது mood out ஆகி வந்தா எங்க அப்பா என் தலையை பொதுவா வருடி விடுவாங்க. கொஞ்ச நேரத்தில கூல் தான்.அது work out ஆகுமான்னு யோசிக்கும் போது,
"ஏய்! அப்படியே நில்லுப்பா.ஒண்ணும் செய்யாது" இது பார்வதி. "அப்படிய்ய்ய்ய்ய்ய்யே நிக்றதா!"
அப்பா ஸ்டைல் பின் தொடர்ந்து பார்ப்போம்னு முடிவெடுத்து மெதுவா தலை கிட்ட கையை கொண்டு போனேன். விரல் லேசா கழுத்துக்கு பக்கத்தில படறது. சரி எதோ கிடைக்கிற இடத்தை தடவி விடுவோம்னு மனசை கல்லாக்கி கிட்டு லேசா தடவி விட்டுட்டேன். (அப்பாடா! அதற்குள் இருக்கிற மிருகம் அடங்கி விடுமா?)
எதோ magic போல கொஞ்சம் அடங்கின மாதிரி இருந்தது. நிஜமா? கற்பனையா? இன்னும் கொஞ்சம் வருடிக் கொடுக்க, அய்ய்ய் ! அடங்கி விட்டது அல்சேஷன். அப்படியே தன் தலையை லேசா என் கால்களில் சாய்த்து...
நான் கைப் பிள்ளையை அலுங்காமல தொட்டிலில் போடுறது போல மெதுவா நகர்ந்து ஒரு நாற்காலியை மெதுவா இழுத்து உட்கார்த்திட்டேன். வருடி கொடுத்த கை வருடிய படியே. அப்படியே அது தன் தலையை என் முழங்காலில் சொகுசா சாய்த்து கண்கள் சொருக அப்படியே படுத்து விட்டது.
இப்போ எனக்கு புதுசா பிரச்சினை ஆரம்பம் ஆயிடுச்சு. தடவி கொடுத்த கையை எடுத்தா உர்ர்ர்ர்ர்றிந்குது. இது வரைக்கும் பார்வதியை ஒரு ஜான்சி ராணி போல லுக் விட்டுட்டு இருந்த நான் இப்போ பரிதாபமா பார்க்க ஆரம்பிச்சேன்.
"என்னடி இவளே எதாவது செய். இப்படியே எவ்வளவு நேரம் நான் இருக்கிறது."
"ஹேய்! டைகர் come here" " நீ அப்படியே இரு " முன்னதை டைகர் இடமும் பின்னதை என்னிடமும் சொன்னாள். (அது என்னங்க எல்லா வளர்ப்பு பிராணிகளுக்கும் english நல்லா புரியுது?)
அதுவானா கண்ணு சொருக காதுகளை விறைத்த படிஇந்த சொகத்தை விட்டிட்டு போறதா இல்ல இப்படியே continue செயறதானு ஓர கண்ணால அவள பார்க்குது.
"Tiger ! come here" மறுபடியும் பார்வதி
தன் எஜமான விசுவாசதூடே அவளிடம் ஓடிப் போய் சமத்தா வாலை ஆட்டிகிட்டு நின்ன நிமிஷம் என்னை zoom பண்ணா நான் எங்க வீட்ல நின்னேன்.
அப்பறம் இந்த technique ஐ அடிக்கடி முயற்சி பண்ணி உடமைக்காரியை விட நான் இப்போ ரொம்ப க்ளோஸ் ஆக்கும்.
நினைவுகள் தொடரும்....

8 comments:

  1. நல்லா எழுதி இருக்கீங்க.

    //அது என்னங்க எல்லா வளர்ப்பு பிராணிகளுக்கும் english நல்லா புரியுது?)
    //
    ரொம்ப ரசித்தேன்.

    ReplyDelete
  2. //நினைவுகள் தொடரும்....//
    வெரி குட்..நினைவுகள் தொடரட்டும்...

    (நான் சிங்கம் வளர்க்கலாமுன்னு இருக்கேன்...
    ஒருதடவ வீட்டுக்கு வாங்களேன்..Plzz..)
    ஹி.ஹி..ஹி..

    ReplyDelete
  3. நரசிம் sir
    திடீர்னு comments காணாப் போயிருச்சா அதான் testing.
    உங்கள் வாழ்த்து கிடைத்ததில் தன்யனானேன். நன்றி
    சிவாஜி
    சிங்கம் வளருங்கள் பெயருக்கு பொருத்தமா இருக்கும்
    நம்ம range ஏ தனி.

    ReplyDelete
  4. // தன் எஜமான விசுவாசதூடே அவளிடம் ஓடிப் போய் சமத்தா வாலை ஆட்டிகிட்டு நின்ன நிமிஷம் என்னை zoom பண்ணா நான் எங்க வீட்ல நின்னேன். //

    எனக்கும் இந்த மாதிரி அனுபவம் உண்டு.. எனவே காட்சியை உணர முடிந்தது.. :)

    ReplyDelete
  5. நன்றி மணிகண்டன்
    அடுத்து வருது பாருங்க terror பதிவு
    கொஞ்சம் late ஆகிடுச்சு நன்றி சொல்ல
    அன்புடன்...

    ReplyDelete
  6. enakku Naaiy-navey romba bayam.. Because, enna naai kadicha anubavam irukku enakku.. Naaiya nan 10 adi thalli poi thaan iruppen ..ungal ezhuthulkkal nalllaa irukku...

    ReplyDelete
  7. thank u lalitha, i welcome u to my blog
    happy u r reading from my early posts. enjoy

    ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!